Saturday, 13 October 2012

முதல் காதல், முடியாத அத்யாயம்

மாலை 3 மணி...

இன்று திருமணமாகி நாளையே
குழந்தை வேண்டும் - என
எப்போதும் கேட்கும் client
இப்போதும் கேட்டான்
பொழுது விடிவதற்குள் 
ப்ராஜெக்ட் வேண்டுமென..

அடித்து பிடித்து முடித்து கொடுத்து

அண்ணாந்து பார்த்தேன்...

இந்த முறை,

ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப் போன 
பெரியமுள் ஒன்றைக் காட்ட,
சிறிய முள் இரண்டைக் காட்டியது..

சில அடிகள் அளந்து 

வெளியே வந்த நேரம்
லிப்ட் failure...

அடுத்தவனை நம்பாதே என 

அப்பா சொன்னது
அப்போது நினைவிற்கு வர..

பதினைந்தாவது மாடியிலிருந்து

பாதங்கள் படிகளை என்ன ஆரம்பித்தது..

களைப்பில், கண்கள் சொல்வதை

கால்கள் கவனிப்பதா யில்லை...

முட்டி மோதி முன் வாசல் அடைந்தேன்..


வீட்டிற்கு போக வண்டியேது மின்றி,

பாதங்கள், இரண்டு மயில் தூரம்
இன்னும் பாதயாத்திரை
செல்ல வேண்டியிருந்தது...

பயணத்தை தொடர்ந்தேன்..


வழியில்...


ஏழைக்கு கூலி தரும் எஜமான் போல

இரு வெள்ளை நாய்கள் எனை
விரோதமாய் பார்த்தது...

பூங்காவில் சில பூக்கள்

புன்னகையை அவிழ்க்க,
அதை கால் கடுக்க காத்திருந்து,
கண்ணடித்து காதலித்து கொண்டிருந்தது
அந்த கரண்ட் மரத்து கண்ணாடி விளக்கு..

பனித்துளி சில மலைதுளியாகி

என் உடலோடு உறவாடிக்
கொண்டிருந்தது...

திடீரென.. 

எங்கோ இடி விளுந்ததாய் ஒரு சத்தம்..

கண்ணுக் கெட்டும் தூரத்தில்,

காரிருள் நிறத்தில், 
கவிழ்ந்து கிடந்தது
அந்த கார்..

தடம் புரண்ட தண்டவாளமாய்

தவறி நடந்த கால்கள்,
சாரப் பாம்பின் வேகத்தில்
சீறிப் பாய...

சில நொடிகளில் கண்டேன்...


பாதி நினைவில்.,

கை முறிந்த நிலையில்
காருக்கு வெளியே அவன்..

நினை விழந்த மழலையாய்,

உடைந்து விழுந்த சிலையாய்
கார் கண்ணாடி ஓரத்தில் அவள்...

இதை கண்கள் கண்டதும்,

என் இதய துடிப்பின் ஓசையை
ஒவ்வொரு நரம்பும் எடுத்துச்
சொல்லியது...

உதவி வேண்டி உரக்கக்

கத்தினேன்...

கேட்க ஆள் எவருமின்றி

கேட்டது எனக்கு மட்டும்...

மனம் புயலுக்குள் சிக்கிய

பூவாய் தவிக்க,

ஆம்புலன்ஸ் என்னைத் தேடி

என் அழைப்பு அலைக் கற்றையாய்
பறந்தது போனது..

அரை மணி நேரத்தில்

வண்டியும் வந்தது..

ஒருபுற படுக்கையில் அவன்.

மறுபுறம் அவள்..
ஓரத்தில் உட்காந்து
கொண்டேன் நான்...

சுத்தமான காற்று இருந்தும்,

அவளுக்கு சுவாச காற்று
தேவைப் பட்டது...

தலை சற்று சருக்கவே,

அவளை தாங்கிக்கொள்ள 
மடி கொடுத்தேன்...

சைரன் பறந்தது...


பௌர்ணமி நாளில்

மடியில் ஒரு நிலவு...

அந்த நிலவிற்கு துணை

கோளாய் நெற்றிப் பொட்டு..

சண்டையிட்டுக் கொள்ளாத,

இரண்டு வில், இரண்டு அம்பு.
அவள் புருவமும் விழிகளும்..

அடர்ந்த காட்டுக்குள்,

அரவணைக்கும் 
ஒற்றையடிப் பாதையாய்
அவள் உச்சந்தலை வகிடு..

அதைப்
 பாதுகாக்கும் பூட்டாய்
நெற்றியில் ஒரு பொட்டு...

பூக்கடையில், பூவிற்கு 

தெளிக்கப் பட்ட தண்ணீராய் 
வியர்வைத் துளி..

குயிலின் நிறத்தில்,

மின்னும் மயில் தோகையின் 
நீளத்தில் கூந்தல்..!

இந்த காட்சிகள் என் கடந்த கால

காதலை கண்ணில் காட்டியது..

என்னோடு சிரித்துப் பேசிய பூக்கள்..

Bye என்று அவள் சொல்லிச் சென்ற பூங்கா..

அவள் அதைச் சொன்னதும்,

வலியில் துடித்த விழிகள்,
வெளியில் கூட சொல்லிக் 
கொள்ள வில்லை...

உளி அடித்து பிறந்த வழியை,

சிலை ஊராருக்கு என்று சொல்லியது..!?

உண்மையைச் சொன்னால்...


என் காதல் காவிரியாகவும்,

அவள் காதல் கடலாகவும்
இருந்தது - அந்த
அமெரிக்க மாப்பிளை
ஆட்டத்தைக் கலைக்கும் வரை..

அது,

திருமணமாகாத அமெரிக்க மாப்பிள்ளைகள்
எனக்கு தீவிரவாதிகளாக தெரிந்த காலம்.

அடுத்தவன் காதலியை

கொத்திச் செல்லும் இவர்களுக்கு
கருட புராணத்தில் தண்டனை
உண்டா ? - என 
அம்பியிடம் கேட்டு, 
அந்நியனிடம் முறையிட நினைத்த காலம்..

ஆனால் எனை ஏமாற்றிச் சென்ற

அவள் மீதி ஏனோ 
துளியளவும் துயர மில்லை...

ஹலோ, எனக்கு ஒன்று மில்லையே

என அருகில் இருந்த அவன் 
எட்டாவது முறையாக கேட்க,

நிகழ் காலத்திற்கு

நினைவுகள் திரும்பியது..

கட்டிய மனைவியை பற்றி

இதுவரை சற்றும் சிந்திக்காத
கல் நெஞ்சுக் காரனைக் கண்டு
ஆச்சர்யம் அருவியாய் கொட்டியது..

என் விரலில் ஏதோ ஊறுவதாய்

அறிந்து உற்று நோக்கினேன்..

அவள் தலையில் ரத்தம் கசிய,

அதைக் கண்டு நான் கத்திய வேகத்தில்,
கார் hospital வாசலை வந்தடைந்தது..

கருவேலங் காட்டு சில் வண்டின்

சத்தமாய் ICU அலறிக் கொண்டிருந்தது.

அவள் உயிரைக் காக்க 

அவர்கள் ரத்தம் கேட்க...

ஒரு பாவமும் அறியாத 

எனது O நெகடிவ் ரத்தம்,
HIV டெஸ்டுக்கும் கட்டுப் பட்டு,
அவள் உடலில் ஓட ஆரம்பித்தது..

மருத்துவர் 24 மணி நேரம் கெடு சொல்ல..


நான் வேண்டியவர்களுக்கு 

சொல்லி விட்டு,
தனிமையில் நடந்தேன்..

வீடு என்னை வரவழைத்தது.

கட்டில் ஒரு கை கொடுத்தது..

அன்று அந்த பூங்காவில்...


BYE என்று சொல்லி - என்

உயிரை ஊசியால் குத்திச்
சென்றவளின் உடலில்,
இன்று என் உதிரம் 
ஓடிக் கொண்டிருகிறது..

என் ஒவ்வொரு செல்களிலும்

இன்றும் வாழும் அவள் உயிர்,
எப்படியும் அவளை
உயிர்பிக்கு மென்ற நம்பிக்கையோடு...

கதவை மூடியது விழிகள்

வழிந்து விழுந்தது சில துளிகள்..

இது என் முதல் காதல்,

முடியாத அத்யாயம்..!

20 comments:

  1. மிகவும் அருமை நண்பரே அனைத்து வரிகளும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது


    //ஏழைக்கு கூலி தரும் எஜமான் போல//

    //உளி அடித்து பிறந்த வழியை,
    சிலை ஊராருக்கு என்று சொல்லியது..!?//

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி பாஸ் ..

      Delete
  2. காதல் என்பது சுகமான வலி
    இது உண்மை சம்பவமா?

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹா இந்த கவிதையில் வரும் கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனையே :) ...

      Delete
  3. கற்பனை என்றே சொல்ல முடியாது அகல். ஒவ்வொரு வார்த்தையிலும் உயிர் இருக்கிறது வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. மிக்க நன்றி ஆதிரா :)..

    ReplyDelete
  5. சுழலில் சிக்கி இழுபடும் இலைபோல் உங்கள் படைப்புக்குள் தொலைந்து மீள்கிறது மனசும்..மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே..

      Delete
  6. உயிரின் (காதல்) வழியை எடுத்துரைக்கும் வார்த்தைகள் . .வாழ்த்துக்கள் அகல் . .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அசோக்..

      Delete
  7. karpanaiya???????????? yana akal ipadi solitenka.... n karpanaiyil antha nikalvai parthen...unkalaium,unkal kathalaium...but yemathitenkalae karpanai nu soli....

    ReplyDelete
    Replies
    1. Ha ha... Yes, ithu oru karppanai kavithai....

      Delete
    2. இதுவரைக்கும் எத்தனை முறை படித்தேன் என்று ஞாபகம் இல்லை(min 30).. என் கண்ணில் படும் போது எல்லாம் படிக்கிறேன்... கற்பனை என்று நம்ப முடியவில்லை .... இந்த ஒரு கவிதையே உங்கள் தகுதி சொல்லிவிடும் ...வாழ்த்துகள்..

      Delete
  8. உண்மை சம்பவம் போலவே இருக்கு.. அம்பி அந்நியன் வரி ,பௌர்ணமி நாளில்
    மடியில் ஒரு நிலவு வரிகள்... நல்ல கற்பனை :)

    ReplyDelete
    Replies
    1. //நல்ல கற்பனை// கவிதை மொத்தமும் கற்பனை தான்.... நன்றிகள் திவ்யா..

      Delete
  9. super nu oru varthaiyil sla mudiala... Ungal ninaivugalodu nan satru neram payanitha intha nimidangalai marakamudiyathu nanba...

    ReplyDelete
  10. intha kathaiyai padikkum pothu kathaiyoda serthu katchikalum pinnoottamaka varukinrathu.
    mikavum arumai.

    ReplyDelete
  11. I like this soooo much. And it's now one of my favorite poetry.

    ReplyDelete