பொய்காரன்

எனது
ரயில் பயணத்தில்

அந்த ரயிலையும்
உன் நினைவுகளையும்
அன்றி
யாரையும்
நான் துணைக்கு
அழைத்து வரவில்லை
என்று சொல்லும்
என்னைப் பார்த்து

நீ ஒரு
உலகமாக
பொய்காரன்
என்கிறது

அந்த
ஜன்னல் வழி
இடைவெளியில்
மடிவிரித்துத்
தாலாட்டிய நிலவு !


- அகல்

4 comments: Leave Your Comments

 1. கவிஞனைய்யா நீர்...
  அழகான கற்பனை..
  வடித்தவிதம் அருமை...

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் போன்றோர் கூறும் இதுபோன்ற ஓரிரு வார்த்தைகள் தான் மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுகிறது.. நன்றிகள் தோழர்...

   Delete
 2. எழுதுங்கள் மேலும் வளர்ந்திட நாளும்! நன்று!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா வாழ்த்திற்கும் கருத்திற்கும்..

   Delete