Tuesday 23 April 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 14

தெரியாத காரணம் 

தெருவோர முனையில்,
பனித்துளிகளில்
குளித்துக் கொண்டிருக்கும்
ஒற்றை மின்சார விளக்கோடு
என்ன தகராறோ

இரவு முழுதும்
மல்லுக் கட்டியே
மாய்ந்து போனது
தட்டாரப்பூச்சி !




சொர்க்கம்

தாயின் கருவறையை
பார்த்தபின்பு 
ஒரு முடிவுரைக்கு
வந்துவிட்டேன்

இருள் நிறைந்து இருப்பது
நரகமட்டுமல்ல
சொர்கமும்தான் !




படையெடுப்பு

வாழையிலைக் கூம்பின்
ஆழம் அறிய
படையெடுத்துப் போகிறதோ 
பனித்துளி ?



இயற்கையின் பரிசு 

ஏதோ பரிசளிப்பதாகச்
சொன்னாய்

பூங்காவின் ஓரத்தில்
ஒற்றை மரத்தடியே
உனக்காக காத்திருந்து
ஏமாற்றத்துடன்
எழும் நொடிப்பொழுதில்

உச்சந்தலையில்
விழுந்து
உள்ளங்கையை
வருடியது ஒரு
வெள்ளைப்பூ

ஏமாற்றவில்லை இயற்கை !



மிகையல்ல 

உன் அழகை
உள்ளது உள்ளபடியே
எழுதினாலும்

அது உருவகமாகவே
தெரிகிறது
ஒரு சிலருக்கு !
 



கவிஞனின் காதல்

கவிதை எழுதியே
கழிகிறதென் காலம்
காதலியை அறியாமல் !



படுகொலை

முள்ளி வாய்க்காலில்
பூத்த முல்லைக்கு
கொல்லி போட்டது

பாஸ்பரஸ் குண்டுகளில்
வெடித்துச் சிதறிய
பிள்ளையின் சதையும்
பீரங்கிடம் விடுதலைபெற்ற
பிரமாண்ட தோட்டாக்களும் !



காதலி 

அவள் என் முன்னே வந்தால்...

பசி மறந்து போகிறது
மனதில் ஆயிரம்
பட்டாம் பூச்சிகள் பறக்கிறது
உலகம் பிரகாசமாகிறது
சூரியன் நிலவாகிறது
கோடைகாலமும் குளிர்கிறது
கூவம் காவிரியாய்த் தெரிகிறது
என்றெல்லாம் பொய்
சொல்லத் தெரியவில்லை...

ஆனால் அவள்
என் முன்னே வந்தால்...

ஏதோ செய்கிறது !



எதார்த்தம்

கிரிக்கெட் மைதானம்
ஒளிவீசிக் கொண்டிருக்கையில்
மின்மினிப் பூச்சிகள்
விளக்கேற்றிக் கொண்டிருக்கிறது
கிராமத்துக் குடிசையில் !




குமரி

கொல்லைப்புறத்தில்
குடியமர்த்தப்பட்ட
அழகான ராட்சசி
அரளிப்பூ !


13 comments:

  1. அனைத்தும் அருமை.ஆனாலும் பிடித்தவை தெரியாத காரணம்,காதலி ,இயற்கையின் பரிசு ..வாழ்த்துக்கள்



    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ஜேன்ஸ்...

      Delete
  2. படையெடுத்துப் போகும் பனித்துளியும், கவிதை எழுதி கழிகின்ற காலமும் மிகவும் பிடித்தது...

    நல்லதொரு தொகுப்பை தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்..

      Delete
  3. அகல்....
    அனைத்துக்குக் கவிதைகளையும்
    இரசித்துப் படித்தேன்.
    எந்தக் கவிதையைக் குறித்துச் சொல்வதென்றே
    தெரியவில்லை.
    ஒவ்வொன்றும் ஒரு படித்“தேன்“.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. //ஒவ்வொன்றும் ஒரு படித்“தேன்"// மிக்க நன்றி அருணா :)

      Delete
  4. Replies
    1. நன்றிகள் நண்பரே சௌந்தர்..

      Delete
  5. படங்களுடன் கூடிய அத்தனைக் கவிதைகளும் அருமையாய் உள்ளது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி கண்ணதாசன் சார் ...

      Delete
  6. nice,excellent,super apdinu ethana murai soldradhu sir..:-) irundhalum ippovum adhu tha solla pora..ellamey romba nalla iruku..particular ah idhu nalla irukunu mention panna theriyala..becoz ellamey avlo super iruku boss..congrats :-)

    ReplyDelete
    Replies
    1. Thodarchiyaana karuththirkku mikka nandri Thenmozhi madam :)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete