கண்முன்னே கற்பழிப்பு. உதவ முடியாமல் திரும்பிய என் நண்பன்

முன்னுரையாக சிலவரிகள்


டெல்லி கற்பழிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிக்கு கொண்டிருக்கும் இந்த வேளையில், அதிரடியாக சென்ற வியாழன் அன்று (20/12/12) தூத்துக்குடி அருகே புனிதா என்ற 7ம் வகுப்பு படிக்கும் மாணவி கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டது பேரதிர்ச்சியாக உள்ளது.

பேருந்து வசதி இல்லாததால் பள்ளிக்கு காட்டு வழியே நடந்து செல்லும் போது இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. டெல்லி சம்பவத்திற்கு இந்திய பாரளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த அரசியல் கட்சிகள் இந்த அப்பாவி பெண்ணிற்கும் நீதி கிடைக்க என்ன செய்யப் போகின்றனர் எனத் தெரியவில்லை. இந்த செய்தி பெரிதாக ஊடகங்களால் முன்நிறுத்தப்படவும் இல்லை. முழுவிவரம் http://www.tutyonline.net/view/31_42160/20121221115331.html.

(ஏழை-பணக்காரன், கிராமம்-நகரம், படித்தவர்-படிக்காதவர், தென்னிந்தியா-வடஇந்தியா என பாகுபாடில்லாமல் நமது சட்டம். அரசியல்வாதிகள், ஊடகங்கள் செயல்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.)

இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் திருநெல்வேலியில் ராணுவத்தில் வேலைபார்க்கும் ஒரு நபர் தனது காதலை ஏற்காததால் ஒரு கல்லூரிப் பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். அதே போல் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் காதலை ஏற்றுக்கொல்லாத பெண்களின் மீது தொடர்ந்து ஆசிட் வீச்சு அரங்கேறிக்கொண்டுதான் உள்ளது. இந்த நிகழ்வுகள் யாவும் ஊடகங்கள் மூலம் நாம் அறிந்து கொண்டது. ஆனால் ஊடகக்களுக்கு வராமல் முடங்கிப்போன சம்பவங்கள் ஏராளம்.

இது போன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பார்க்கும்போது, என் நண்பர் வழியாக நான் அறிந்துகொண்ட ஒரு அனுபவத்தை உங்களிடம் பகிரவே இந்த பதிவை எழுதுகிறேன். பெண்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்கவும் வேண்டுகிறேன். வாருங்கள் அந்த அனுபவத்தைப் பார்ப்போம்.


கண்முன்னே கற்பழிப்பு


நான் 2008-2009 களின் பெங்களுர் ராஜாஜிநகர் 6 வது பிளாகில் உள்ள IT அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு அருகேயே நானும் எனது நண்பரும் விடுதியில் ஒரே அறையில் தங்கி இருந்தோம் (அந்த விடுதிக்கு போன பிறகுதான் அவர் நண்பரானார்).ரெண்டு பேருக்கும் ஒரே கட்டிடத்தில் அலுவலகம் ஆனா வேற வேற கம்பெனி. நம்ம நண்பர் பெரும்பாலும் மாசத்துல ரெண்டு முறை விமானத்த புடிச்சு மும்பை, கல்கத்தா அப்படின்னு ட்ரிப் போயிடுவார். அவரோட வேலை அப்படி.

ஒரு நாள் இப்படித்தான் மும்பை போய்விட்டு திரும்பினார். ஏர்ப்போட்டில் இருந்து பேருந்து நிலையம் வந்து பிறகு அங்கிருந்து ஆட்டோ பிடிச்சு ராஜாஜி நகர் வந்து கொண்டிருந்தார். அப்போது சுமார் இரவு ஒரு மணி இருக்கும். அந்த வருடம் பெங்களூருக்கு சரியான மழை. அன்னைக்கின்னு பாத்து கொடூரமா மழை பேஞ்சுகிட்டு இருந்தது. எல்லா இடத்திலும் மின்சாரம் சுத்தமா நிறுத்தப்பட்டது. வீதில யாரையும் பாக்கமுடியல. கடைகள் எல்லாம் முழுவதும் அடைக்கப்பட்டது. .

இப்படியான ஒரு நாளில் தான் ஆட்டோ பிடிச்சு விடுதிக்கு வந்து கொண்டிருந்தார். ராஜாஜிநகர் ஏரியா தெரிஞ்சவங்களுக்கு ஆறாவது பிளாக் போறதுக்கு முன்னாடி ஒரு பெரிய பாலம் இருப்பது தெரிந்திருக்கும். அந்த அடைமழையில் அவர் அந்த பாலத்தை நெருங்கிய போது ஒரு பெண்ணின் அலறல் குரல் கேட்டிருக்கிறது. அதிர்ச்சியோடு திரும்பிப்பார்த்த போது இரண்டு ஆட்டோக்கள் பாலத்தின் அடியே நின்று கொண்டிருந்தது.

அந்த பெண் சில ஆண்களின் கைகளின் பிடியில் தனது கை கால்களை உதறிக்கொண்டிருந்தாள். சத்தம் பலமாக கேட்டும், அங்கு உதவ யாருமில்லை. அப்போது அவள் கூட்டமாக சேர்ந்து சில மிருகங்களால் கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். எனது நண்பர் கொஞ்சம் பயந்த சுபாவம் தான். இருந்தாலும் அவர் வந்த ஆட்டோ ஓட்டுனரிடம் வாங்க உதவலாம் பாவம் அந்த பெண் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் இருபோன்ற சம்பவங்களை முன்பே அறிந்த ஆட்டோ ஓட்டுனர், வேணாம் சார். நெறைய பேரு இருக்காங்க. அதோட அவங்க எல்லாம் மோசமான ஆளுக. கைல ஆயுதம் எல்லாம் வச்சுருப்பாங்க என்று தனது குடுப்பநிலையை மனதில் வைத்துக்கொண்டு சொல்லி இருக்கிறார். ஆட்டோ அடைமழையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நண்பர் போலீஷை அழைக்கலாம் என அலைபேசியை எடுத்த போது, நெட்வொர்க் சிக்னல் சுத்தமாக இல்லை. அன்று மழையின் தாக்கம் அவ்வளவு.

நான் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தேன். எனது நண்பர் அந்த நள்ளிரவில் என்னை எழுப்பி இந்த சம்பவத்தை மிக வருத்ததோடு விவரித்தார். தன்னால் உதவமுடியாத நிலை கண்டு வருந்தினார். எனக்கு தூக்கம் போனது. அடுத்த ஒரிரிரு நாட்களுக்கு இந்த சம்பவத்தின் தாக்கம் இருந்தது. அடுத்த நாள் எனது அலுவலக நண்பர்களுக்கு இதைச்சொல்லி எனது பாரத்தை சற்று இறக்கிக் கொண்டேன்.

அந்த அப்பாவி பெண்ணின் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த சம்பவம் ஊடகங்களுக்கு போனதா என்றும் தெரியவில்லை. எந்தனை கனவுடன் வாழ்ந்தாளோ. சில நொடி இன்பத்திற்காக அவளை சீரழித்து விட்டது சில மிருகங்கள். இது போன்று உலகம் அறியாமல் போன கற்பழிப்புகள் எத்தனையோ..?

18 comments: Leave Your Comments

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பரே ..

   ---சற்றுமுன் செய்தி---

   டெல்லியில் மற்றொரு பயங்கரம்: ஃப்ளே ஸ்கூல் மாணவி பலாத்காரம்… பள்ளி தாளாளர் கைது

   நாகை: வீட்டில் தனியாக இருந்த 4-ம் வகுப்பு சிறுமி பலாத்காரம்- இருவர் கைது

   # இவர்களை சாகவிடாமல் அந்த உறுப்பை வெட்டிவிட்டு வாழ்க்கை முழுதும் அல்லல்படும் படியாக சட்டம் இயற்ற வேண்டும்.

   இப்படி நாகரீகமற்ற வார்த்தைகளை எழுதுவதற்காக என்னை மன்னிக்கவும். தொடர்ந்து வரும் இது போன்ற செய்திகளால் மனம் கனத்துப்போயுள்ளது.

   Delete
 2. காமம் இப்படி அரக்கர்களாகி விடுகிறதே மனிதனை! இதயத் தடுக்க என்னதான் வழி?

  ReplyDelete
  Replies
  1. மிகக் கடுமையான சட்டம் வேண்டும்.. அந்த சட்டத்தைப் பற்றி யோசித்தாலே இவ்வாறு செய்யத் தோன்றக்கூடாது.. வருகைக்கு மிக்க நன்றி முரளி சார் ..

   Delete
 3. அவர்கள் முகத்தில் ஆசிட் ஊத்தி யாரும் அவன் முகத்தை கூட பார்க்க கூடாது என்ற நிலைக்கு தள்ள வேன்டும்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக.. ஆனால் அவர்களின் உயிரை மட்டும் எடுக்கக் கூடாது.. செய்த பாவத்திற்கு அனைத்தையும் அனுபவித்து சாகவேண்டும்.. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

   Delete
 4. மிகவும் கொடுமையான விடயமே. இப்படியான சம்பவங்களை தயக்கம், அச்சத்தினால் நாம் நமது ஏரியாக்களில் கண்டு கொள்வதே இல்லை .. ஒருவேளை அந்த இடத்தில் அந்த பெண் நமது சகோதரி, காதலி, மனைவி, மகளாக இருந்தால் சும்மா போயிருப்போமா ? சொல்லுங்கள் .. ஆனால் யாரோ ஒருத்தி தானே என்ற எண்ணம் தானே.. உங்கள் நண்பரை குறை சொல்லவில்லை, பலரும் அப்படித் தான் உள்ளோம் ...

  பலாத்காரங்கள் பலவும் வெளியே வருவதே இல்லை, காரணம் கௌரவம், அச்சம் மற்றும் அலைக்கழிப்பு, அவமானம் என்பதால் பெண்கள் தமக்குள்ளேயே புதைத்துவிட்டு புழுங்கி புழுங்கி பைத்தியங்கள் ஆகிவிடுகின்றார்கள் ... !

  ஒரு தேசத்தில் வன்புணர்வுகள் அதிகரிக்கின்றன என்றால் அந்த நாட்டில் மீசை வைத்த ஆண்மகன்கள் குறைகின்றார்கள் என்பதைத் தான் காட்டும் .. பெண்ணை வன்புணர்வதும், வன்புணரப்படுபவளைக் காக்காமல் மௌனிப்பதும் கோழைத்தனமே.. !!!

  வன்புணர்வு செய்பவர்களைப் பிடித்து செக்ஸ் உணர்ச்சி வராத அளவுக்கு மருந்து கொடுத்து மலடாக்கி விட வேண்டும், அல்லது ஆணுறுவை நறுக்கிவிட வேண்டும் .. இது தான் நான் பரிந்துரைக்கும் தண்டனை.. அப்போது தான் அந்த நாய்கள் உணரும் .. ! மன்னிக்க தடித்த வார்த்தைகளுக்கு

  ReplyDelete
  Replies
  1. வரிகள் தடித்தாலும் உண்மைநிலை விலகவில்லை.. தங்களின் கருத்துக்களில் எனக்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை நண்பரே... வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

   Delete
 5. சட்டம் தண்டிப்பதற்கு அல்ல திருந்துவதற்கு என்ற நமது நாட்டின் கொள்கை பயன்படுத்தி கொள்ளும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை “காந்தியின்” கனவு நினைவாகது....
  தேசிய அவமானமாக கருதும்( டெல்லி கற்பழிப்பு )மாணவர்களுக்கு ஏன் புரியவில்லை அரசியல்வாதிகளின் ஊழ்ல்கள் ( தேச கற்பழிப்பு) அதைவிட கொடுமையானது.....

  ReplyDelete
 6. உண்மைதான் பிரவின்.. வருகைக்கு மிக்க நன்றி..

  ReplyDelete
 7. மனிதன் விலங்காகும்போதுதான் இவ்வாறாக நடக்கிறான்.இது போறவர்களை விலங்குகளோடு அடைத்து வைக்க வேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் :) .. வருகைக்கு நன்றி நண்பரே..

   Delete
  2. vilankukalodu avarkalai opitu vilankukalai asinka paduthatherkal

   Delete
 8. timesofindia.indiatimes.com/city/chennai/Danger-is-near-99-victims-in-Tamil-Nadu-knew-their-rapists/articleshow/17918753.cms

  ReplyDelete
 9. nakarankalil irukum ovoru kanamum narakamai than irukirathu...

  analum sila nalavarkal irukirarkal enta nambikaiyil kalathai kalzikirom....

  ReplyDelete
 10. திருநெல்வேலியில் ராணுவத்தில் வேலைபார்க்கும் ஒரு நபர் தனது காதலை ஏற்காததால் ஒரு கல்லூரிப் பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.- இந்த செய்தி உன்மைதான, ஏனென்றால் நான் இந்த சம்பவம் நடந்த கிராமத்தின் அருகே உள்ள மற்றறொரு கிராமத்தை சேர்ந்தவன். நான் அறிந்த வரை இது இருதலை காதல் என்றும். அந்த இளைஞன் மது அருந்துவதாக கூறி அந்த பெண்ணினின் மனதை பெற்ற்றோர்கள் மாற்றியதால் நடந்த விபரீதம் என்று அறிந்தேன். இதற்க்கு சரியான விளக்கம் தரவும்.

  ReplyDelete