Thursday 8 November 2012

எனது குறுங்கவிதைகளில் சில .. பாகம் 3

முதல் இசை

அன்னையின்
இதயத்துடிப்பு..

மனிதனை
மயக்கும்
முதல் இசை..!



புகைப்படங்கள்

நமது
வண்ணமயமான
வாழ்க்கையின்
பக்கங்களை
புரட்டிக் காட்டுகிறது...

"கருப்பு வெள்ளை"
புகைப்படங்கள்..!



அந்தி வானம்

கதிரவன்
ஒளியை
கொடையாகக்
கொடுக்க...

வாங்கி வாங்கி
சிவந்து போன
கைகள்...

அந்தி வானம்..!




காதல் - உயர்திணைக்கும் அஃறிணைக்கும்

இரவில்
நடமாடும்
நங்கைகளை

கண்ணடித்து
காதலிக்கிறது

விட்டு விட்டு
எரியும்
சாலையோர
மின்விளக்கு..



மழைக்கு பிறகு

இதுவரை
சேர்த்துவைத்த
பாலை

பூமிப்
பிள்ளைகளுக்கு
ஊட்டிவிட்டு

வற்றிய
மார்புடன்
வானம்..!



வீராப்பு 

மழைக்கு பயந்து
ஒளிந்து கிடந்த
வானவில்...

அது விலகியதும்...
வீராப்பாய் வானில்...!




16 comments:

  1. சிறப்பான கற்பனை வளம் கொண்டு தீட்டிய
    உங்கள் கவிதைத் துளிகள் அருமையிலும்
    அருமை !!!!!............வாழ்த்துக்கள் மேலும்
    தொடருங்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கவிதையைப் பற்றின கருத்திற்கும் மிக்க நன்றி சகோ அம்பாளடியாள்.. :)

      Delete
  2. சிறப்பான சிந்தனை வளம் மிக்க கவிதைகள்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றிகள் நண்பரே சுரேஷ்..

      Delete
  3. படங்களும் கவிதையும் சூப்பர். வீராப்பு மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றிகள் முரளி சார் :)..

      Delete
  4. நறுக்குத் தெறித்தது போல் நயமான கற்பனையில் விளைந்த கவிதைகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் ஐயா..

      Delete
  5. படங்களும் அதற்கு முழுவதும் பொருந்துமாறுமான வரிகளும் அற்புதம்

    ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே சிட்டுகுருவி :)

      Delete
  6. முதல் இசை முதல் அனைத்துமே அருமை

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி பாலன் சார்..

      Delete
  7. அனைத்தும் அற்ப்புதமாக உள்ளது... தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் நண்பரே...

      Delete
  8. romba nala iruku akal....yathu best nu sola mudiyala....analum வீராப்பு, அந்தி வானம் , மழைக்கு பிறகு moontum piramatham...

    ReplyDelete