சோனியா காந்தியின் மருமகன் ராகுல் காந்தி - சொல்கிறது oneIndia.com
வணக்கம் நண்பர்களே...
முன்னுரையாக செய்தி ஊடகங்களைப் பற்றி சிலவரிகள்...
பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் செய்தி சார்ந்த இணையதள நாளிதழ்கள் என பல்வேறு ஊடகங்கள் உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் செய்திகளாக மக்களுக்கு கொண்டு செல்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக இணைய தளங்களின் சேவை சமீப காலங்களில் மகத்தானது. இணையதள இணைப்பு ஒரு அடிப்படை தேவையாக ஒவ்வொரு இல்லங்களிலும் மாறிக்கொண்டு வரும் இந்த காலகட்டத்தில், இணைய தளங்களில் செய்திகள் வாசிக்கும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருமளவில் முன்னேற்றம் கண்டு வருகிறது என்பதை யாவரும் அறிவோம்.
லஞ்சம், ஊழல், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் என பலதரப்பட்ட சமூக பிரச்சனைகளை மக்கள் முன் கொண்டு செல்வதாலும், அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாலும், ஊடகங்களின் பங்கு ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவில் உதவும் என்ற நம்பிக்கையில் அவற்றிக்கு பெருமளவில் சுதந்திரம் அளிக்கிறது அனைத்து உலக நாடுகள். ஆனால் அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் ஊடகங்களும் உண்டு. அப்படியாக இன்று ஒரு ஊடகம் செய்த தவறைப் பற்றிதான் இங்கு பார்க்கப்போகிறோம். இப்போது தலைப்பிற்கு போவோம்.
சோனியா காந்தியின் "மருமகன்" ராகுல் காந்தி...
இப்படியாக நான் சொல்லவில்லை. அதிக தமிழ் மக்களால் தினசரி தமிழ் செய்திகள் பார்க்கப்படும் http://www.oneindia.in/ யின் தமிழ் பிரிவான http://tamil.oneindia.in இணைய தளத்தில் இன்று காலை(2/11/2012) வெளியிடப்பட்ட ஒரு செய்தியில் தான் இவ்வாறு குறிப்பிடப்பட்டது.
செய்தி என்ன..?
யங் இந்தியா என்ற நிறுவனத்தின் பங்குதாரர்கள் சோனியாவும் ராகுல் காந்தியும். இந்த நிறுவனம் அசோசியேட்டட் ஜேர்னல் லிமிடெட் என்ற பொது நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தியிருக்கிறது. அதன் மதிப்பு ரூ1,600 கோடி என்றும் இந்தப்பணம் காங்கிரஸ் கட்சியிருந்தே கடனாக கொடுக்கப்பட்டது என்றும் சுப்பிரமணியம் சாமி கூறியதை ராகுல் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதை வெளியிட்ட http://tamil.oneindia.in , "இப்புகாரை காங்கிரஸ் பொதுச்செயலாளரும் சோனியாவின் மருமகனுமான ராகுல் காந்தி நிராகரித்துள்ளார்" என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. காலை 11 மணிக்கு நான் பார்த்த அந்த செய்தி அடிக்கோடிடப்பட்டு ஆதாரமாக கீழே பதிவிடப்பட்டுள்ளது (பெரிதாக்கிப் பார்க்க புகைப்படத்தில் மேல் கிளிக் செய்யவும்).
காலை 11 மணிவரை...
காலை 11.30 மணிவாக்கில் இந்த வாக்கியம் இவ்வாறு அதே தளத்தில் திருத்தப்பட்டது. "இப்புகாரை காங்கிரஸ் பொதுச்செயலாளரும் சோனியாவின் மகனுமான ராகுல் காந்தி நிராகரித்துள்ளார்" என்று. அதற்கான ஆதாரம் கீழே.
சிலமுறை தட்டச்சில் எழுத்துப் பிழைகள் வருவது மனித இயல்புதான். ஆனால் இந்த செய்தியில் பிரிங்கா காந்தியின் கணவர் ராகுல் காந்தி என்றும் சோனியா காந்தி ராகுல் காந்தியின் மாமியார் என்கிற முறையிலும் பொருப்பின்றி உறவுகளை கொச்சைப்படுத்தும் படியாக எழுதியிருப்பது வருந்தத்தக்க மிகப்பெரும் தவறு. இவ்வாறு யாரைப்பற்றி எழுதி இருந்தாலும் அதை எழுத்துப்பிழை என்று மன்னிக்க இயலாது (செல்வி என்பதை திருமதி என்று கூறியதால் தமிழகத்தில் இரு அரசியல் கட்சிகளுக்கு இடையே நடந்த மிகப்பெரும் சர்ச்சையை நாம் அறிவோம்).
தவறுகளைச் சுட்டிக்காட்டும் ஊடகங்களே பெரும் தவறுகளைச் செய்கிறது. அப்படியான தவறுகளில் ஒன்று இது.
இதன் பின் விளைவு...
இந்தச் செய்தியை காங்கிரசார் அறியும் பட்சத்தில், இவ்வாறு உறவுகளை கொச்சைப்படுத்திய http://www.oneindia.in/ இணையதளத்தின் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம் இல்லை oneindia இணையதளம் பகிரங்கமாக மன்னிப்பு கோரி அதில் செய்தி வெளியிடும்படியாக அவர்களை நிர்பந்திக்கலாம்.
http://tamil.oneindia.in தளத்தில் இந்த செய்தியை எழுதிய ஆசிரியர் பெயர் "மதி" என்று அதே பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது(முழுப்பெயர் மதிவாணன்).
இனி இது போன்ற தவறுகள் நேராமல் oneindia.com பார்த்துக் கொள்ளும் என நம்புவோம். வருகைக்கு நன்றிகள் நண்பர்களே. அடுத்த அனுபவத்தில் மீண்டும் சந்திப்போம்...
உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
ReplyDeletehttp://otti.makkalsanthai.com/upcoming.php
பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,
ரெண்டு நாளைக்கு முன்னாடி "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி" காரங்க அன்னை சோனியா காந்திக்கு நினைவுநாள் அஞ்சலி நிகழ்ச்சி நடத்துனாங்க... :):):)
ReplyDeletehttps://twitter.com/vikatan/status/263597407038742528/photo/1
ஹ ஹ கொலைவெறி ராஜ்... ஒருவேள சோனியா இருக்கறது கட்சிக்காரங்களுக்கே பிடிக்கலையோ என்னவோ :)..
Deletehttp://www.rahimgazzali.com/2012/11/nilam-cyclone.html இதையும் படிச்சு பாருங்க.
Deleteகண்டிப்பாக பார்க்கிறேன் நண்பரே.. வருகைக்கு மிக்க நன்றி :)..
Deleteகாங்கிரசார் உட்பட அனைவரும் குழப்பத்திலிருக்கிறார்கள் போல
ReplyDeleteஎனக்கு என்னவோ அப்டிதான் தோணுது.. எல்லாம் ஒரு மார்கமாத்தான் திரியறாங்க..
Deleteநீங்கலே ஸ்கிரீ சாட் களாஇ வச்சி மாட்டி விட்டுடுவீங்க போல இருக்கு......
ReplyDeleteஇணையத் தளங்கள் அறிவாளிகளின் கைகளில் இல்லையென்றே சொல்லலாம்
ஹ ஹ... நாம தப்பு செஞ்ச அவங்க மாட்டிவிடுறாங்க... அவங்க தப்பு செஞ்ச நாமலும் மாட்டிவிடுமே :).... நன்றி நண்பா...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசோனியா காந்தியின் "மருமகன்" ராகுல் காந்தி...
ReplyDeleteஇப்படியாக நான் சொல்லவில்லை. அதிக தமிழ் மக்களால் தினசரி தமிழ் செய்திகள் பார்க்கப்படும் http://www.oneindia.in/ யின் தமிழ் பிரிவான http://tamil.oneindia.in இணைய தளத்தில் இன்று காலை(12/11/2012) வெளியிடப்பட்ட ஒரு செய்தியில் தான் இவ்வாறு குறிப்பிடப்பட்டது.
ஒரு தவறை சுட்டிக்காட்டி நீங்கள் வெளியிட்டுள்ள பதிவிலும் தவறு இருப்பதை என்னவென்று கூறுவது.... (2.11.2012 என்பதற்கு பதிலாக 12.11.2012 என்று பதிவிட்டுள்ளீர்கள்
ReplyDelete
வருகைக்கும் தவறனா தேதி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே.. திருத்துக்கொள்கிறேன்..
Deleteha ha ha..aduthavanka thappa kandu pidikirathula yavlavu kavanama irukom...
ReplyDeleteenaium serthu than solren boss...thappa ninaika vendam....
but screen shot ellam konjam over inkoooo....pavam oneindia :P
Aduththavanga seira thappa sutti kaattamathaan naadu indha nilaiyila irukku... // but screen shot ellam konjam over inkoooo // Ha ha.. Just think once that if the same kind of news comes about you are me, will you say the same statement ?
Deletenop... :(
Deletethen am also telling one more mistake in ur comment "about you are me, "put "or" boss....
ha ha ha.. :)....but u r right akal.