ஒரு சில மணித் துளிகள்,
உங்கள் இதழ்கள் இதை வாசிக்கட்டும்.
இதயம் சற்று சுவாசிக்கட்டும்..!
ஆம்..!
இது ஒரு கனாக்காலம்..!
சிட்டாய்ச் சிறகடித்து திரிந்தகாலம்
பனைமரத்து தூக்கணாம் குருவிபோல,
தூளிகட்டி துள்ளிக் குதித்தகாலம்.
சிரிப்பொலியும், கொலுசொலியும்,
சில்லறை போல் சிதறிய காலம்..!
பல நேரத்தில், பலர் ஊட்டிய உணவுகள்,
உண்ட மயக்கத்தில் உறங்கிய மடிகள்,
ஊமையாய்ப் பேசிய ஆயிரம் பாஷைகள்,
சிறிய கோபத்திலும் சிவந்த கண்கள்,
தோல்வியின்போது தோல்கொடுத்த தோழர்கள்,
ஆசிரியர் மீது பாய்ந்த அம்புகள்,
கட் அடிப்பது முதல், கடலை போடுவது வரை,
அவரவர் தனித் திறமையை காட்டிய காலங்கள்..!
உண்மையைச் சொல்லப்போனால்..!
பல ஜோடிகளுக்கு,
கள்ளிச் செடியிலும் நெல்லிக் கனி
காய்த்த காலம் இது...
கல்லறையைக் கண்டாலும் - தாயின்
கருவறை போல் காட்சியளித்த காலமிது...
நிலத்தில் கால் வைத்து,
நிலவில் நீந்திய காலமிது..!
ஆனால், இன்று ஏனோ..!
என் இமைகள் உறங்க மறுக்கிறது
இதழ்கள் உணவை வெறுக்கிறது.
குருதியில் குதிரை ஓடும் சத்தம் கேட்டு,
மூளையும் முனு முணுக்கிறது...
மூச்சுக் காற்றும், முள் போல் குத்துகிறது.
பல கைகள் காணவில்லையே என
என் கை ரேகையும் கண்ணீர் வடிக்கிறது
என் பேனா முள் கூட,
"பிரிவு" எனும் வார்த்தையை,
உச்சரிக்க மறுக்கிறது..!
ஆம்..!
இனம்புரியாத துன்பத்தில் இமைகளை
மூடினேன் இரவில்,.
காலையில்..,
கண்ணில் பல கல்வெட்டுக் காயங்களை
காட்டியது கண்ணாடி பிம்பம்..
ஆனால்..,
அடித்தது புயலாயினும் (பிரிவு) - அது
அனைவருக்கும் மழையைப் (வேலை, வசதி) பொழியும்
என்ற நம்பிக்கையில்,...
இந்த இளம் நெஞ்சங்களுக்கு,
ஓர் இனிய வேண்டுகோள்...!
இரவில் உங்கள் இமைகள் உறங்கட்டும் - ஆனால்
இதயம் என்றும் சற்று, திறந்தே இருக்கட்டும்..!!
உங்கள் இதழ்கள் இதை வாசிக்கட்டும்.
இதயம் சற்று சுவாசிக்கட்டும்..!
"கனாக்காலம்"
இது ஒரு கனாக்காலம்..!
சிட்டாய்ச் சிறகடித்து திரிந்தகாலம்
பனைமரத்து தூக்கணாம் குருவிபோல,
தூளிகட்டி துள்ளிக் குதித்தகாலம்.
சிரிப்பொலியும், கொலுசொலியும்,
சில்லறை போல் சிதறிய காலம்..!
பல நேரத்தில், பலர் ஊட்டிய உணவுகள்,
உண்ட மயக்கத்தில் உறங்கிய மடிகள்,
ஊமையாய்ப் பேசிய ஆயிரம் பாஷைகள்,
சிறிய கோபத்திலும் சிவந்த கண்கள்,
தோல்வியின்போது தோல்கொடுத்த தோழர்கள்,
ஆசிரியர் மீது பாய்ந்த அம்புகள்,
கட் அடிப்பது முதல், கடலை போடுவது வரை,
அவரவர் தனித் திறமையை காட்டிய காலங்கள்..!
உண்மையைச் சொல்லப்போனால்..!
பல ஜோடிகளுக்கு,
கள்ளிச் செடியிலும் நெல்லிக் கனி
காய்த்த காலம் இது...
கல்லறையைக் கண்டாலும் - தாயின்
கருவறை போல் காட்சியளித்த காலமிது...
நிலத்தில் கால் வைத்து,
நிலவில் நீந்திய காலமிது..!
ஆனால், இன்று ஏனோ..!
என் இமைகள் உறங்க மறுக்கிறது
இதழ்கள் உணவை வெறுக்கிறது.
குருதியில் குதிரை ஓடும் சத்தம் கேட்டு,
மூளையும் முனு முணுக்கிறது...
மூச்சுக் காற்றும், முள் போல் குத்துகிறது.
பல கைகள் காணவில்லையே என
என் கை ரேகையும் கண்ணீர் வடிக்கிறது
என் பேனா முள் கூட,
"பிரிவு" எனும் வார்த்தையை,
உச்சரிக்க மறுக்கிறது..!
ஆம்..!
இனம்புரியாத துன்பத்தில் இமைகளை
மூடினேன் இரவில்,.
காலையில்..,
கண்ணில் பல கல்வெட்டுக் காயங்களை
காட்டியது கண்ணாடி பிம்பம்..
ஆனால்..,
அடித்தது புயலாயினும் (பிரிவு) - அது
அனைவருக்கும் மழையைப் (வேலை, வசதி) பொழியும்
என்ற நம்பிக்கையில்,...
இந்த இளம் நெஞ்சங்களுக்கு,
ஓர் இனிய வேண்டுகோள்...!
இரவில் உங்கள் இமைகள் உறங்கட்டும் - ஆனால்
இதயம் என்றும் சற்று, திறந்தே இருக்கட்டும்..!!
கள்ளிச் செடியிலும் நெல்லிக் கனி
ReplyDeleteகாய்த்த காலம் இது...
அழகிய உவமை பொருந்திய வரிகள் தொடருங்கள்.
கருத்திற்கு மிக்க நன்றி சசிகலா :)
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்று பிறந்தனள் கண்ணும் எங்க தன்மை சிங்கம் அகல் கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteபல்லாயிரம் ஆண்டுகள் வள வல்திகுறோம் !!!!
கள்ளிச் செடியிலும் நெல்லிக் கனி ? piditha varthaiyoooo....????? 2 avathu kavithaiyil padithu viten..analum puthithai ulathu....
ReplyDeletehmmm nalla kavanikkiringa... Thank you.....
Delete