திருஷ்டி
எப்படியும் நீ
மறந்துவிடுவாய்
என்று தெரிந்து
உன் எலுமிச்சை
நிறத்திற்கு
கன்னக்குழி மச்சமும்
காரிருள் கூந்தலுக்கு
ஒரு வெண்ணிற முடியும்
இயற்கையாக
திருஷ்டி கழித்துக்
கொண்டிருகிறது !
தவிப்பு
சூறாவளிக்குள்
சிக்கித் தவிக்கும்
பூவிதழ்போல்
என் பார்வையும்
தவிக்கிறது
உன் பார்வைக்குள்ளே !
தோகை
கார்மேகக் கூட்டமோ
கடும் வெயிலோ
தோகையை விரித்தபடி
பனை மரம் !
சிறை
ஒரு சில
வண்ணக் கலவையில்
அடியில் இருந்து
ஆழப்பாய்ந்து
கொண்டிருக்கிறது
அனல்
குக்கர் சிறையிலிருந்து
தப்பித்து வந்து
விசில் நுனியில்
ஆவியாக மனமின்றி
அழுது தவித்துக்
கொண்டிருக்கிறது
ஒரு நீர்க்குமிழி !
கோபம்
முதலில்
உன்மீது கோபம்
திட்டிவிட்டேன்
அழுதுவிட்டாய்
இப்போது உன்
கண்ணீர் மேல்
கோபம்
உன் உதட்டோடு அது
உறவாடிக்
கொண்டிருக்கிறது !
முத்தம்
என் விரல்நுனியில்
பட்டும் படாமல்
நீ தந்த ஒற்றை முத்தத்தை
உன்வாங்கிக்கொண்டு
ஜன்னல் வழியே
கை நீட்டினேன்
அசுர முத்தத்தை
அள்ளித் தந்தது
ஆலங்கட்டி மழை !
மழை
அந்த
அடைமழைச் சாரலில்
நான் நனையாமலிருக்க
நீயும்
நீ நனையாமலிருக்க
நானும்
மாறி மாறி
குடைபிடிக்கிறோம்
நனைந்து போனது
நம் பாடப்புத்தகங்கள் !
வழிப்போக்கன்
மின்சாரம்
துண்டிக்கப்பட்டதும்
ஏற்றப்பட்ட
மாடவிளக்கிடம்
இருளைவிட்டு
வெளியேர
வழி கேட்டுக் கொண்டிருக்கிறது
விட்டில் பூச்சிகள் !
போட்டி
ஆழப் படர்ந்திருக்கும்
அந்த மரத்தடியே நீ
உன் மடியில் தவழ
வரம் அளிக்கிறது
ஆடிக்காற்று
போட்டி போட்டுக்கொண்டு
உதிர்கிறது இலைகள் !
கள்வன்
இருவிழிப் பார்வையில்
எவருமில்லையென
உறுதிப்படுத்திக்கொண்டு
அறையில் களைகிறாய்
உன் மேலாடையை
ஆழ்ந்து ரசித்துக்
கொண்டிருக்கிறது
ஜன்னல்வழி ஒளியில்
தூசுப் படலங்கள் !
அன்புடன்,
அகல்
எப்படியும் நீ
மறந்துவிடுவாய்
என்று தெரிந்து
உன் எலுமிச்சை
நிறத்திற்கு
கன்னக்குழி மச்சமும்
காரிருள் கூந்தலுக்கு
ஒரு வெண்ணிற முடியும்
இயற்கையாக
திருஷ்டி கழித்துக்
கொண்டிருகிறது !
தவிப்பு
சூறாவளிக்குள்
சிக்கித் தவிக்கும்
பூவிதழ்போல்
என் பார்வையும்
தவிக்கிறது
உன் பார்வைக்குள்ளே !
தோகை
கார்மேகக் கூட்டமோ
கடும் வெயிலோ
தோகையை விரித்தபடி
பனை மரம் !
சிறை
ஒரு சில
வண்ணக் கலவையில்
அடியில் இருந்து
ஆழப்பாய்ந்து
கொண்டிருக்கிறது
அனல்
குக்கர் சிறையிலிருந்து
தப்பித்து வந்து
விசில் நுனியில்
ஆவியாக மனமின்றி
அழுது தவித்துக்
கொண்டிருக்கிறது
ஒரு நீர்க்குமிழி !
கோபம்
முதலில்
உன்மீது கோபம்
திட்டிவிட்டேன்
அழுதுவிட்டாய்
இப்போது உன்
கண்ணீர் மேல்
கோபம்
உன் உதட்டோடு அது
உறவாடிக்
கொண்டிருக்கிறது !
முத்தம்
என் விரல்நுனியில்
பட்டும் படாமல்
நீ தந்த ஒற்றை முத்தத்தை
உன்வாங்கிக்கொண்டு
ஜன்னல் வழியே
கை நீட்டினேன்
அசுர முத்தத்தை
அள்ளித் தந்தது
ஆலங்கட்டி மழை !
மழை
அந்த
அடைமழைச் சாரலில்
நான் நனையாமலிருக்க
நீயும்
நீ நனையாமலிருக்க
நானும்
மாறி மாறி
குடைபிடிக்கிறோம்
நனைந்து போனது
நம் பாடப்புத்தகங்கள் !
வழிப்போக்கன்
மின்சாரம்
துண்டிக்கப்பட்டதும்
ஏற்றப்பட்ட
மாடவிளக்கிடம்
இருளைவிட்டு
வெளியேர
வழி கேட்டுக் கொண்டிருக்கிறது
விட்டில் பூச்சிகள் !
போட்டி
ஆழப் படர்ந்திருக்கும்
அந்த மரத்தடியே நீ
உன் மடியில் தவழ
வரம் அளிக்கிறது
ஆடிக்காற்று
போட்டி போட்டுக்கொண்டு
உதிர்கிறது இலைகள் !
கள்வன்
இருவிழிப் பார்வையில்
எவருமில்லையென
உறுதிப்படுத்திக்கொண்டு
அறையில் களைகிறாய்
உன் மேலாடையை
ஆழ்ந்து ரசித்துக்
கொண்டிருக்கிறது
ஜன்னல்வழி ஒளியில்
தூசுப் படலங்கள் !
அன்புடன்,
அகல்
முத்தமும் மழையும் மிகவும் பிடிக்கும்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
எப்போதும் போல உங்களது முதன்மையான கருத்திற்கு மிக்க நன்றி தனபாலன் சார்...
Deleterasichu padichen boss..adhuvum "kobam ,thirushti,kalvan,mazhai,thogai" superrrrrr..:-)asusual semma..
ReplyDeleteMikka nadri Thenmozhi...
Deleteம்ம்ம்.... கலக்கல் அகல் .....வாழ்த்துகள் ... கள்வன் ,வழிப்போக்கன்,மழை,கோபம் அருமை......
ReplyDeleteNandrigal Janci...
DeleteKavithaigal anaithum arumai.. vazhthukkal :)
ReplyDeleteNandrigal Sudha...
DeleteAthanayum azhagu. Alavana Adigalil vaitha arputhangal. Arumai.
ReplyDeleteநன்றிகள் நண்பரே...
Delete