Monday 18 March 2013

ஈழத்திற்கான எங்களது ஹைதராபாத் போராட்டமும், அதன் சிறப்பம்சங்களும்

வணக்கம் !

லயோலா திரி ஏற்றி தொடங்கி வைத்து,
இப்போது தமிழகம் முழுதும் காட்டுத்தீயாய்ப் பரவிக்கொண்டிருக்கும் மாணவர்களின் ஈழப் போராட்டத்தைப் பற்றின முன்னுரை எவருக்கும் தேவையில்லை. அதனால் நான் நேரடியாக விடயத்திற்கு வருகிறேன்.


தொலைகாட்சியின் வாயிலாக நேற்று ஹைதராபாத்தில் நடந்த ஈழப் போராட்டத்தைப் பற்றி சிலர் அறிந்திருப்பீர்கள். அந்தப்போரட்டத்தை ஆரம்பித்து ஒருங்கிணைத்தவன் என்ற முறையில் எனது அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.

வெள்ளிகிழமை (15/3/13) காலை 11 மணியளவில், அலுவலகம் கிளம்பும் முன்பாக சற்றென்று ஒரு விடயம் எனக்குப்பட்டது. ஞாயிறன்று மே - 17 இயக்கம் ,மற்றும் மாணவர் அமைப்பு மெரினா கடற்கரையில் நடத்தவிருக்கும் மிகப்பெரும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாகவும், தமிழகத்துள் நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தை மற்ற மாநிலங்களிக்கும் பரப்பும் விதமாகவும் ஒரு விடயத்தை ஏன் செய்யகூடாது என்று எண்ணினேன்.

அதன் விளைவாகவே ஹைதராபாத்தில் ஈழப் போராட்டத்தை நடத்தும் முடிவிற்கு வந்தேன். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை பற்றிய உணர்வலைகள் தமிழகம் தாண்டியும் இருக்கிறது என்பதை முன்வைக்கவும், மற்ற மாநிலங்களில் இருக்கும் தமிழர் அல்லாத மக்களுக்கு ஈழத்தில் நடந்த கொடுமைகளை விளக்கவும், மற்ற மாநிலங்களில் இருக்கும் தமிழர்களும் அவர்கள் இருக்கும் இடத்தில் போராடும்படி தூண்டி, போராட்டத்தை இந்தியா முழுதும் பரப்பவேண்டும் என்ற விடயங்களை முக்கியக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு, அலுவலகம் போகாமல் அன்று போராட்டத்திற்கு நண்பர்களைத் திரட்டும் வேலையில் இறங்கினேன்.

என்னோடு தங்கி இருக்கும் இரண்டு கல்லூரி நண்பர்களுடன் களத்தில் இறங்கினேன். மிகச் சில நண்பர்களே தெரிந்த ஹைதராபாத்தில், பெரும்திரளான தமிழர்களை அணிதிரட்ட, முதலில் நாங்கள் எடுத்துக்கொண்ட ஆயுதம் - முகநூள். அதன் வழியாக வெள்ளிக்கிழமை மதியம், ஞாயிற்றுக்கிழமை (17/3/13) நடத்தவிருக்கும் போராட்டத்தைப் பற்றிய செய்தியை வெளியிட்டு நண்பர்களை கலந்து கொள்ளுமாறு அழைத்தோம். தொலைபேசி மூலம் பலர் ஆதரவு தெரிவிக்கவே,அடுத்த கட்டமாக எங்களுக்கு தெரிந்த நண்பர்களைத் தொலைபேசி மூலமாக அழைத்தோம். புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு கூறினோம். அவர்கள் தந்த ஆதரவும் ஒருங்கிணைப்பும் ஆச்சரியப்படும் படியாகவே இருந்தது.

ஒரே நாளில் திட்டமிட்டு அடுத்த நாளே போராட்டம் நடத்த வேண்டும் என்ற நெருக்கடியில், சனிக்கிழமை காலை முகநூள் பார்க்காத ஹைதராபாத் நண்பர்களை அணி சேர்க்கும் விதமாக, போராட்டத்தை பற்றிய சுவொட்டி தயாரித்து, அருகில் உள்ள தமிழ் உணவு விடுதிகளின் ஒட்டினோம். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஆந்திராவில் தமிழர் போராட்டத்திற்கு அனுமதி கிடைப்பது மிகவும் அரிது. இருந்தும், மாதாப்பூர் காவல் நிலையத்தில் வெகுநேரம் காத்திருந்து, ஹைடெக் சிட்டி அருகே போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம்.
எதிர்பார்த்தது போலவே அனுமதிக் கடிதத்தை தொட்டுக்கூட பார்க்காமல் அனுமதி மறுக்கப்பட்டது.

அனுமதி மறுக்கப்பட்டாலும் போராட்டத்தை நடத்தியாக வேண்டும் என்று அனுமதி கேட்பதற்கு முன்பே நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஒருநாளில் பேனர், தேவையான துண்டுப்பிரசுரங்கள் தயார் செய்வது சற்று கடினம். இருந்தும் அதைத் தயாரிக்கும் முயற்சியில் இறக்கினோம். போராட்டத்திற்கு புகைப்படங்களைச் சேகரித்தோம். மே - 17 இயக்கத்துடன் தொடர்புகொண்டு அவர்கள் தயாரித்து வைத்திருந்த சில பிரசுரங்களை மின்னஞ்சல் மூலம் பெற்றோம். அனுமதி மறுக்கப்பட்ட செய்தியை முகநூளில் பதிந்தோம். இருந்தும் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என்று அறிவித்தோம்.

தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட ஒரு நண்பர் பேனரை தயார் செய்தார். ஒரு நண்பர், நமது கோரிக்கைகளை இங்குள்ள மக்களுக்கு புரியும் விதமாக தெலுங்கு, ஆங்கிலம் மொழிகளில் மொழிபெயர்த்து அதைப் பல பிரதிகள் எடுத்துவருவதாகச் சொன்னார். நாங்கள் முகநூளில் நிலவரங்களைக் கூறிக் கொண்டே, துண்டுப் பிரசுரங்கள், புகைப்படங்களை அச்சடித்து அட்டைகளை வெட்டி ஒட்டும் பணியில் ஈடுபட்டோம். சார்ட்டில் சில வாசங்கங்களை எழுதினோம். முடிந்தவரை தயார் செய்துவிட்டு, இரவு சுமார் ஒரு மணிக்கு உறங்கி காலை 5.30 எழுந்து மீண்டும் வேலைகளைத் தொடர்ந்தோம்.

காலை 9 மணிக்கு திட்டமிட்டபடி மாதாபூர் ஷில்பாராம் முன்பு நாங்கள் ஒன்று கூடினோம். நண்பர்கள் தொடந்து வந்தனர். ஆதரவு பெருகியது. போராட்டம் தொடந்தது. சில தொலைகாட்சிகள் நிகழ்சிகளை ஒளிபரப்பின. மற்ற மாநிலங்களுக்கும் இந்த போராட்டத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சிகளை பரப்பும் எங்களது நோக்கம் நிறைவேறும் விதமாக, நாங்கள் முகநூளில் ஹைதராபாத் போராட்டத்தைப் பற்றி வெள்ளிக்கிழமையன்று அறிவித்ததும், பெங்களூர் நண்பர்கள் தொடர்புகொண்டு அங்கும் போராட்டம் நடத்த முடிவு செய்ததாகக் கூறினார்கள். பின்பு முகநூள் வழியாக மும்பை, டெல்லி என செய்திகள் பரவி அங்கும் தமிழ் நண்பர்கள் போராட்டத்தை நடத்தினர்.


ஹைதராபாத் உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிர்பார்க்காத சிறப்பம்சங்கள்:


1. காவல்துறை அனுமதி மறுக்கபட்ட பின்னும் திட்டமிட்டபடி காலை 9 மணிக்கு மாதாப்பூர், ஹைதராபாத்தில் போராட்டம் தொடங்கியது.

2. மதியம் 2 மணிக்கு காவல்துறை போராட்டத்தைக் களைக்க நிர்பந்திக்கவே, போராட்டம் இந்திரா பூங்காவிற்கு மாற்றப்பட்டு மாலை 5 மணிவரை தொடந்தது.

3. 60 க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.

4. புதியதலைமுறை, GTV , போன்ற தமிழ் தொலைக்காட்சிகளோடு, டிவி 9 என்ற தெலுங்கு தொலைகாட்சி நிருபர்களும் செய்தி சேகரித்து ஒளிபரப்பினர்.

5. அப்துல்காதர் என்ற தோழர், தனது 60 வயது தாய், மனைவி, மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார். போராட்டம் இடமாற்றம் அடைந்தபோது, இவர்கள் கஷ்டப்படாமல் வீட்டிற்கு போகச் சொல்லியும், அதை மறுத்து போராட்டம் முடியும்வரை உண்ணாவிரதத்தில் ஆர்வமுடன் பங்கெடுத்தனர்.

6. அந்த சிறு குழந்தைகளும் உண்ணாவிரதத்தைக் கடைபிடித்தனர்.

7. கொடூரமாக கொல்லப்பட்ட இசைப் பிரியாவின் படத்தைப் பார்த்ததும், சுமார் 8 வயது நிரம்பிய தோழர் அப்துல் காதர் அவரின் குழந்தை அழுதுவிட்டது

8. 450 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து இரவு முழுதும் பயணித்து ஒரு தமிழ் நண்பர் உண்ணா விரதத்தில் கலந்து கொண்டார்.

9. புதியதலைமுறை தொலைக்காட்சி மாலை 3 மணிக்கு ஒளிபரப்பிய செய்தியை பார்த்து, 50 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து ஒரு தோழர், போராட்டம் முடியும் நேரத்தில் கலந்து கொண்டார்.

10. நமது கோரிக்கைகள் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அச்சிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.

11. ஈழம் தொடர்பான கொடுமைகளை ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் மக்களுக்கு தோழர்கள் விவரித்தனர்.

12. ஈழக் கொடுமைகளை கேட்டறிந்தபின், இரண்டு வடமாநில மற்றும் தெலுங்கு நண்பர்கள் சிறிதுநேரம் போராட்டத்தில் அமர்ந்து பங்கெடுத்தனர்.

13. ஹைதராபாத் திருக்குறள் தமிழ்ச்சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.

14. ஈழம் தொடர்பான உணர்வுப் பூர்வமான கருத்துக்களையும் அவரவருக்கு தெரிந்த ஈழ வரலாற்று நிகழ்வுகளையும் 2 மணி நேரம் மற்ற நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.

15. அழுத அந்த குழந்தை கடைசியில் எங்களிடம் கேட்டது, அடுத்த போராட்டம் எப்போது என்று ?


மிகப்பெரும் குறை:


IT யில் வேலைபார்க்கும் தமிழ்ப் பெண்கள் நிறைந்த பகுதியில், விடுமுறை நாளான ஞயிற்றுக் கிழமையன்று போராட்டம் நடத்தியும், ஒரு தமிழ்ப் பெண் கூட கலந்துகொள்ளவில்லை. அதோடு, தொலைபேசி வாயிலாகக் கூட ஆதரவு தரவில்லை. மிகவும் வருந்தினேன்.


முகநூள்:


ஒரே நாளில் மூன்றே பேர் இந்த போராட்டத்தை முன்னெடுக்க மிகப்பெரும் பலமாக இருந்தது எனது முகநூள்ப் பக்கம். ஈழத்திற்கான மாணவர் புரட்சியைப் பற்றி முகநூளில் பகிர்வதால் என்ன நடந்துவிடப் போகிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் ஒருவர் பகிர்வதை நூறு பேராவது பார்ப்பன், அதில் பத்து பேராவது சிந்திப்பான். ஒருவனாவது செயல்படுத்துவான். அந்த ஒருவனே நமது இலக்கு என்ற வகையில் எங்கள் போராட்டத்தை முகநூள் வழியாக நடத்தி முடித்தோம். அடுத்த கட்ட போராட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

அதோடு மட்டுமில்லாமல்,

2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரானிய குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏமாற்றி வெற்றி பெற்ற ஈரானியக் குடியரசுத் தலைவர் மஹ்மௌத் அஹ்மதினெஜாத்துக்கு எதிராக நடைபெற்ற புரட்சி

2011 எகிப்தியப் புரட்சி, குடியரசுத்தலைவர் ஓஸ்னி முபாரக்கை வீழ்த்திய புரட்சி

2011 துனீசியப் புரட்சி, சைன் எல் அபிதைன் பென் அலியினை வீழ்த்திய புரட்சி

போன்ற புரட்சிகளை நடத்தி வெற்றி கண்டது இந்த முகநூள் வழியாகத்தான்.
இதன் மூலம் மாணவர் புட்ரசியும் நமது ஈழமக்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அதனால் தொடந்து முகநூள் வழியாக ஈழம் சார்ந்த போராட்டங்களைப் பகிருங்கள். எனது முகநூள் பக்கத்தில் முடித்தவரை மற்ற இடங்களில் நடைபெறும் போராட்டச் செய்திகளைத் தொடர்ந்து பகிர்கிறேன். முடிந்தால் இணைந்து கொள்ளுங்கள்.

எனது முகநூள் பக்கம்: காக்கைச் சிறகினிலே


புகைப்படங்கள்:


உண்ணாவிரதப் போராட்டத்தில் குழந்தைகள்



போராட்டத்தில் கலந்துகொண்ட ஹைதராபாத் வாழ் தமிழர்கள்



போராட்டத்தில் கலந்துகொண்ட ஹைதராபாத் வாழ் தமிழர்கள்



தோழர் அப்துல் காதர், அவரது 60 வயது தாய், மனைவு மற்றும் குழந்தைகள் போராட்டத்தில்



போராட்டத்தில் கலந்துகொண்ட ஹைதராபாத் வாழ் தமிழர்கள்



உண்ணாவிரதப் போராட்டத்தில் குழந்தைகள்



ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கில் பொதுமக்களுக்கு ஈழ இனப்படுகொலையை விளக்கும் தோழர் துரை.



தோழர் அப்துல் காதர், அவரது 60 வயது தாய், மனைவு மற்றும் குழந்தைகள் போராட்டத்தில்



போராட்டத்தில் கலந்துகொண்ட ஹைதராபாத் வாழ் தமிழர்கள்



போராட்டத்தில் கலந்துகொண்ட ஹைதராபாத் வாழ் தமிழர்கள்



போராட்டத்தில் கலந்துகொண்ட ஹைதராபாத் வாழ் தமிழர்கள்



போராட்டத்தில் கலந்துகொண்ட ஹைதராபாத் வாழ் தமிழர்கள்




உண்ணாவிரதப் போராட்டத்தில் குழந்தைகள்



போராட்டத்தில் கலந்துகொண்ட ஹைதராபாத் வாழ் தமிழர்கள்



தொலைக்காட்சி செய்தி சேகரிப்பின்போது



போராட்டத்தில் கலந்துகொண்ட ஹைதராபாத் வாழ் தமிழர்கள்



ஹிந்தி மற்றும் தெலுங்கு நண்பர்கள் நமது போராட்டத்திற்கு ஆதரவாக



அன்புடன்,
அகல்

21 comments:

  1. அற்புதமான பணியை செய்து உள்ளீர்கள் நண்பா... உங்கள் எழுத்திலேயே நீங்கள் மேற்கொண்ட பணி குறித்த உற்சாகம் தெரிகிறது....

    வாழ்த்துக்கள்...

    போராடுவோம் வெல்வோம்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே.. போராடுவோம் வெல்வோம்..

      Delete
  2. நாங்கள் அநாதைகள் இல்லை எம் துயர் சுமக்க உறவுகள் எமக்குண்டு என்பதனை உங்கள் செயல் காட்டிவிட்டது. எமக்காய் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் ஈழத்தமிழர் சார்பில் நன்றிகள். நிச்சயமாய் எம் துன்பத்திற்கு விடிவு வரும் என்ற நம்பிக்கை இப்போது எமக்கு. உங்கள் கரம் பிடித்து நாம் எழுவோம் என்ற நம்பிக்கை. மறுபடியும் உங்களுக்கு எம் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சொல்லி எம்மைப் பிரித்துவிடாதீர்.. இது நமக்கான போராட்டம்.. நிச்சயம் விடுவு பிறக்கும்... தன்னம்பிக்கையுடன் இருங்கள் சகோதரா..

      Delete
  3. வாழ்த்துக்கள் .... வெல்லும் நமது போராட்டம் ...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே..

      Delete
  4. தொடருங்கள் உங்கள் போராட்டத்தை...

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே..

      Delete
  5. http://www.yarl.com/forum3/index.php?showtopic=119427

    ReplyDelete
    Replies
    1. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே..

      Delete
  6. super. are you mr.Vadivel??

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பா.. எங்க இருந்து கண்டுபிடிச்சிங்க பாஸ் ?

      Delete
    2. I am the one who talked with you for last two, three days.

      Delete
    3. தங்களும் "தமிழ் வெறியன்" என்று பட்டம் வாங்கியவரா?? வாழ்த்துகள். கிடைப்பதற்கரிய பட்டம். தங்கள் வலைத்தளப் பதிவுகள் அருமையாக உள்ளன. மேய்ந்து வருகிறேன்.

      Delete
    4. ஓ சரி நண்பா..

      Delete
  7. todaratum intha payanam vetti kidaikum varai...


    analum oru siru varutham....intha ena padukolai nadantha 2009 am andu nam yanko poi olinthu kondom...vetki thalai kunikiren... :(

    ReplyDelete
    Replies
    1. // intha ena padukolai nadantha 2009 am andu nam yanko poi olinthu kondom.. // Olindhukollavillai.... arasiyalvathikalai nambi emandhu ponom.... Thank you.....

      Delete
  8. enium yemara vendamae...thodaruvom nam poratathai

    ReplyDelete