அடை மழையில்
சிறு குடைக்குள்
அன்பாக நீ
அணைக்க நான்.
இது போதும் எனக்கு..!
பனிபடர்ந்த மாலை நேரம்
பதமான குளிர்
நடை பாதைப் பயணம்
என் வலது கையில் நீ
உன் இடது கையில் நான்.
இது போதும் எனக்கு..!
காஞ்சிவரப்பட்டு
கண்ணாடி வளையல்
கழுத்தோரம் கருகமணி
மனம்மயக்கும் மதுரை மல்லி
வெள்ளிக் கொலுசு
அடி நெற்றியில் குங்குமம்
அதற்குமேலே சந்தனம்
பகலில் இதை அணிய நீ
இரவில் அதை களைய நான்.
இது போதும் எனக்கு..!
அதிகாலை நேரம்
ஆவி பறக்கும் காபி
அழுக்கு வாயால் உனக்கோர் முத்தம்
அதை அதட்டும் உன் இதழ்கள்.
இது போதும் எனக்கு..!
நாம் கொண்ட அன்பு
அதில் நீ கொண்ட தாய்மை
தாய்மை நாளின் தவிப்பு
உன் மாலை நேர களைப்பு
மெட்டியிட்ட உன் விரல்கள்
அதில் நெட்டி எடுக்க நான்.
இது போதும் எனக்கு..!
உன்கையில் ஒருபிடி சோறு
நெற்றியில் தரும் ஒற்றை முத்தம்
சுகத்தில் சாய உன் மடி
சோகத்தில் சாய உன் மார்பு
இது போதும் எனக்கு..!
மாலை நேரம்
திறந்த புல்வெளி சிறு குடைக்குள்
அன்பாக நீ
அணைக்க நான்.
இது போதும் எனக்கு..!
பனிபடர்ந்த மாலை நேரம்
பதமான குளிர்
நடை பாதைப் பயணம்
என் வலது கையில் நீ
உன் இடது கையில் நான்.
இது போதும் எனக்கு..!
காஞ்சிவரப்பட்டு
கண்ணாடி வளையல்
கழுத்தோரம் கருகமணி
மனம்மயக்கும் மதுரை மல்லி
வெள்ளிக் கொலுசு
அடி நெற்றியில் குங்குமம்
அதற்குமேலே சந்தனம்
பகலில் இதை அணிய நீ
இரவில் அதை களைய நான்.
இது போதும் எனக்கு..!
அதிகாலை நேரம்
ஆவி பறக்கும் காபி
அழுக்கு வாயால் உனக்கோர் முத்தம்
அதை அதட்டும் உன் இதழ்கள்.
இது போதும் எனக்கு..!
நாம் கொண்ட அன்பு
அதில் நீ கொண்ட தாய்மை
தாய்மை நாளின் தவிப்பு
உன் மாலை நேர களைப்பு
மெட்டியிட்ட உன் விரல்கள்
அதில் நெட்டி எடுக்க நான்.
இது போதும் எனக்கு..!
உன்கையில் ஒருபிடி சோறு
நெற்றியில் தரும் ஒற்றை முத்தம்
சுகத்தில் சாய உன் மடி
சோகத்தில் சாய உன் மார்பு
இது போதும் எனக்கு..!
மாலை நேரம்
தலை கோதும் உன் விரல்கள்
உன் மடியில் நான்.
இது போதும் எனக்கு..!
நவம்பர் மாத நடுக்கம்
ராத்திரி நேர உறக்கம்
நடு இரவில் விழிப்பு
என் நெஞ்சுக்குள் நீ.
இது போதும் எனக்கு..!
குறிப்பு: "இதுபோதும் எனக்கு" எனும் வைரமுத்து அவர்களின் கவிதையின் தாக்கத்தில் நான் எழுதிய வரிகள் இவை. தலைப்பைத்தவிர அனைத்துவரிகளும் எனது கற்பனையே..!
kavithy super
ReplyDeleteகருத்திற்கு மிக்க நன்றி கவிதா
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமிக அழகிய படைப்பு தோழரே ...
ReplyDeleteகவிப்பேரரசின் தாக்கம் இருந்தாலும் அக்கவிதையையும் படித்தவன் நான், உங்களின் இந்த படைப்பும் மிக இயல்பாய் இல்லற வாழ்வினை படமிடுகிறது ... வாழ்த்துக்கள் தொடருங்கள்
நன்றி நண்பரே.. தாக்கமாயினும் ஐயா வைரமுத்துவின் அவர்களில் சிந்தனைகள் இதில் மீண்டும் பிரதிபலிக்காமல் இருக்க சற்று கவனமாகவே இதை எழுதினேன் :).. கருத்திற்கு மிக்க நன்றி
Deleteபோதுமெனற் மனமே சிறப்பு.
ReplyDeleteஆம் உண்மை.. ஆனால் கவிதைப்பற்றிய உங்கள் கருத்தைக்கூரவில்லையே :)
Deletekavithai nalaa iruku pic kooda nalla iruku
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கு நன்றிகள் aninthe..
Delete"ithu pothum enaku....." romba alzaka iruku akal.....karpanai seithen..
ReplyDeleteithu pola oruvan vanthal athu pothu enaku....
nandrikal...thodarunkal padaipukalai