Monday 24 December 2012

நவம்பர் மாதமும் நள்ளிரவு நேரமும்

பனித்துளிகள் சுற்றிவந்து
திரையிட்டது உனக்கு - இனி
பாசமுடன் முத்தமிட
தடையில்லை எனக்கு

அறைக்குள்ளே முழுநிலவாய்
அனுதினமும் இருந்தாய் - அந்த
பிறைநிலவும் ஜன்னல்வழி
எட்டிப்பார்ப்பதை யறிந்தாய்

முகப்பருவில் முத்தமிட்டு
மோட்சம் கண்டது விரல்கள் - உன்
அகம் கண்டு புறம் உண்டு
அன்பு கொண்டது விழிகள்

இமைரெண்டும் மூடிஎனை
இதழோடு இணைத்தாய் - நிதம்
பகலிரவு பாராது
பாசத்தாலே சிதைத்தாய் - உன்

உடைகளைய, இடைதெரிய
வெட்கம் கொண்டது விரல்கள் - இதை
அறிந்து உன்மேல் ஆசைகொண்டு
விழித்துக் கொண்டது சுவர்கள் - ஏவாள்

ஒரு பழத்தை ஊட்டிவிட்டு
மாற்றிவிட்டாள் உலகை - இங்கே
இரண்டு கையில் இருக்கையிலே
யார் சொல்வார் பதிலை ..!




9 comments:

  1. அழகான கவிதை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே.. கண்டிப்பாக உங்கள் பதுவைப் பார்க்கிறேன்..

      Delete

  2. \\இமைரெண்டும் மூடிஎனை
    இதழோடு இணைத்தாய் - நிதம்
    பகலிரவு பாராது
    பாசத்தாலே சிதைத்தாய் - உன்//
    நல்ல கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி கண்ணதாசன் சார்..

      Delete
  3. அழகிய கவிதை வரிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. செம பாஸ்....

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பாஸ் :)

      Delete
  5. அற்புதமான வரிகள் அகல் ......

    குறிப்பாக //உன் அகம் கண்டு புறம் உண்டு அன்பு கொண்டது விழிகள்//
    and
    //இங்கே இரண்டு கையில் இருக்கையிலே யார் சொல்வார் பதிலை// ..

    அழகு

    ReplyDelete