நாமளும் மாறனும் மக்களே !வணக்கம் !

நண்பர்கள் கூடி பேசும்போதும், இணையத்தளம், சமூக வலைத்தளங்கள் வழியாகவும் மின்சாரப் பிரச்சனை, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என்று முடிந்த அளவு அரசையும் அரசியல் வாதிகளையும் விமர்சனம/கேலிசெய்கிறோம் (என்னையும் சேத்துத்தான்). புரிதலோடு செய்யும் அந்த விமர்சனங்கள் கண்டிப்பாக தேவை. ஆனா நாம எல்லாரும் சரியா இருக்குறமானு பாத்தா கொஞ்சம் டவுட்டு தான்.

கரண்ட் இல்லேன்னு சொல்லுவோம் (அதுவும் உண்மை தான்), ஆனா கரண்ட் இருக்கப்ப யாரும் இல்லாத ஹால்ல லைட், டிவி, பேன் போட்டு விட்டுட்டு பெட்ரூம்ல கதை பேசும் ஆசாமிகள் எத்தன பேரு இருக்கோம் ? கொறஞ்ச பட்சமா ஒரு மாசத்துல ஒரு வீட்ல கால் யூனிட் கரண்ட் வீணாப் போகுது வச்சுக்குவோம். இந்தியாவுல எத்தன வீடு இருக்கு ? எவ்ளோ கரண்ட் வீணாகும். இத நாம யோசிச்சமா ?

லஞ்சம் பெருகிப்போச்சு, வெளிநாட்ல அரசியல் வாதிகள் கோடிகோடியா நமது பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள் அதுவே நமது நாட்டின் இந்த நிலைக்குக் காரணம் என்று விமர்சிக்கும் நம்மில் எத்தனை பேர், சரியான ஆவணங்கள் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டுகிறோம் ? ட்ராபிக் போலீசிடம் 50, 100 கொடுத்து தப்பிப்பதில்லையா ? வீடு/நிலம் வாங்கும் போது வாங்கும் விலைக்கா பத்திரம் பதிவு செய்கிறோம் ? அது கருப்புப்பணம் இல்லையா ? எத்தனை பேர் லஞ்சம் கொடுத்து வேண்டிய வேலைய சீக்கிரம் முடிக்கிறோம். யோசிச்சமா ?

அத்தியாவசிய பொருட்கள் விலை வானத்த தொடுதுன்னு சொல்வோம். ஆனா பால் இல்லாம குழந்தைகள் சாகும் நம்ம நாட்டுல, எண்ணை, பால், வெண்ணை, நெய்னு கோவில்ல கொண்டு வீணா எத்தன பேரு கொட்றோம். அபிசேகம் என்னும் பெயரில், ஒரு கோவில்ல மிகக் குறைந்த பட்சமா ஒரு லிட்டர் பால் தினமும் வீணாகுதுன்னு வைப்போம். இந்தியாவில் எத்தனை கோவில்கள். எவ்வளவு பொருட்களை வீணடிக்கிறோம்னு யோசிச்சமா ?

வீடு மற்றும் ஹோட்டல்களில் எத்தனை பேர் உணவுப் பொருட்களை விலைவாசி உயர்வை நினைத்து வீணடிக்காமல் இருக்கிறோம். யோசித்ததுண்டா ? இது ஒரு சின்ன உதாரணம் தான். இதன் பட்டியல் மிக நீளம்.

கறுப்புப் பணத்தை பதுக்கும், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்று அனைவரையும் நாம் தண்டிக்க வேண்டும் தான் மாற்றுக் கருத்தில்லை. ஆனா அதுக்கு முன்னாடி முடிந்த அளவு நாமளும் மாறனும் மக்களே.

லஞ்சம் வாங்காம எவண்டா வேல செஞ்சுதாரா ? நடைமுறை தெரியாம பேசாம உன் வேலயப்போயி பாருன்னு சிலர் என்னையும் கண்டிப்பா திட்டுவாங்க. இருந்தாலும் பரவாயில்லை. முடிந்தால் இதைப்பற்றிய விரிவான கட்டுரை புள்ளி விவரங்களுடன் எழுதுகிறேன்.

அன்புடன்,
அகல்

5 comments: Leave Your Comments

 1. உண்மை அமர்க்களம் சரியான விழிப்புணர்வுப் பதிவு வாழ்த்துக்கள் தொடருங்கள் நாளை நாடு உங்களை வணங்கும்

  அடுத்த பதிபவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் நன்றிகள் நண்பரே... விரைவில் எழுத முயற்சிக்கிறேன்..

   Delete
 2. நல்ல முயற்சி
  துவங்குங்கள் தொடர்கிறோம்
  வாழ்த்துக்களுடன்....

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் ரமணி ஐயா..

   Delete
 3. Best decide, for this what means that ramana movie.

  ReplyDelete