Wednesday, 31 October 2012

காசில்லா கனவுகள்

அடைய முடியாத
ஆசைகள்
தொட முடியாத
உயரங்கள் - என்று

எந்தப்
பாகுபாடும்
இதற்கில்லை

உன்னை
இறக்க வைக்கும்
மீண்டும் பிறக்க
வைக்கும்
அழவைத்து
சிரிக்க வைக்கும்

அம்பானியின்
மங்கை(மகள்)
உன் தங்கைக்கு
நாத்தனார் ஆக்கலாம்

உன்
காதலை மறுத்த
காதலியை
மனைவியாக
மாற்றலாம்

அவளோடு
சேர்ந்து சில
குழந்தைகளும்
பிறக்கலாம்...

வேண்டாத
மனைவியை
விவாகரத்தும்
செய்யலாம்

தேன்நிலவை
கிரகம் தாண்டி
நிலவிலேயே
நடத்தலாம்

செவ்வாய் கிரகம்
சுற்றி வந்து
தேநீரும்
அருந்தலாம்.

இறந்து போன
உறவுகளை
எதிரெதிரே
பார்க்கலாம்.

ரேசன் கடை
புளு(ழு )ங்கள்(ல்)
அரிசியை
புழுக்களுக்கே
போடலாம்

லஞ்சம் வாங்கும்
அயோக்கியனை
நடு ரோட்டில்
சாடலாம்

ஜாதி எல்லாம்
ஒழித்துவிட்டு
மனித ஜாதி
ஆக்கலாம்

மதத்ததை
எல்லாம்
மூட்டைகட்டி
நடுக்கடலில்
சேர்க்கலாம்

சுவிசில் இருக்கும்
நம் பணத்தை
நொடிப் பொழுதில்
மீட்கலாம்

ஏழை ஏங்கும்
இந்தியாவை
ஒரே நாளில்
பார்க்கலாம்

இப்படி...

விலையில்லா
நிகழ்வுகளுக்கு
என்றும்
வாசல் திறக்கிறது

காசில்லா கனவுகள்..!

13 comments:

  1. காசே தான் கடவுள்... பணம் எதையும் செய்யும்...

    சில விஷயங்களை தவிர......

    ReplyDelete
    Replies
    1. உண்மை.. ஆனால் அந்த சிலவிடயங்கள் தான் காலம் கடந்தாலும் நிலைக்கும்.. வருக்கைக்கு நன்றி சகோ...

      Delete
  2. அழகான கற்பனை
    காசில்லாமல் கானும் கனவுகளும் நிஜமாகும் ஓர் நாள் அதுவரை காத்திருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தசரதனுக்கு 60000 மனைவிகள் என்பது யாவரும் அறிவோம்
      //////////////////

      இதைத்தான் நான் சொன்னேன்.......:) 60000 என்று இப்போதுதான் அறிகிறேன்

      Delete
    2. அப்பிடியா நண்பா.. சாரி பாஸ்.. நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன் :)...

      Delete
    3. கருத்திற்கு நன்றிகள் நண்பரே சிட்டுக்குருவி :)

      Delete
    4. காசில்லா கனவுகள் அருமை
      உச்சம் தொட்ட சில ஆசைகள்
      மனம் கவர்ந்தது
      தொடர வாழ்த்துக்கள்

      Delete
    5. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி சார்..

      Delete
  3. ஜாதி எல்லாம்
    ஒழித்துவிட்டு
    மனித ஜாதி
    ஆக்கலாம்

    மதத்ததை
    எல்லாம்
    மூட்டைகட்டி
    நடுக்கடலில்
    சேர்க்கலாம்

    மிகவும் இரசித்தேன்..

    கவிதை மிக நன்று

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பிடித்த வரிகளை கூறியதற்கும் மிக்க நன்றி குணசீலன் சார்...

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றி சௌந்தர் சார்...

      Delete