Wednesday 10 July 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 22

***

வரப்பில் மெலிந்த உடல்கள்
பிரதி எடுத்துக் காட்டுகிறது
வயலில் தேங்கிய நீர்

***

குடிசைக்குள் மழை
குடையாகிறது பாத்திரங்கள்

***

கிளி கொத்திய
கோவைப்பழம்
அதிகாலையில்
அவள் இதழ்கள்

***

அந்த ஜன்னலோரச் சாரலில்
உனது விழிகளும் எனது விழிகளும்
உரக்கப் பேசிக்கொண்டிருக்கையில்
மௌனித்துப் போனது மழை

***

அடர்ந்த இருளின் மடியில்

உன் மூக்குத்தி ஒளி
அதனோடு உறவாட வருகிறது
மின்மினிப்பூச்சி

***


நிறை குறைகளைப்
பார்த்துவிட்டது 
பிறை நிலவு

***

அடர்ந்த

இருளின் விலாசம்
உன் மூக்குத்தி ஒளியில்

***


நீ கடிதம் எழுதி
உன் காதலைச்
சொல்லவில்லை

நானும் அதைப்பற்றி

ஒரு வார்த்தையும்
பேசவில்லை

நீ அதை எப்படிப்
புரிந்து கொண்டாயோ
நானும் அப்படியே
புரிந்து கொண்டேன்


***


உன் வெட்கம் சரியும் நேரத்தில்
உன் மேலாடையும் சரிகிறது


***

உன் மூக்குத்தி ஒளி 
முனகலில் நிலா

***
அகல் 

23 comments:

  1. முதல் கவிதை அருமை.
    அழகான படிமம்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே...

      Delete
  2. உன் வெட்கம் சரியும் நேரத்தில்
    உன் மேலாடையும் சரிகிறது/// ம்....புரிகிறது

    ReplyDelete
  3. சுருக் .. நறுக் ...
    .

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா... நன்றிகள் ஷ்ரவாணி...

      Delete
  4. குடிசைக்குள் மழை
    குடையாகிறது பாத்திரங்கள்

    கலக்கல் ஹைக்கூ...

    அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பாஸ்...

      Delete
  5. அணைத்தும் அருமை...

    கொள்ளை கொள்கிறது மனதை..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சங்கவி சார்..

      Delete
  6. அனுபவக் கவிதை.... அழகாக உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே இரவின் புன்னகை..

      Delete
  7. கலக்கலான கவிதைகள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா... மிக்க நன்றி பாஸ்..

      Delete
  8. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/tamil-poets-in-blogs.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி தனபாலன் சார்...

      Delete
  9. Replies
    1. மிக்க நன்றி சமுத்ரா..

      Delete
  10. Once Again :

    Visit : http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி தனபாலன் சார்..

      Delete
  11. வணக்கம் !
    இன்று உங்களை வலைசரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் ,அதற்க்குத்
    தங்களின் வருகையைத் தெரிவியுங்கள் .மிக்க மகிழ்ச்சி எனக்கும் தங்களை
    இங்கே அறிமுகம் செய்யக் கிடைத்த வாய்ப்பிதற்க்கு .
    http://blogintamil.blogspot.ch/2013/07/2_24.html

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் ஒருமுறை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி அம்பாள் அடியாள்..

      Delete
  12. கருத்தும் அழகு. வடிவமும் அழகு. (காதலியின் அழகும் ஒரு காரணமோ?) –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete