Sunday, 14 October 2012

‎"கிச்சு கிச்சுப் பண்ணும் கிறிஸ்துவப் பெண்ணே

"கிச்சு கிச்சுப் பண்ணும் கிறிஸ்துவப் பெண்ணே பச்சை முத்தம் போடவா"

என்று எழுதியிருக்கிறீர்களே...பச்சை முத்தம்-சிவப்பு முத்தம் என்றெல்லாம் முத்தங்களுக்கு நிறம் உண்டா?  என்று நீர்ப்பறவை படத்திற்கு வைரமுத்து எழுதிய இந்த வரிகளுகளைப் பார்த்து இயக்குனர் சீனுராமசாமியின் கேள்விக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின் பதில்..

பச்சை முத்தம்...

பச்சையென்றால் இங்கே நிறமல்ல. குணம். பெருந்தலைவர் காமராஜரை பச்சை தமிழர் என்று குறிப்பிடுவோம். பச்சை என்றால் அசல் என்று அர்த்தம். போலி முத்தம் போடாதே பெண்ணே. அசல் முத்தம் போடு என்று அதற்கு அர்த்தம். இது முதல் பொருள்.

பிறந்த குழந்தையைப் பச்சைக் குழந்தை என்பார்கள். அங்கே பச்சை என்பதற்கு புதிது என்று பொருள். இதுவரை எனக்கு முத்தமென்ற அனுபவம் இல்லை. இதுதான் முதல் முத்தம். அதனால் எனக்கு புத்தம் புதிய முத்தம் போடு என்பது இரண்டாவது பொருள்.

மூன்றாம் பொருள் ஒன்று உண்டு. அதுதான் முக்கியமான பொருள். அரைகுறை முத்தம் போடாதே. அது அழிந்துவிடும். பச்சை குத்துவது போல் நச்சென்று ஒரு முத்தம் போடு என்பது மூன்றாம் பொருள். இத்தனை அர்த்தம் தெரிந்தால்தான் முத்தம் ருசிக்கும்" .


நன்றி: ஒன் இந்தியா.

5 comments:

  1. ஐயோ பச்சைக்கு இவ்வளாவு அர்த்தமா...:
    தெரிந்து கொண்டேன் இனி வைரமுத்து சார் பாணியில் நானும் பச்சை முத்தம் கேட்டிட வேண்டியதுதான்

    ReplyDelete
  2. கேளுங்க பாஸ் கேளுங்க :)

    ReplyDelete
  3. இப்பதான் "பச்சைப்பொய்' என்பதின் சரியான அர்த்தம் கிடைத்தது

    ReplyDelete
    Replies
    1. எனக்கு கூட இத படிச்ச அப்பறந்தான் தெரிஞ்சது பாஸ் :)

      Delete
  4. intha mootum kalanthu kidaipathu kadinam..

    annalum athai thanthaval en thai....
    :)

    ReplyDelete