Monday 13 May 2013

பால் - சைவமா ? அசைவமா ?


எனது அலுவலகத்தில் சில நண்பர்கள் நீங்கல்லாம் நான்-வெஜ் சாப்படுறிங்க, நாங்கல்லாம் பியூர் வெஜிடேரியன்ஸ் என்று விளையாட்டாக அடிக்கடி கேலி செய்வார்கள். அதோடு மதிய உணவின்போது இந்தத் தலைப்பில் இரண்டு குழுக்களுகிடையே அடிக்கடி விவாதம் நடக்கும். சைவ உணவு அசைவத்தைவிட உடலுக்கு நல்லது பல உயிர்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்படுகிறது என்ற கூற்றை ஒத்துக் கொண்டு, அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்.

மாட்டுக்கறி சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றார்கள். மாட்டின் ரத்தம் சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றார்கள். ஒட்டுமொத்த மாடு சைவமா அசைவமா ? என்றேன். அசைவம் என்றே மீண்டும் பதில் வந்தது. சரி, பசுவும் அதன் உடல் பாகங்களும் அசைவம் என்றால், பசுவின் உடலில் இருந்து பிரியும் அதன் பால் மட்டும் எவ்வாறு சைவமாகும் ? என்ற எனது கேள்விக்கு யாரும் இன்னும் பதிலளிக்கவில்லை. (விளக்கம் இருந்தால் சொல்லுங்கள் எனக்கும் தெரியாது).

இதிலிருந்து நான் புரிந்துகொண்ட ஒரு அடிப்படை என்னவென்றால், இக்கால மனிதர்கள் சிலர் முட்டையை சைவம் என்றும் கல்கத்தாவில் வாழும் மக்கள் மீனை சைவம் என்றும் தங்கள் வசதிக்கும் பயன்பாட்டிற்கும் தகுந்தவாறு வரையறுத்துக் கொண்டார்கள். இதே போல் முந்தைய காலத்திலும் பாலை சைவம் என்றும் வரையருத்திருப்பார்களோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.

ஒவ்வொரு பொருளிலுமுள்ள (உதாரணம்: ரத்தம், பால்) மூலக்கூறுகளின் அடிப்படையில் சைவம் அசைவம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும், அந்த மூலக்கூறுகளும் மனிதனின் பயன்பாட்டிற்கேற்ப வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். எனவே எனது புரிதலின்படி, பசு அசைவம் என்றால் பாலும் அசைவமே.

குறிப்பு:


இந்தக் கேள்வியை கேட்டதால் நான் மாட்டுக்கறி உண்பவன் என்றோ, அசைவம் உண்பதை நியாயப்படுத்துகிறேன் என்றோ நினைத்துக் கொள்ளவேண்டாம். சைவமா ? அசைவாமா ? இதில் எது உயர்ந்தது என்பதல்ல எனது பார்வை. அந்த சைவமும் அசைவமும் எவ்வாறு வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும் என்ற எனது எண்ணத்தை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன்.

அன்புடன்,
அகல்

17 comments:

  1. ninga ketta kelvi sari tan.
    enakkum ungala pola thoni irukku..

    ana yar idamum kettathu illa

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் நண்பரே...

      Delete
  2. தெளிவான பார்வை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் நண்பரே...

      Delete
  3. iraivan padaippil saivam asaivam endrea verupaadu illai.ANAITHU JEEVA RASIKKUM THAI PAAL THAN MUDHAL UNAVU .naam thai pal kudithu valargirom aanal yaarum thaaiyey vetti undathillai.pasu veettu vilangu athan paal namaku pala vagaiyil unavaga payanpadugiradhu.singam,puli pondra mirugangal rathathai kudithu vaazhum mirugangal aanal pasu tharum paalai mattum undu vazhbavan manithan,atai kondru thinbavan mirugathirku samam aanavargal.ingey saivama? asaivama? enum aaraichiyai vittu vittu nee,oru uyiridathil uruvaagum paalai mattum kudikkum manithana?alladhu antha uyiraiyey kondru thinnum mirugama?endru therinthu kol..........

    ReplyDelete
    Replies
    1. உயிரை கொல்வதைவிட அதை தினம் தினம் ஏமாற்றி வதைப்பது அதைவிட கொடுமையானது என்பதை கொஞ்சம் தெரிஞ்சுகிட்ட நல்லாருக்கும்...

      Delete
  4. வணக்கம் அகல்.

    பொதுவாக ஓர் உயிரைச் சாகடித்து
    அதை நாம் உண்டால் அது அசைவம்.

    உயிரைக் கொலைசெய்யாமல் கிடைக்கும்
    பால் அசைவம் ஆகாது.

    முட்டையில் ஒரு கரு உள்ளதால் அது அசைவம்.
    ஆனால்... இப்பொழுது தயாரிக்கும் ஒயட்லாக் முட்டைகளில்
    குஞ்சு பொறிப்பதற்கான உயிர் அதனுள் இல்லை என்பதால்
    ஒயட்லாக் முட்டைகளைச் சைவம் என்கிறார்கள்.

    ஆனால் கடல் வாழ் உயிரினங்கள் அனைத்திலும்
    உயிர் உள்ளதால் அவைகள் அசைவம் தான்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அருணா அவர்களே... உங்கள் அழகான கருத்திற்கு நன்றிகள்.. ஆனால் உயிரை சாகடிப்பது அசைவம் என்றால், தாவரங்களும் சாகடிக்கப்பட்டே உண்ணப் படுகிறது. உயிர் விலங்குகளுக்கு மட்டுமல்ல தாவரங்களுக்கும் உண்டு (இப்படியான எனது கருத்தை பலர் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம் - இது ஒரு வாதமா என்று கூட கேட்கலாம்). அதனால் மனிதன் தனது வசதிக்கு தகுந்தவாறு எல்லாவற்றையும் வரையறுத்துக் கொண்டான் என்பதே எனது பார்வையாக இருக்கிறது.

      உயிரைக் கொள்வதைவிட அதை தினம் தினம் ஏமாற்றுவதும் வதைப்பதும் அதைவிட கொடுமையான விடயம் (மனிதன் கன்றுக் குட்டியை வைத்து தாயை ஏமாற்றி, கற்றுக் குட்டியை பட்டினி போட்டே பால் கறக்கிறான், பயன்படுத்துகிறான்).

      Delete
    2. // இப்பொழுது தயாரிக்கும் ஒயட்லாக் முட்டைகளில்
      குஞ்சு பொறிப்பதற்கான உயிர் அதனுள் இல்லை என்பதால்
      ஒயட்லாக் முட்டைகளைச் சைவம் என்கிறார்கள்//

      ஆனா நம்ம நாட்டுக் கோழி முட்டையவே சைவம் என்கிறார்கள் அருணா மேடம்...

      Delete
    3. பால் அசைவம் தான் ஏன் என்றால் ரத்தம் சைவம் என்றால் பால் சைவம் மாறாக இருந்தால் அது அசைவமே! அன்புடன் ராஜ்மோகன்.

      Delete
  5. பால் இருக்கட்டும்... மனிதன்...?

    ReplyDelete
    Replies
    1. பாலுக்கே இன்னும் விளக்கம் கிடைக்கல தனபாலன் சார் :)

      Delete
  6. சைவம் அசைவம் - ஜாதி மாதிரி மனிதன் பிரித்து அதற்கு அவனுக்கு ஏற்றா மாதிரி ஒவ்வொரு ஊர்க்காரனும் ஒரு வெண்டைக்காய் விளக்கம் கொடுத்தான்.

    தாய்ப்பால் குடித்த எல்லோரும் அசைவமே...!
    அவ்வளவு எச்சல் உடம்பில் உள்ள எல்லா நீரும்...all body fluids-ல் DNA இருக்கும்...யார் அதன் சொந்தக்காரன் என்று சொல்லமுடியும்...இது நூற்றுக்கு நூறு அசைவமே...!

    அவர்கள் நகத்தை கடித்து சாப்பிடும் நாகரிக மங்கைகள் - அசைவப் பிராணிகளே. அவனது வியர்வையை கண்ணீரை சுவைக்காத மனிதன் கிடயாது--அவனும் அவளும் மாமிச பட்சினியே...!

    கையில் அடிபட்டால் வரும் ரத்தத்தை நிறுத்த சிறுவயதில் வாயில் வைத்
    துக் கொள்வோரும் -- -மாமிச பட்சினியே...!

    சரி, ஒரு விவாதத்திற்காக, உயிரைக் கொல்லாமல் கோழியின் காலை மட்டும் அறுவை சிகிச்சை செய்து சாப்பிட்டால்...பல்லி வால் FRY சாப்பிட்டால் சைவமா? பல்லி வால் வளரும்...! சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்...

    அவ்வளவு ஏம்பா மனிதர்கள் எல்லோருமே - நர மாமிச பட்சினி; ஆம்,வாயில் முத்தம் கொடுத்தோர் எல்லோருமே - நர மாமிச பட்சினியே...!

    ReplyDelete
    Replies
    1. அருமையான விளக்கம் நம்பள்கி அவர்களே... கருத்திற்கு மிக்க நன்றி...

      Delete
    2. நம்பள்கி boss arumaiyana vilakkam.... :)

      Delete
    3. அருமையான விளக்கம்.

      Delete
  7. என்னை பொறுத்த வரை எதை நாம் உணவுக்காக எடுத்து கொள்கிறோமோ அப்பொழுது அவைகளின் உணர்சிகளை மற்றும் எதிர்ப்பை நம்மால் உணர முடிந்தால் அவ்வகை உணவுகள் அனைத்தும் அசைவமே .

    ReplyDelete