அழுகையும் ஆனந்தமும்

பல
மாதங்களாக
மழை
பெய்யாது
பாலையான
நிலத்தில்,

இன்று
ஆலங்கட்டி
மழை...

ஆரவாரம்
கொண்டு
ஆர்ப்பரிக்கிறார்கள்
மனிதர்கள்..

அதன் இடையே...

இன்று
பொறித்த
தன் குஞ்சை,

பத்திரப்படுத்த
முடியாது
பரிதவிக்கிறது

ஒரு சிட்டுக் குருவி..!

0 comments:

Post a Comment