தொலைதூர பேருந்து பயணத்தில்

மாலை நேரம் வேண்டும்
மலையோர பாதை வேண்டும்.
சில்லென சாரல் வேண்டும்
சலனம்தரா சாலை வேண்டும்,
அதன் உடலில் ஆங்காங்கே
வளைவும் வேண்டும்..!

உறங்காத ஓட்டுனர் வேண்டும்
உறக்கத்தை களைக்கா பேருந்தின்
சப்தம் வேண்டும்
தூக்கத்தின் ஏக்கம் வந்தால் - அதை
குரட்டையிட்டு துரத்தாதொரு
அன்பர் வேண்டும்..
மிளகாய் பொடி உண்டாலும்
அமைதிகாக்கும் அடிவயிறு வேண்டும்..!

மழலையின் அழுகுரல் வேண்டும்
அதை தணிக்க - தாய்
மார்போடணைத்து முத்தம் தரும்
சத்தம் வேண்டும்.
காதல் ஜோடியொன்று வேண்டும்
அவர்கள் கண்களால் செய்யும்
கசமுசாவும் வேண்டும்..!

புதுமண தம்பதி வேண்டும்
அவள் புது வளையல் அவ்வப்போது
சிணுங்க வேண்டும்.
அன்பினால், அழகான மனைவி வேண்டும்
அவளை மடி சாய்த்து, காது மடல் ஊர்ந்து,
கூந்தல் கோதுவதரியும் விரல்கள் வேண்டும்..!

மனைவியின் மடியில்
குறுந்தூக்கம் வேண்டும்
அவள் மார்பின் அடியில்
பெருந்தூக்கமும் வேண்டும்..!

வயது முதிவில் இருவர் வேண்டும்
அவர்கள் வாய்பாடும் "சுய புராணம்" வேண்டும்.
சோகத்தில் ஆழத்தில் சிலர் இருப்பின் - சற்று
ஆறுதல் தர அருகிலொரு நண்பர் வேண்டும்..!

இவைகளோடு சேர்ந்து..

அலட்டிக்கொள்ளா
ஆறேழு அழகான பெண்கள்
இருப்பதென்னவோ
பயணத்தில் ஒரு சிறப்பு..!

5 comments: Leave Your Comments

 1. அமர்க்களம் படப் பாடல் கேட்ட உணர்வு
  நன்றாக இருக்கிறது தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் நண்பா :)

   Delete
 2. Replies
  1. மிக்க நன்றிங்க :)

   Delete