எனது குறுங்கவிதைகளில் சில .. பாகம் 1

அன்பின் அளவு

அன்பை அளவிட
முடியாதாம்...

ஏன் முடியாது..!?

என் தாயின் எடை
ஐம்பது கிலோ..!நிச்சயதார்த்தம்

நிலவுப்பெண்ணை
நிச்சயம் செய்ய...

ஊர்வலமாய்
மேகக்கூட்டம்

வான வேடிக்கையாய்
இடிமுழக்கம்..!


ஆற்றங்கரை காதல்

உச்சி வெயில்
நேரத்தில்
ஆற்றங்கரை
ஓரத்தில்

முத்தப்
பரிமாற்றம்
செய்கிறது...

மீன்களும்
விண்மீன்களும்..!


மொட்டைமாடியில் நான் 

என்றும்
என் முகம் பார்த்து
புன் முறுவலிடும்
இவள் ஏனோ..,

இன்று
வெட்கம் கண்டு
முகம் மறைத்துக்
கொண்டாள்...

மேகத்தின்
மறைவில்
நிலா..

மொட்டை
மாடியில்
நான்..!


துணைக்கோள்

எந்தன் நிலவிற்கும்
ஒரு துணைக்கோள்...

நெற்றிப் பொட்டாக..!

5 comments: Leave Your Comments

 1. ஒவ்வொன்றும் அருமையாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் சிட்டுக்குருவி :)

   Delete
 2. குட்டிக்கவிதைகள் ஒவ்வொன்றும் பட்டாசாக வெடிக்கின்றது ..

  ReplyDelete
  Replies
  1. வெடிக்கு மருந்து போடறதே உங்களமாதிரி நண்பர்களோட கமெண்ட் தான்... கருத்திற்கு நன்றிகள் அன்பரே...

   Delete
 3. anaithum arputham.... kavi aruvi(akal)

  ReplyDelete