Thursday, 13 June 2013

அத்தனையும் என் ஞாபகத்தில்

பட்டாம் பூச்சிகள் நிறைந்த
உனது பட்டுப்பாவாடை 
குட்டைச் சட்டை
                                                     
உன் கழுத்தோடு 
ராட்டினமாடும்
ரெட்டை ஜடை

உன் ஆள்காட்டி
விரலின் வழியே
பார்த்த அந்த
மேகக்குதிரை

அடிவானத்தில்
அரவணைத்துக் கொண்டே
பறந்துபோன அந்திநேர
மைனாக் குஞ்சுகள்

மழை ஓய்ந்த பொழுதும்
உன் விரல்கள் தீண்டி
என் மீது பொழியும்
நொடிப்பொழுது
செடி மழை

உன் உருவத்தைப்
பிரதி எடுத்து திரையிட்ட
செம்மண் நீர் சாலை

கையில் காலணியோடு
நடந்த
ஊற்றுநீர் கசியும்
அந்த ஒற்றையடிப்பாதை

உச்சியில் ஓட்டை
விழுந்த கறுப்புக்குடை

குடைக் கம்பியில் வடியும்
ஒருதுளி நீர்பட்டு
சிலிர்க்கும் உனது ஸ்பரிசம்

அந்த ஓட்டைக்
குடைக்கடியே நாம்

அத்தனையும்
என் ஞாபகத்தில்
ஒவ்வொரு மழைநாளிலும் !

அன்புடன்,
அகல்

17 comments:

  1. awesome..kavithai padikum podhu ovvaru varikana kaatchigal kanmunney varugeradhu..vazhthukal boss :-)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தேன்மொழி :)

      Delete
  2. சிலிர்ப்பான நினைவுகள்... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்... இந்த புகைப்படத்தை கூகிளில் பார்த்தவுடன் எழுதிய வரிகள் இவை...

      Delete
  3. நம்பவே முடியல அகல்...இது புகைப்படத்திற்கு எழுதியதென்று..அவ்வளவு அழகா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ஜன்ஸ்....

      Delete
  4. அழகிய வானவில் போன்ற எண்ணங்கள், அதை கருத்தாக்கிய விதம் அருமை..,

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் ராஜி...

      Delete
  5. அழகாய் கோர்த்து அமுதமாய் பருகிய கவிதை வாழ்த்துக்கள் அகல்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ஹீஷாலீ...

      Delete
  6. வர்ண்னைகள் அற்புதம்! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பா....

      Delete
  7. சிறப்பான வரிகளுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
    சகோதரா .இன்றைய வலைச்சரத்தில் தங்களையும் அறிமுகம்
    செய்யவுள்ளேன் அதற்கும் என் வாழ்த்துக்கள் .தொடர்ந்தும்
    முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள் .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்பாள் அடியாள்...

      Delete
  8. இயற்க்கையோடு இயைந்த காதல் அற்புதம்

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி சரளா...

      Delete