Wednesday, 26 December 2012

துப்புரவு தொழில்செய்யும் தோழர்களுக்கு இந்த வரிகளைச் சமர்ப்பிக்கிறேன்

வாடகைக்கு வீடு கேட்டா

வாங்கன்னு சொன்னாக - நான்
செய்யும் வேல கேட்டு
போங்கன்னு நின்னாக

உன் சிறுநீர சுத்தம் செய்யும்
சேவகன் நான் கேட்டா - நீ
குடிநீரு தரமாட்ட
குத்தம் சொல்லி என்ன செய்ய .?

குப்பய கடக்கயில
கொமட்டுதுன்னு சொல்றீக - என்
பாட்டன் முதல் இந்த பாவி வரை
அதத்தான அள்ளுறோமுங்க

அப்பன் நானும் படிக்கவில்ல
அனுப்பி வச்சேன் பிள்ளையத்தான் - அங்க
ஒருமாரி பாக்குறாக
நம்ம ஊரு பள்ளியில் தான்

ஒடம்பு முழுக்க மப்பு ஏற
கொடங்கொடமா குடிக்கிறீக - எனக்கு
மூக்கு செல்லு செத்துப்போனா
குடிக்கிறத நிறுத்துவேங்க

மனித கழிவு பொறுக்காதேனு
மத்திய சட்டம் சொல்லுதய்யா - அத
மாநிலங்கள் மாத்திக்கலாம்னு
அதே சட்டம் கொல்லுதய்யா

உன்னைப்போல உலகத்துல
நானும்கூட ஒரு பொறப்பு - ஆனா
எனக்கு மட்டும் வாழ்கையில
ஏனோ இந்த பேரிழப்பு

அடிமை செய்யும் மானுடமே - உம்ம
அகந்தை கொஞ்சம் நிறுத்துமையா

நீ அழுக்குப்பட்டா குளிக்கப்போகும்
ஆஸ்தான மொதலாளி - நான்
குளிச்சுபுட்டு குப்பையள்ளும்
துப்புரவுத் தொழிலாளி ..!


அன்புடன்,

அகல் 

28 comments:

 1. அவர்கள் நமக்காக சாக்கடையில் உழல்கிறார்கள்.இனி இதற்கு இயந்திரங்களை பயன்படுத்தவேண்டும்.அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் வரவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் முரளி சார் ... தங்கள் வருகைக்கு நன்றிகள் பல..

   Delete
 2. அவர்கள் நிலையை மிகச் சரியாக
  கவியாக சித்தரித்துள்ளீர்கள்
  அவர்கள் மாற்றமடைய நாம்தான்
  மாற்றமடையவேண்டும்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரமணி ஐயாவின் வருகைக்கும் ஆழ்ந்த கருத்திற்கும் மிக்க நன்றி..

   Delete
 3. அருமையான கருத்தைத் தாங்கிய கவிதை.. அவர்கள் அழுக்காய் இருப்பதால்தான் நாம் சுத்தமாக இருக்கிறோம்..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அன்பரே ..

   Delete
 4. கடைசி வரிகள் கணமானவை..
  இவர்களின் பணி மகத்தானது இவர்களும் சமமாகக் கருத்தப்பட வேண்டும் :)

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றி சிட்டுக்குருவி..

   Delete
 5. கண்ணீரை வரவழைத்தது கவிதை !
  முதலில் இதனை குறிப்பிட்ட சமுதாயத்தினர்தான் செய்யவேண்டும் என்ற இழி நிலையை ஒழிக்கவண்டும் . இவ்வேளை செய்பவர்களுக்கு தேவையான உபகரணங்கள் கொடுக்கப்படவேண்டும் . மனிதனை கழிவை மனிதன் அள்ளும் இந்நிலை நிச்சயமாக ஒழிக்கப்படவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே இக்பால்... ஆம் உண்மைதான்...

   Delete
 6. கருத்தாழமும் சோகமும் கவிதையில் பொருத்த மாக வந்து மனதை வருத்தமாகச் செய்தது!

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா..

   Delete
 7. சாட்டையடி கவிதை! இந்த நிலை மாற வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றிகள் சுரேஷ் ..

   Delete
 8. மாறாத அவலம்!கவிதை மனத்தைத் தொட்டது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே குட்டன் ...

   Delete
 9. நிஜம் சுடுகிறது,
  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சார்வாகன்..

   Delete
 10. மற்றவர்கள் சுத்தமாய் வாழ்வதற்காய் தாங்கள் அழுக்காகிற இந்தத் தொழிலாளிகளின் நிலையை கவிதையில் படிக்கையில் மனம் கனக்கத்தான் செய்கிறது. நல்ல கவிதை!

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி பாலா ஐயா..

   Delete
 11. நம்மை குப்பை லாரி கடந்து போனாலே முகம் சுழித்து மூக்கை மூடுவோம்...ஆனால் அவர்கள் குப்பைக்குள்ளேயே வாழ்க்கையை கழிக்கின்றார்கள். அவரவர் வீட்டு மலத்தை அவரவரே அள்ள வேண்டும் என்று சொன்னாலே பாதி குப்பைகள், மலங்கள் குறைந்து விடும். அதை நாம் செய்யத் தயாராக இருக்கின்றோமா? ஹோட்டலில் நாம் சாப்பிட்ட எச்சில் இலையை நாமே எடுத்து போட மறுக்கும் நாம் இவர்களுக்கு கோயில் கட்டித்தான் கும்பிட வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே சிவா..

   Delete
 12. மிகவும் வேதனை கலந்த உண்மை வரிகள்.
  நிச்சயம் இந்த நிலை மாற வேண்டும். (உயிருள்ள மனிதர்களை சுமந்துச் சென்ற நிலை மாறியதைப் போல..)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ராஜி..

   Delete
 13. எனக்குள்ளும் இந்த எண்ணம் வந்தது ஒரு நாள் ரோட்டில் நடந்து சென்ற போது ஒரு வயதான முதியவர் சுத்தம் செய்து கொண்டு இருக்கையில் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது இப்படியும் ஒரு ஜென்மா என்று ?

  அதற்கேற்ப உங்கள் கவி அழகு அகல்

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றி ஹீஷாலி...

   Delete
 14. centiment ah eluthi manasa thotitenkalae akal...atha read paninathum kankalil kaneer than vanthathu.....avanka nilamaiyilum matram varanum..varum nam ninaithal ...thanks sir...

  ReplyDelete