சாக்கடைக்குள் சில சலனங்கள்

மகரந்த துகள்களின்
மென்மையான
பரிமாற்றத்தால்,

துளிர்விட்டு எழுந்த
தூய மொட்டுக்கள் 
நாங்கள்..

புன்னகையை சேகரித்து, 
பூத்துக் குலுங்க 
ஆசை கொண்டு

பத்து மாதம் காத்திருந்த 
பதுமைகள் நாங்கள்..

மொட்டவிழ்த்த நேரத்தில் 
முடிந்ததிந்த அத்யாயம்..! 

நாங்கள்.., 
காற்றடித்தும் சாயவில்லை 
கயவர்களும் பறிக்கவில்லை, 

அந்த ஆணிவேரே 
ஆசைப்பட, 
அறுத்து விட்டது 
ஒற்றைக் கிளை..! 

மரம் சரியா.? 
பரிமாறிய 
மகரந்தம் சரியா..? 
என்ற அடிப்படையைத்
தெரிந்து கொள்ள..,

பேசக் கூட முடியவில்லை 
பிறந்த சில நிமிடத்தில்..

பிறப்பிற்கும் 
இறப்பிற்கும் நடுவே..,

நடப்பது யாதென்ற 
சந்தேகம் தீராது..
சடலமாகிறது 
எங்கள் உடல்.,

சரியாய் யாரும் 
பார்க்காத
அந்த சரிவான 
சாக்கடைக்குள்..

அடித் தாயே...

உயிரோடு தூக்கி 
எறிந்தாய் என்னை..

சடலமாய் தத்தெடுத்து 
அந்த சாக்கடை...

உன்னிலும் அது
ஓராயிரம் மடங்கு
உயர்ந்த தல்லவா..!?

5 comments: Leave Your Comments

 1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிரோஷி :) ..

  ReplyDelete
 2. ரசிக்கக் கூடிய வர்கள்
  ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் பல நண்பரே சிட்டுக்குருவி

   Delete
 3. nice....avarkalin thavaruku evarkaluku thandanai......

  ithu than ulakama? ithu than valkaiya?

  ReplyDelete