நானும் பாரதியும் !

விண்மீன்கள்
எட்டிப்பார்க்கும்
ஒற்றைக் குடிசை

ஒருவரை
ஒருவர்
பழிதீர்க்கப்
போர்த்தொடுக்கும்
விட்டில் பூச்சியும்
மாடவிளக்கும்

யார் ஜெயிப்பார்
என்பதை ஆவலோடு
பார்த்துக்கொண்டே

படிக்க மறந்த
பள்ளிச் சிறுவனாய்
நானும்

பாடப்புத்தகத்தில்
கண் சிமிட்டாமல்
பாரதியும் !

14 comments: Leave Your Comments

 1. யார் ஜெயிப்பார்
  என்பதை ஆவலோடு
  பார்த்துக்கொண்டே

  படிக்க மறந்த
  பள்ளிச் சிறுவனாய்
  நானும்

  பாடப்புத்தகத்தில்
  கண் சிமிட்டாமல்
  பாரதியும் !

  மிகவும் ரசித்துப் படித்தேன்
  சிறப்பான கற்பனை வளம் கொண்ட
  கவிதை ! வாழ்த்துக்கள் மேலும்
  தொடரட்டும் அன்புச் சகோதரரே .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி :)

   Delete
 2. சூப்பர்! மிகவும் ரசித்தேன் நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றிகள் நண்பரே..

   Delete
 3. Replies
  1. கருத்திற்கு நன்றிகள் நண்பரே..

   Delete
 4. உங்களின் தளம் பற்றிய சிறு அறிமுகம்
  காண : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_13.html

  ReplyDelete
  Replies
  1. எனது தளத்தை அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே... நன்றி ...

   Delete
 5. ஒரு சிறுவனின் மனத்தையும் செயலையும் படம்பிடிக்கும் கவிதை

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றிகள் சார் ..

   Delete
 6. அருமையான கவிதை...
  வலைச்சரத்தின் மூலம் இது என் முதல் வருகை...
  இனிதொடரும் தொடர் வருகை....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை இனிதாகட்டும்... கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே..

   Delete
 7. Replies
  1. கருத்திற்கு மிக்க நன்றி ஆதிரா..

   Delete