கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் நான் ப்ளாக் ஆரம்பிச்சேன். எனக்கு தெரிஞ்சது கொஞ்சம் கவிதை எழுதுறது இல்லேனா புகைப்படம் எடுப்பது. அப்பப்ப சிறுகதைகள். ஆனா என் அனுபவங்கள இதுவர நான் எழுதுனதில்ல.
அதையும் கொஞ்சம் தொட்டுப்பாக்கலாமேனு தான் இந்தப் பதிவு(ஒரு கொலை முயற்சி). என்னோட இந்த அனுபவத்த நீங்களும் தெரிசுக்கங்க (நான் இங்க அறிவுறயெல்லாம் சொல்லலைங்கோ). உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.
குறிப்பு:
இந்த கதையில் வரும் கதாப்பாத்திரங்கள் யாவும் கற்பனையல்ல.
அது என்ன தலைப்பு "பிச்சை எடுத்தும் குவாட்டர் அடிப்போம் - நம்ம ஊர் (குடி)மகள்கள்". தலைப்பு கொஞ்சம் கொலவெறியா இருக்க..? அது சரி எதுக்கு இந்த தலைப்பு..? நடந்தது என்ன.?
இங்க நாம பேசப் போறது, கலாச்சாரம். பாரம்பர்யம், பண்பாடுன்னு சொல்லி நாம மார்தட்டிக்கொள்ளும் நம்ம தமிழ்நாட்ல இருக்க சில பெண்களைப் பத்தி தான். சரிவாங்க நேரா விசயத்துக்கு போகலாம்.
நான் ஹைதராபாத்ல வேல பக்காரதால, சென்னை வழியா சிலமுறை ஊருக்கு போறது வழக்கம்(சொந்த ஊர் திருச்சி பக்கம்). சென்னைல சொந்தகாரங்க இருந்தாலும் நான் பெருசா அங்கெல்லாம் போறதில்ல.
அன்னைக்கினு பாத்து, என் அப்பா., நீ அவங்க வீட்டுக்கு வாரதே இல்லேன்னு தூரத்து சொந்தம் பெரியப்பா என்ட கொறையா சொல்றர்ரா... அதுனால இந்த முறை அங்க போய்ட்டுவாடான்னு சொல்ல, ரயில விட்டு எறங்குனதும் நேரா நங்கநல்லூர்ல இருக்க பெரியப்பா வீட்டுக்கு போனேன்.
அங்க போனா ஒரு பெரிய அதிர்ச்சி. என் பெரியப்பா தம்பி பொண்ணுக்கு அவசர கல்யாணம். ஆனா அவ கல்லூரி தான் போயிட்டு இருந்தா. இந்த அவரசர கல்யாணத்துக்கு என்ன காரணம்னு அக்கம் பக்கத்துல விசாரிச்சா, கரணம் பெருசா ஒண்ணுமே இல்லைங்க. நம்ம தமிழ் படத்துல எப்பவும் பாக்குற அதே காரணம் தான் - காதல்.
அவ காலேஜ்ல ஒருத்தன லவ் பண்ணிருக்கா. எப்படியோ வீட்டுக்கு அந்த விஷயம் தெரியவர(எப்டி தெரிஞ்சுருக்கும்.. சிட்டுக்குருவிகள் பறந்து திரியையில நம்ம பங்காளிக பாத்துருப்பாங்க).அப்பறம் என்ன... காதலுக்கு சிவப்பு கொடி. அவளுக்கு இவன் தான் மாப்லேன்னு முன்னாடியே முடிவு பண்ணி வச்ச சொந்தகார பையனோட அவசர கல்யாணத்துக்கு பச்சைக்கொடி. (இதெல்லாம் அவ பொறந்து பால் குடிக்கறதுக்கு முன்னாடி எடுத்த முடிவுங்கோ, மாத்தமுடியாது)
என்னடா தலைப்புக்கு சம்மந்தமில்லாத கதை சொல்லி மொக்க போடறேன்னு பாக்குறிங்களா..? இதோ இப்ப சொல்லியரங்கே.
வழக்கம் போல பொண்ணு அழுதுகிட்டே பல்லாவரத்துல உள்ள முருகன் கோவில் மணவரையில வந்து ஒக்காந்தா. கோவில் வாசல்ல நெறைய திடகாத்தரமான உடம்போட சில பிச்சைக்காரர்கள் கூட்டம். அதில் பல பெண்களும் கூட. கல்யாணம் ஒருவழியா முடிஞ்சது. அடுத்து பக்கத்து ஹோடெல்ல சாப்பாடு. சாப்ட்டு வெளிய வந்து, அந்த ஏரியாவுலயே இருந்த ஒரே ஒரு மரத்து பக்கத்துல நின்னு கொஞ்சம் காத்து வாங்கிட்டு இருந்தேன்.
மரத்துக்கு முன்னாடி ஒரு ஒயின் ஷாப். அந்த கடக்காரனோட சண்டைய போட்டுகிட்டே ரெண்டு பேரு சரக்கு வக்கினாங்க. இன்னொருத்தர் பக்கத்து கடையில முறுக்கு, தண்ணி பாட்டில், பிளாஸ்டிக் கிளாஸ் அப்பறம் தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் ஊறுகாய்.
ஏதோ கொஞ்சம் மெதுவா போனா ஏர்போர்ட்டல flight ட தரவிட்டுர்ற வேகம். மூணு பேரும், நான் இருந்த மரத்தடிய வாங்கின மூலதனத்தோட ஒன்னு கூடினாங்க. அவசர அவசரமா மூடி திருகாம பாட்டில் திறக்கப்பட்டது. ஊறுகாயும் முறுக்கும் சை-டிஷ். மூனு பேரும் மூணு குவாட்டர முடிச்சாங்க.
இங்க கவனிக்கவேண்டிய விஷயம் என்னனா, சரக்கடிச்ச மூணு பேரும் 45 வயதுக்கு மேல் இருக்கும் தமிழ்ப் பெண்மணிகளே. அடிச்ச நேரம் காலை சுமார் 10 மணி. எனக்கு தெரிஞ்ச வரை அவங்க காலை சாப்பாடு சாப்பிட்டுருக்க வாய்பில்ல. சரக்கடிக்க விரதம் இருந்துருப்பாங்கனுதான் தோனுச்சு.
இவங்க pub, bar னு சுத்துற சில IT பொண்ணுங்க இல்லைங்க. இவங்க தான் அந்த கோவில் வாசலில பிச்சை எடுத்துட்டு இருந்த கொழுத்த ஆசாமிகள்.
அப்போது எனது மொபைலில் பதிவு செய்த சில ஆதாரங்கள்.
இப்படியான பிச்சைக்காரர்கள் வளர்றதுக்கு கரணம் யார்..?
வேறயாரு சாத்சாத் நாம தான்..!
இதுக்கு இன்னொரு காரணம், தங்களோட மனிதாபிமானத்த இப்படித்தான் காமிக்கமுடியும்னு நெனச்சுகிட்டு, நம்ம ஊர்ல இன்னும் நெறைய கதர் வேட்டிகள், பேண்ட்டு சர்ட்டுகள், பட்டு சேலைகள், சுடிதர்-னு சும்மா ஏக போகமா இருக்காங்க. அதோட லவ் பண்ற புள்ளைய கவர்ந்து இழுக்க காச வாரியிறைக்கும் காளையர் கூட்டமும் பல..
அதுக்காக நான் உதவியே செய்யவேண்டாம்னு சொல்லல.. அப்படி செய்யும் பட்சத்தில், குறைந்த பட்சம் இத கவனிங்க.. நீங்க உதவி செய்யப் போறவர்,
1 . நாம் செய்யும் உதவி சரியான நபருக்கு செல்லவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். மற்றும் நீங்க உதவி செய்யப் போறவர்,
2 . உடல் நலம் முற்றிலும் மெலிந்தவர..?
3 . மிகவும் வயது முடிந்தவர..?
4 . மனநலம் குன்றியவர..?
5 . அவரால் வேறு வழியில் வாழ்வை நகர்த்த முடியாத இயலாமையா..?
இன்னும் சில காரணங்களுக்கு மட்டும் நீங்க யோசிச்சு பண உதவி செய்யலாம். (நான் ஆரம்பத்துல சொன்னமாதிரி இது என் அறிவுரையெல்லாம் இல்லிங்கோ).
அப்படி செய்யலேனா ஒன்ன மட்டும் நல்லா ஞாபகம் வெச்சுக்கங்க..
நீங்க குடிக்காம சேத்த பணத்துல வேற எவனாச்சும் குடிப்பான்/குடிப்பாள்.
இன்னொரு விஷயம். இத மீறியும்பண உதவி செஞ்சா குற்றவாளி யாருன்னு தெரியுமா..? நீங்க தான்..
ஆமா.., குற்றம் செய்யரவனவிட அத செய்ய தூண்ரவந்தான் குற்றவாளின்னு நம்ம சட்டம் தானே சொல்லுது.
நல்ல வேல நான் குற்றவாளி ஆகல.. ஏனா அந்த குவாட்டருக்கு நான் காசு கொடுக்கல பாருங்க..!
மேட்டர சொல்லி முடிச்சாச்சுங்க..
இதுக்கு நீங்க எவ்ளோ கமெண்ட் வேணும்னாலும் கொடுக்கலாம் நான் ஏதும் சொல்ல மட்டேனுங்கோ :).
அடுத்த அனுபவத்தில் சந்திப்போம். நன்றி..!

இவ்ளோ நேரமா என்னமோ இருக்குன்னு படித்தேன்.
ReplyDeleteம்ம்ம் நல்ல மேட்டர்தான்.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.. இப்பிடியும் நடக்குது என்னத்த சொல்ல :)
Deleteபிச்சை எடுத்துவிட்டு அந்த காசில் குடிக்கும் குடிகாரர்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன்..இருந்தும் வயதானவர்களை பார்க்கும் போது மனிதாபிமானம் வெளியே வந்து விடுகிறது
ReplyDelete//இருந்தும் வயதானவர்களை பார்க்கும் போது மனிதாபிமானம் வெளியே வந்து விடுகிறது// உண்மைதான் நண்பரே.. ஆனால் நல்ல மனிதாபிமானத்தை தவறாக பயன்படுத்த ஒரு பெரிய கூட்டம் இருக்கத்தான் செய்கிறது :( ..
Deletenenka namburenkalo nambaliyo akal..inaiku than bus stop la uthavi kekuravankala pathitu itha pathi "kakkai sirakinile" kita karuthu kekanum nu ninachen....anal inte intha padaipai padithen..mikka nandri....
ReplyDeleteanalum vayathanavarkalai pakum pothu kai neluthu..analum yathanai peruku than kuduka mudium solunka......