Thursday, 4 October 2012

இது கிராமத்து காதல்

ஒரு கிராமத்து காதலி, தனது காதலனை காண வருவதாய் சொல்லிவிட்டு வர இயலாத காரணத்தையும், அவன் மீது அவள் கொண்ட அழமான அன்பினையும் அவளது வழக்கு மொழியிலேயே வெளிப்படுத்தும் விதமாக எழுதப்பட்டது. கிராமத்து வழக்குமொழியில் எனது முதல் கவிதை.

ஆத்தங்கர ஓரத்துல
அந்தி சாயும் நேரத்துல
காத்து கெடப்பீக
கண்சிமிட்ட மறப்பீக..

தூது சொல்ல ஆளுமில்ல
தோழி இப்ப பக்க மில்ல..
சேதி சொல்லுஞ் சின்னப் புள்ள(தங்கை)
எதிரியானா என் அப்பன் சொல்ல..

இப்ப, செங்காத்தும் வீசுதய்யா
உம் செவி சாச்சு கேளுமய்யா,
பொச கெட்ட இவ மனசில்
புயலடிக்கும் சேதி சொல்லும்..

உயிரோட உயிர் சேந்து
உன் கூட வாழுரப்ப,
புரியாத என் அப்பன்
புது வரன கூட்டி வந்தான்..

அவன்,
அரும்பு மீசைக்காரன்
ஆளு ரொம்ப கெட்டிக்காரன்
ஜல்லிக்கட்டு காளனாலும்
மல்லுக் கட்டும் வீரனவன்

மிடுக்கான பார்வையிலே
மீன் கொத்தும் தூண்டி லவன்
சொடுக்கு போட்டதுமே
சொர்க்கங் காட்டும் சொத்துக் காரன்,
இப்படித் தான் சொல்லுறாக
என் ஊரில் எல்லாரும்...

ஆனா
நீர் காலையில கலப்ப கட்டி
காணி யெல்லாம் உழுது புட்டு,
களச்சு போன உமக்கு கொஞ்சம்
கம்மக் கூழு குடுக்குரப்ப..,

ஒரு வாயி ஊட்டி விட்டு
உசுர கொள்ளும் உன் அன்ப,
கோடி கொட்டிக் கொடுத்தாலும்
கொடுப்பானா இவஞ்சொல்லு..?

என் கண்ணெதிரே நிக்கிறவன்
கருங் கல்லா தெரியி றான்யா.
கண்ணுக் கெட்டா தூரத்துல
காத்துகிட்டு நீ இருந்தும்,
என் கண்டாங்கி சேலையாகி
என்னக் கட்டிக்கிட்டு நிக்கிரய்யா..

பொழுது நல்லா சாஞ்சு போச்சு
திரி விளக்கும் ஏத்தியாச்சு.
தூது சொல்ல ஆளில்லா
துரதிஷ்ட வதி யானே.

நல்லாப் போய் தூங்கு மைய்யா
நாள வந்து பாப்பே னய்யா..
இப்ப, தூக்கம் வந்து சொக்கியதும்
சொப்பனத்தில் சேர்வோமய்யா..!

12 comments:

 1. Ovvoru variyum korvayaka poruthama irukku nanpare....unmayileye mikavum sirappana kavithai koduthullirkal. Thodarunkal vazthukkal

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே செல்லத்துரை.. மற்ற எனது பதிவுகளையும் பார்க்கவும் :)

   Delete
 2. சூப்பர்...
  கிராமத்துக் கவிதை முதல் என்று சொன்னீர்கள் ஆனால் பல கிராமிய படைப்புக்கள் கொடுத்த அனுபவம் உள்ளவரின் தொணியில் உள்ளது.
  வரிகள் ஒவ்வொன்றும் அருமை

  ReplyDelete
  Replies
  1. வழக்கு மொழியில் இதுதான் எனது முதல் கவிதை அன்பரே... தங்கள் கருத்திற்கு நன்றிகள் பல..!

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. மண் மணம் கமழும் சிறந்த படைப்புங்க நண்பா ...
  பல இடங்களில் நான் வியந்தேன் .. தொடருங்க மண் மணம் கமழட்டும் ..

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே.. மற்ற பதிவுகளையும் பார்க்க :)

   Delete
 5. aiyoo sami..super ah eludaringa..etha padikarthu etha vidarathune therila..padika padika unga varigal ennai adimai paduthirum pola eruku..ela kavithaigalume arumai..

  ReplyDelete
 6. பேச்சு வழக்கில் இருப்பதனால்.. படிக்கும் போதே மனமும் கிரமத்து உணர்வோடு ஒட்டி உறவாடுகிறது..இலகு தமிழ் இதயங்களை வருடி நிற்கிறது..அருமை!!! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே..

   Delete
 7. என் கண்ணெதிரே நிக்கிறவன்
  கருங் கல்லா தெரியி றான்யா.//romba alzaku kavithaiyil..... valthukal..thodarunkal akal

  ReplyDelete