Sunday 10 August 2014

எதற்காக ஒரு மொழியும் கலாச்சாரமும் காக்கப்பட வேண்டும் ?

ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சேர்ந்த மக்கள், ஒரு வலுவான நேர்கோட்டில் உணர்வுகளால் பிணைப்பட்டிருப்பார்களேயானால், அது அவர்களுடைய மொழி, கலாச்சாரம், பண்பாடு என்ற நேர்கோடாக மட்டுமே இருக்க முடியும். எப்பொழுது அந்த மொழி, கலாச்சாரம் என்ற நேர்கோடு உடைக்கப்படுகிறதோ, அப்பொழுதே அவர்களுக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான பிணைப்பும் உடைக்கப்படுகிறது.

இப்படியான ஒரு சூழ்நிலையை உருவாக்கும்போது, அந்த நிலப்பரப்பைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக ஒற்றுமையாக இருக்கும் வாய்ப்பு குறைந்து இடைவெளி அதிகரிக்கிறது. அந்த நிலப்பரப்பு, மொழியைச் சேர்ந்த ஒருவனை அடித்தால் இன்னொருவன் வந்து கேள்வி கேட்கப்போவதில்லை என்ற நிலைமை உருவாகிறது.

இந்த இடைவெளியை உருவாக்குவதும், அதைப் பயன்படுத்திக்கொண்டு அந்த மக்களை ஆதிக்கம் செய்வதுமே வெளியிலிருந்து வருபவனின் முதல் குறிக்கோளாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆழ பயன்படுத்திய சூத்திரங்களில் இதுவும் ஒன்று என்பதை அறிந்தவர்கள், தங்கள் மொழியும் பண்பாடும் எவ்வளவு முக்கியம், அதைக் கட்டிக்காப்பது எவ்வளவு அவசியம் என்பதை உணர்வார்கள். இதை அறியாதவர்கள், இந்த மொழியைக் கட்டிக்கொண்டு அழுவதில் என்ன பயன் என்று பிதற்றுவார்கள்.

நமது மக்களில் ஒற்றுமையைக் குலைத்து அவர்களை ஆள்வதைக் குறிக்கோளாகக் கொண்டே இந்த மேலைநாட்டு கார்பரேட் நிறுவனங்கள் முதல், வட இந்திய இந்தித்துவவாதிகள் வரை குறிக்கோளாக வைத்து திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். தங்களின் எண்ணங்களைச் செயல்படுத்த இன்றைய ஆதிக்க சக்திகள் முதலில் விலைக்கு வாங்குவது, அந்த நிலப்பரைப்பைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் ஊடகங்களை.

இந்த ஆதிக்க சக்திகளை முதலில் அடித்து விரட்ட வேண்டும் என்ற அடிப்படை, மேலைநாட்டு மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழர்களுக்கு என்று புரியப்போகிறதோ அன்றே நமது மக்களின் விடுதலைக்கான பாதை திறக்கப்படுகிறது


- அகல்

6 comments:

  1. வணக்கம்
    சாபஷ் சரியா கருத்துள்ள பதிவு எல்லோரும் படிப்பார்கள் என்றால் நிச்சயம் திருந்துவதாற்கு வாய்ப்புள்ளது
    நல்ல கருத்தை பசுமரத்தாணிபோல சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர் ரூபன்..

      Delete
  2. மிகச் சிறப்பான பகிர்வு...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தோழர் குமார்...

      Delete
  3. இப்போதைக்குப் புரியப் போவதில்லை.

    ReplyDelete