Tuesday, 28 August 2012

மாறுவது எப்போது ?

ஆங்கிலேயன் ஆண்ட காலத்தில்...

வெள்ளையன் வதம் செய்தான் 
தமிழன் வதைக்கப்பட்டான் 
இந்தியன் எதிர்த்து நின்றான்

இந்தியன் ஆளும் காலத்தில்...

இந்தியன் வதம் செய்கிறான்
தமிழன் வதைக்கப்படுகிறான்
வெள்ளையன் எதிர்த்து நிற்கிறான்

அவன்(ஆங்கிலேயன்) எடுத்துக்
கொண்டது ஆயுதத்தை
இவன்(இந்தியன்) எடுத்துக்
கொண்டது அரசியலை

இந்த உண்மையை ஒத்துக்கொள்ள
ஈங்குலோர் எத்தனை பேர் ?

வதைப்பவனும் மாறுகிறான்
எதிர்பவனும் மாறுகிறான்
வதைக்கப் படுபவன்
மாறுவது எப்போது ?

அன்புடன்,
அகல்

1 comment:

  1. நல்ல கேள்வி! காலம் பதில் சொல்லும்! நன்றி!

    ReplyDelete