Thursday 2 May 2013

அகல் மொழி பத்து - பாகம் 1



1. உங்களைப் பற்றி முழுமையாக எவரிடமும் சொல்லாதீர்கள். சிலர் உங்களது பலவீனத்தை அவர்களது பலமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.

2. பள்ளி, கல்லூரிகளில் கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவனைப் பார்த்து முட்டாள் என்று சொல்லும் ஆசிரியரே முதல் முட்டாளாக இருப்பார்.

3. உங்களை விட்டு விலகிப்போவதால் நன்மை நிகழும் என்று சிலர் கருதினால், அவர்கள் விலகும் முன் நீங்கள் விலகிவிடுங்கள். உங்களுக்கு நன்மை நிகழும்.

4. நாகரீக வளர்ச்சி என்பது ஆடையின் அளவைக் குறைத்துக் கொள்வதல்ல. சிந்தனையின் அளவை வளர்த்துக் கொள்வது.

5. உண்மையாக வாழ்ந்து பாருங்கள். சிலருக்குப் பிடிக்கும், பலருக்குப் பிடிக்காது.

6. உங்கள் மேல் ஒருவர் ஆளுமை செலுத்த ஒரு முறையும் அனுமதிக்காதீர்கள். இல்லையேல் அதுவே அவர்களுக்கு வழக்கமாகிவிடும்.

7. உங்கள் குழந்தையை பணக்காரனாக வளருங்கள், தவறில்லை. ஆனால் ஏழையை புரிந்துகொள்ளும் படியாக வளர்க்காவிட்டால் இந்த சமுதாயம் தவறாகிவிடும்.

8. முதுமை காலத்து கொடுமையையும், மழலை காலத்து சந்தோசத்தையும் ஒருவனா(ளா)ல் கொடுக்க முடியுமென்றால், அவனே(ளே) உங்களுக்கு உற்ற துணை.

9. உங்கள் எழுத்திற்கு எதிர்ப்பு அதிகமென்றால் அதன் பலம் அதிகமென்றே பொருள்.

10. தியாகத்திற்காக சிறை சென்று திரும்பியோர் குற்றவாளிகளாகக் பார்க்கப்பட்டனர் அன்று. குற்றத்திற்காக சிறை சென்று திரும்புவோர் தியாகிகளாகக் பார்க்கப் படுகின்றனர் இன்று.

அன்புடன்,
அகல்

8 comments:

  1. nice akal...1,3,4,6,8 mikavum nantraka irunthathu

    ReplyDelete
  2. ஒவ்வொன்றும் நல் முத்துக்கள்! 4,7,8 மிகவும் ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே...

      Delete
  3. 5- அதுக்கு என்னதான் பண்ணுவது?

    8- புரியலை.........

    ReplyDelete
    Replies
    1. உச்ச கட்ட சந்தோசத்தையும் உச்ச கட்ட சோகத்தையும் ஒருவரால் தர முடியுமானால் அவங்கதான் உங்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத்துணை என்பது பொருள்...

      Delete
  4. ஒவ்வொன்றும் அருமை... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete