அவள் கூந்தல்...
கருப்பு புதைகுழி
அதன் நீளம்...
வட்டியோடு
வளர்ந்த அசல்
அவள் உச்சந்தலை வகிடு...
அடர்ந்த காட்டிற்குள்
அழைத்துச் செல்லும்
ஒற்றையடிப்பாதை
அவள் பொட்டு...
பாதைக்கு போடப்பட்ட
பூட்டு
அவள் நெற்றி...
விலைக்கு
கிடைக்காத வானவில்
அவள் விழிகள்...
குளத்தில் குளிக்கும்
குட்டி மீன்கள்
அவள் மூக்கு...
மூங்கில் தண்டில்,
நிலவில் அமைத்த
முக்கோண கூடாரம்
அவள் இதழ்கள்...
அதிகாலையில்
இறக்கிய பனங்-கள்
அவள் கன்னம்...
கலக்கி வைத்து
காத்துக்கிடக்கும்
தேன்-கிண்ணம்
அவள் கழுத்து...
ஒளிவீசும்
நிலவைத் தாங்கும்
ஒற்றைக்கால்
சுமைதாங்கி
அவள் மார்பகங்கள்...
படர்ந்து கிடக்கும்
பந்தலில்
மலரத் துடிக்கும்
மல்லிகை மொட்டுக்கள்
அவள் இடை...
மானுடர்கள்
வழுக்கி விழும்
மதுபானக்கடை
அவள் விரல்கள்...
கணு வைத்து
நறுக்கப்பட்ட
கரும்புத் துண்டுகள்
அவள் அங்கம்...
கோலாரில்
ஒளித்து வைத்த
மாசில்லா தங்கம்
அவள் உடல்...
வளைந்து செல்லும்
வைகையாற்றில்
உயிரைக் கொள்ளும்
நீர் சுழற்சி
அவள் பாதம்...
செடியில் உதிர்ந்த
பூக்களில் மீதம்
அவளொரு அழகி,
எட்டாவது அதிசயமாய்
எட்டிப் பார்க்கும்
பேரழகி..!
கருப்பு புதைகுழி
அதன் நீளம்...
வட்டியோடு
வளர்ந்த அசல்
அவள் உச்சந்தலை வகிடு...
அடர்ந்த காட்டிற்குள்
அழைத்துச் செல்லும்
ஒற்றையடிப்பாதை
அவள் பொட்டு...
பாதைக்கு போடப்பட்ட
பூட்டு
அவள் நெற்றி...
விலைக்கு
கிடைக்காத வானவில்
அவள் விழிகள்...
குளத்தில் குளிக்கும்
குட்டி மீன்கள்
அவள் மூக்கு...
மூங்கில் தண்டில்,
நிலவில் அமைத்த
முக்கோண கூடாரம்
அவள் இதழ்கள்...
அதிகாலையில்
இறக்கிய பனங்-கள்
அவள் கன்னம்...
கலக்கி வைத்து
காத்துக்கிடக்கும்
தேன்-கிண்ணம்
அவள் கழுத்து...
ஒளிவீசும்
நிலவைத் தாங்கும்
ஒற்றைக்கால்
சுமைதாங்கி
அவள் மார்பகங்கள்...
படர்ந்து கிடக்கும்
பந்தலில்
மலரத் துடிக்கும்
மல்லிகை மொட்டுக்கள்
அவள் இடை...
மானுடர்கள்
வழுக்கி விழும்
மதுபானக்கடை
அவள் விரல்கள்...
கணு வைத்து
நறுக்கப்பட்ட
கரும்புத் துண்டுகள்
அவள் அங்கம்...
கோலாரில்
ஒளித்து வைத்த
மாசில்லா தங்கம்
அவள் உடல்...
வளைந்து செல்லும்
வைகையாற்றில்
உயிரைக் கொள்ளும்
நீர் சுழற்சி
அவள் பாதம்...
செடியில் உதிர்ந்த
பூக்களில் மீதம்
அவளொரு அழகி,
எட்டாவது அதிசயமாய்
எட்டிப் பார்க்கும்
பேரழகி..!
ReplyDeleteஅவள் இடை...
மானுடர்கள்
வழுக்கி விழும்
மதுபானக்கடை// ''மதுபானக்கடை'' இது போன்றதொரு ஒப்பீட்டை தவிர்க்கலாமா? அழகாக கோர்த்து, சேர்த்த வார்த்தைகளுடன் இது ஒட்டவில்லை. இளையராஜாவின் ஓவியம் போலவே கவிதையும் வெகு அழகு!!!!
கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே ராபர்ட்...
Deleteஅருமையான உவமைகளுடன் அழகிய கவிதை!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மிக்க நன்றி அன்பரே அருணா செல்வம் :) ...
Delete//அவள் இதழ்கள்...
ReplyDeleteஅதிகாலையில்
இறக்கிய பனங்-கள்//
alzakiya karpanai akal...puthithai ullathu ithu...