அந்த முத்தம் போல் இல்லையடி

உன் தந்தைக்கு பயந்து
தாயை சமாளித்து
தம்பியிடம் பொய் சொல்லி
ஐநூறு மயில்களுக்கு
அப்பால் இருந்து

பட்டும் படாமல்....

அந்த நள்ளிரவில் தந்த
ஒற்றை முத்தம் போல்
இல்லையடி..

இன்று என் அருகில் இருந்து
நீ தரும் ஆயிரம் முத்தங்கள்..!

9 comments: Leave Your Comments

 1. அது களவு!
  இது கற்பு!

  அருமையான கவிதை.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா... உண்மை உண்மை அருணா செல்வம் :)

   Delete
 2. அருமையான கவிதை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் தமிழ்செல்வி :)

   Delete
 3. உண்மதான்
  பிரிவில்தான் தெரிகிற உண்மையான பாசம் அருகில் இருக்கும் போது தெரிவதில்லை

  ReplyDelete
 4. Replies
  1. மிக்க நன்றி நண்பரே சிட்டுகுருவி :)

   Delete
 5. பட்டும் படாமல் வருடும் வரிகள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் சசிகலா :)

   Delete