Wednesday 12 June 2013

மதமும் குரோமோசோமும்

மதம்

ஒவ்வொரு மதத்திலும் ஒருவர் மற்றவருடன் உரையாடலைத் தொடரும்முன், அவர்களைக் கடவுளின் பெயரால் ஆசிர்வதிக்க ஒரு சில வார்த்தைகள் பயன்படுத்தப்படும். இதில் தவறேதும் இல்லை என்றாலும், நமக்கு எதிரே கேட்டுக்கொண்டிருப்பவர் கடவுள் நம்பிக்கை உடையவரா ? இவ்வாறு கூறுவதை அவர் விரும்புவாரா, இல்லையா ? அவர் இதை எவ்வாறு எடுத்துக்கொள்வார், என்பதை சிந்திக்காமல் இந்த செயல் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.

ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் வேறு வேறு மதத்தைச் சார்த்தவர், நடுநிலைவாதிகளுக்கு இதில் விருப்பம் இல்லாமல் போகலாம். இது ஒரு மதத்திணிப்பாக அவர்களுக்குத் தெரியலாம். அவ்வாறு தங்கள் மதக்கடவுளின் பெயரால் உரையாடலை ஆரம்பிப்பவரிடம் அவர்கள் ஆரம்பத்திலேயே உரையாடலைத் துண்டிக்க நினைப்பதற்கு இது ஒரு காரணமாகக்கூட அமைந்துவிடலாம்.

அதனால் நண்பர்களுடன் உரையாடலை ஆரம்பிக்க "வணக்கம்" என்ற அழகான தமிழ் வார்த்தை உள்ளது அதைப் பயன்படுத்தலாம். அப்படியும் முடியாத இறை நம்பிக்கை அதிகம் உடையவர்கள் தங்கள் மத அடையாளங்களைக் குறிப்பிடாமல் "கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" என்று பொதுவாகச் சொல்லிவிட்டுப் போய்விடலாம். கடவுள் என்ற வார்த்தை யாரையும் முகம் சுளிக்க வைக்கப்போவதில்லை. மத பேதங்கள் இன்றி அனைவருடன் இயல்பாகப் பழக இந்த மாற்றம் தேவை என்பது எனது தாழ்மையான கருத்து.



குரோமோசோம் 

புள்ளிவிவரங்களின்படி ஒருபுறம் ஆண்களின் எண்ணிக்கையும் மறுபுறம் பெண்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே போகிறதாம். இதைப்பார்க்கையில், பிறக்கப்போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதைத் தீர்மானிக்கும் - ஆண்களின்  அணுவில் உள்ள XY குரோமோசோம்கள் பிரித்தெடுக்கப்பட்டு, பெண்களின் XX குரோமோசோமுடன் சேர்த்து, தேவைப்படும் பாலினத்தைச் சார்ந்த குழந்தையைப் பெற்றெடுக்கும் தொழில்நுட்பம் விரைவில் அமலுக்கு வந்தாலும் வரலாம் என்பது எனது அவதானிப்பு. இது வருங்காலத்தின் ஆண் பெண் சதவீதத்தை சரியான முறையில் நிர்ணயிக்கும் கருவியாக அமையலாம்.


அன்புடன்,
அகல்

6 comments:

  1. வணக்கம் என சொல்வதே நலம். கடவுள் மறுப்பாளர்களின் மனதையும் கருத்தில் கொள்வது நலமே.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்....வருகைக்கு நன்றி இக்பால் செல்வன்....

      Delete
  2. நானொரு பின்னூட்டமிட்டேனே ... என்னாயிற்று?

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டம் இட்டீர்களா ? இங்கே நான் பார்க்கவில்லையே ஐயா...

      Delete
  3. வேண்டாமென தவிர்த்திருந்தால் நலமே!

    ReplyDelete
    Replies
    1. இங்கே நான் பார்க்கவில்லை ஐயா.. உங்களது பின்னூட்டத்தை நான் எதற்காக நீக்கப்போகிறேன்...

      Delete