Sunday, 16 June 2013

அகல் மொழி பத்து - பாகம் 3


21. என்னை எவரோடும் ஒப்பிடுவதை நான் விரும்புவதில்லை. ஏனென்றால் இவ்வுலகில் என்னைப்போல் நான் மட்டும் தான்.

22. ஒரு சிலர் நம்மோடு ஓரிரு வார்த்தைகள் பேசினாலே அத்தனை துன்பங்களும் மறந்துபோகும். ஆனால் அது போன்ற உறவுகள் நீண்டகாலம் நிலைப்பதில்லை.

23. சொல்வது நியாயம் என்றால் சொன்னது குழந்தையானாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

24. நமக்குப் பிடித்தோர் பேசாமல் இருப்பதைவிட வேண்டா வெறுப்பாகப் பேசுவது அதிகமான வலியைத்தரும்.

25. உங்களைப் பற்றி முழுமையாக எவரிடமும் சொல்லாதீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் வருத்தப்பட அதுவே காரணமாக அமையலாம்.

26. நடந்து கொண்டுவரும் மனித அழிவிற்கு பலநூறு காரணங்களை நாம் பட்டியலிடலாம். ஆனால் மூல காரணம் மனிதன் மட்டும் தான்.

27. நமது நோயைக் குணப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனையில் உள்ள ஒவ்வொரு மருந்துப் பொருட்களிலும், அதை சோதனை செய்ய இந்த உலகின் ஏதேனும் ஒரு மூலையில், திரைமறைவில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மனிதர்களின் ரத்தக்கறை படிந்திருக்கும். அவர்களும் ஏழைகளாகவே இருப்பார்கள்.

28. நமது நாட்டில் நல்ல தொண்டர்களுக்குப் பஞ்சமில்லை. தலைவர்களுக்கு மட்டுமே.

29. எவனொருவன் சாதி, மத அடையாளங்களைத் தாண்டி மனிதனுக்காக மட்டும் போராடுகிறானோ அவனோடு கைகோர்க்க எனது விரல்கள் காத்துக்கொண்டிருக்கும்.

30. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பாதுகாக்கப்படும் உறவுகள் யாவும் நீண்டகாலம் நீடிக்கும்.

முந்தய பாகம் அகல் மொழி பத்து - பாகம் 2

மொழியும் புகைப்படமும்,
அகல்

12 comments:

  1. /// சொல்வது நியாயம் என்றால் சொன்னது குழந்தையானாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்... /// மிகவும் பிடித்தது... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. இணைப்பிற்கும் தங்கள் கருத்திற்கும் நன்றிகள் தனபாலன் சார்...

      Delete
  3. சிறப்பான மொழிகள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே...

      Delete
  4. நல்ல கருத்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் மேடம்...

      Delete
  5. nice thoughts akal..keep on rocking...will publish book soon :)

    ReplyDelete
  6. valuable thoughts boss..thanks for sharing :-)

    ReplyDelete
  7. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு மிக்க நன்றி தனபாலன் சார்... சென்று பார்க்கிறேன்...

      Delete