Friday, 10 May 2013

இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 2 )
கதையின் முதல் பாகத்தை படிக்காதோர் இங்கே சொடுக்கவும் பாகம் - 1

"கலைவாணியா ?" நம்பிக்கையில்லாமல் சந்தேகத்தோடு கேட்டான் சரவணன்.

அவள் சொன்ன "ஹ்ம்ம்ம்" இனிமையாக வெளிப்பட்டது.

"என் நம்பர் உங்களுக்கு எப்டித் தெரியும் ?"

"ஹ்ம்ம்... நீங்கதான விசிடிங் கார்டு கொடுத்துட்டு வீராப்பா பேசிட்டு போனிங்க, மறந்துருச்சா ?" என்றாள் மென்மையாக.

என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் பேசுகிறோம் என்பது அவனுக்கு அப்போது விளங்கியது.

"ஓ... சரி சரி" என்றான்.

"என்னென்னவோ சொல்லிட்டு வந்திங்க ஆனா எல்லாத்தையும் மறந்திடிங்க போல, என்னையும்...." என்று ஏமாற்றமான குரலில் சற்று இழுத்தாள் கலைவாணி.


அவனுக்கு வேறொரு பெண் பார்த்து விட்டார்கள் என்பதுபோல உணர்ந்தாள். கலைவாணியின் வலது விழியில் ஒரு துளி நீர் முட்டியது. இதயத்துடிப்பும் சற்று எகிறியது.

"ச்சே ச்சே அப்டியெல்லாம் இல்லங்க" என்று நிகழ் காலத்திற்கு திரும்பி நிதானமாகப் பேச ஆரம்பித்தான் சரவணன்.

அவள் மௌனித்தாள்...

"இல்ல அப்படித் தெரியல" என்றாள்.

"நீங்க என்ட பேசுன அந்த நிமிசத்துக்கு பிறகு எந்த மாப்பிள்ளையும் பாக்க நான் ஒத்துக்கல தெரியுமா" என்று அழுத்தமான குரலில் சொல்லிவிட்டு, தான் ஏமாந்துவிட்டதாய் எண்ணி வாய்விட்டுஅழத்தொடங்கினாள்.

சரவணனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள்மீது கொண்ட அன்பை விளக்க அவனிடம் வார்த்தைகள் சிக்கவில்லை.


"ஐயோ அழுகாதிங்க.. எனக்கு நீங்கதாங்க தான், உங்களுக்காகதான் நானும் காத்துகிட்டு இருக்கேன்" என்று சொல்லிவிட்டு, செல்போனில் சட்டென்று ஒரு முத்தத்தைப் பதித்தான்.

பிறகு "ஸாரி எனக்கு என்ன சொல்றது எப்படி புரிய வைக்கரதுனே தெரியல.. அதான் ஏதேதோ பண்றேன். நான் பண்ணது தப்புதான் ஸாரி 
ஸாரி..." என்றுசொல்லிவிட்டு மடையா என்று சொல்லி தனக்குத்தானே தலையில் கொட்டிக்கொண்டான்.


சரவணனின் இந்தச் செயல், அவளின் முகத்தில் சிறிய புன்னகை மொட்டை அவிழ்த்து விட்டது. முத்தத்தை சிந்திய சரவணன் இறுக்கமான மனநிலையில் இருப்பதை உணர்ந்த கலைவாணி,

"பரவாயில்ல" என்று மெதுவாகச் சொன்னாள். அவள் புன்னகைப்பது அவனுக்குத் தெரியாமல்.

சரவணன் கொஞ்சம் நிம்மதியானான்.

"சரி... நான் பாக்க ரொம்ப கருப்பா இருக்கேன், ஆனா நீங்க பளபளனு செவப்ப இருக்கீங்க, அதுனால ஒரு சந்தேகம்.. என்ன எதுனால உங்களுக்கு பிடிச்சது ?" என்று சிரித்துக் கொண்டே தயக்கத்துடன் வினாவைத் தொடுத்தான் சரவணன்.

"சொல்லியே ஆகணுமா ?"


"அப்பிடி இல்ல.. விருப்பப்பட்டா சொல்லுங்க"

"ஹ்ம்ம்... இப்ப பேசுனிங்களே அதுக்காக.. அந்த எதார்ததுக்காக..." என்றாள்.

சரவணன் சிரித்தான்.


"என்னங்க எதார்த்தமா பேசறதுக்கெல்லாம் பொண்ணுங்களுக்கு பிடிக்குமா என்ன ?" கேள்வியைத் தொடர்ந்தான்.

"ஹ்ம்ம் எதார்த்ததோடு நீங்க சொன்ன அந்த கருப்பும் பிடிக்கும்" என்றாள் கச்சிதமான குரலில்.

மீண்டும் சிரித்தான்.

அவர்களின் காதல் பரிமாற்றம் காற்றுவழித் தொடர்ந்தது. தன்னை வாங்க போங்க என்று சொல்ல வேண்டாம் என்று சரவணனிடம் கேட்டுக்கொண்டாள் கலைவாணி.

அறையை விட்டு வெளியில் வந்த கார்த்திக் "என்ன மச்சி, காதலி கலைவாணியா ? என்ன சொல்றாக ?" என்று நக்கலாகக் பேச்சில் குறுகிட்டான்.

"உன் வாயில சக்கர அள்ளி போட்டுக்க மச்சி" என்றான் சரவணன்.. சந்தோசமாக.

"சரி சரி நான் அப்பறம் பேசுறேன்.. இது அப்பா போன்..என்ட போன் இல்ல" என்றாள் கலைவாணி.


"போன் இல்லையா... ஏன் ?" ஆச்சர்யமாக கேட்டான் சரவணன்.

"பெரியப்பா பொண்ணுக்கு எவனோ போன் பண்ணி தொல்ல பண்ணினதால, எனக்கும் போன் வேணாம்னு அப்பா சொல்லிட்டாரு" என்று சொல்லிவிட்டு போனைத் துண்டிக்க முனைந்தாள் கலைவாணி.

"இருங்க வைக்கதிங்க... 
பிறகு உங்கள்ட நான் எப்டி பேசறது ? ஸாரி... உன்ட எப்டி பேசறது ?" கேட்டான் சரவணன்.

"வெளில இருந்தாவது எப்பிடியும் நான் உங்களுக்கு போன் பண்ணுவேன்.. ஆனா தயவு செஞ்சு நீங்க பண்ணாதிங்க. பாய்..." சொல்லிவிட்டு போனைத் துன்டித்தாள் கலைவாணி.

மனதின் ஒருபுறம் அலாதி ஆனந்தம், மறுபுறம் மறுபடி எப்போது அழைப்பாள் என்ற கேள்வியும் ஏக்கமும் அவனுள் துளிர்விட்டது. இசை மீது பெரிதாக ஈடுபாடே இல்லாதவன், இளையராஜா பாடல்களை அன்று இரவு முழுதும் கேட்டான்.

இரண்டு பகல் பொழுது கழிந்தது. அன்று இரவு 11 மணிக்கு கலைவாணி அழுத்திய எண்கள், ஒரு அழைப்பையும் தவற விடக்கூடாது என்று தனது தலையணை மேல் வைத்திருந்த சரவணனின் செல்போனை சிணுங்க வைத்தது. உற்சாகமாக போனை எடுத்து "ஹலோ" என்றான்.

"கலை, செல்போன பத்தியம்மா ? 7 மணிக்கு மாமா போன் பண்ணாரு, வண்டி ஓட்டிட்டு வந்ததால அப்பறம் பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்" என்றார் கலைவாணியின் தந்தை ஹாலில் இருந்து.

"நான் அப்பறம் கூப்புடுறேன் நீங்க திரும்ப கூப்புடாதிங்க" அவரசமாக அழைப்பைத்  துண்டித்தாள் கலைவாணி.

"என்ட தான்பா இருக்கு, பாட்டு கேட்டுட்டு இருந்தேன்.." என்று சொல்லிக்கொண்டே, சரவணின் எண்ணை டையல்டு காலில் இருந்து நீக்கிவிட்டு தந்தையிடம் போனைக் கொடுத்தாள் கலைவாணி.

அதே நொடிபொழுதில் மறுபுறம் சரவணன் வெறுப்படைந்தான். அவனுக்கு இந்த காத்திருப்பல் சுகமாக இருந்தாலும், அவள் மறுபடி அழைப்பாளா ? இல்லையா ? என்ற பயமும் மனதில் குடி கொண்டிருந்தது. அடுத்தநாள் மாலை 4.30 மணிக்கு தான் ஆசிரியராக வேலைபார்க்கும் பள்ளிக்கு அருகில் உள்ள பொது தொலைபேசியில் இருந்து கலைவாணி பேசினாள்.

20 நிமிடங்கள் கடந்தது. பொது தொலைபேசியில் இவ்வளவு நேரம் பேசுவது கலைவாணிக்கு புதிது. அடிக்கடி 
சுற்றும் முற்றும் பார்த்தாள். சற்று பயந்தாள்.

"சரி நான் அப்பறம் கூப்படறேன்" அழைப்பை துண்டிக்க முயற்சித்தாள்.

"நான் சொன்னத ஞாபகம் வச்சுக்கோ, என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. இந்த ஞாயிற்று கிழமை சாதா பாஸ் புடிச்சாவது திருச்சி வருவேன், நீ மலைகோட்டைக்கு வந்துரு" என்று அவன் சொல்லியபோது,

"சரி பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

வெள்ளி, சனிக் கிழமைகள் கடந்தது.

பெங்களூரில் இருந்து இரவுப் பேருந்துப் பயணத்தை முடித்துவிட்டு, திருச்சியில் ஒரு ஹோட்டல் அறையில் குளித்துவிட்டு ஒருவழியாக மலைக்கோட்டையை வந்தடைந்தான் சரவணன். கலைவாணியும் ஏதேதோ சொல்லி வீட்டில் சமாளித்துவிட்டு மாலை நான்கு மணிக்கு மலைக் கோட்டையை வந்தடைந்தாள். கலைவாணியின் அத்தனை நடவடிக்கைகளும் அவளுக்கே புதியதாகத் தெரிந்தது. அடிமனதில் தவறு செய்கிறோமோ என்ற அச்சமும் சேர்ந்து கொண்டது.

உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகே மர நிழலில் அமர்ந்திருக்கும் சரவணனை பார்த்து அடையாளம் கண்டுகொண்டாள் கலைவாணி. எதிரே வரும் அவளை சரவணனும் அவதானித்தான். தனது மனதில் அச்சடிக்கப்பட்ட உருவத்தை இரண்டாவது முறையாக நேரில் பார்த்தான். கலைவாணி அருகில் வந்ததும் சரவணன் சிரித்தான். அவள் வெட்கப்பட்டாள். பயத்தில் அவளது விரல்கள் நடுங்குவதை சரவணன் 
கவனித்தான்.

அருகில் உட்கார வைத்து பேச ஆரம்பித்தான். சரவணனுக்கு அழகாகப் பேசத் தெரியாது. ஆனால் யார் மனமும் புண்படாமல் மனதில் தோன்றுவதை பிறர் ரசிக்கும் படியாகப் பேசுவான். சரவணனை துணையாக்கிக் கொள்ள வேண்டும் என்று தான் எடுத்த முடிவு சரி என்று அவனது பேச்சின் மூலம் உறுதிபடுத்திக் கொண்டாள் கலைவாணி.

ஒரு மணி நேரம் ஆனதும் "வீட்ல தேடுவாங்க.. நான் கெளம்புறேன்" என்றாள் கலைவாணி. 


"நான் பெங்களுர்ல இருந்து வந்துருக்கேன் கொஞ்ச நேரம் இரேன்" அன்பு கலந்து வார்த்தைகளாய் கலைவாணியின் காதில் விழுந்தது.

ஆனால் ஐந்து நிமிடத்திற்கு மேல் அவளால் இருக்க முடியவில்லை. கிளம்பினாள். கலைவாணி விடைபெறும் தருணத்தில், தான் பெங்களூரில் இருந்து வாங்கி வந்த செல்போன், திருச்சியில் வாங்கிய சிம் கார்டோடு சேர்த்து அவளிடம் சரவணன் கொடுத்தான். அவளுக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும்.
"ஹ்ம்ம் ஹ்ம்ம் வேண்டாம், வீட்ல வைக்க முடியாது" என்றாள்.

"நாள் கணக்குல உன்னோட பேசாம காத்துட்டு இருக்க முடியல.. எப்ப கூப்டுவேனே தெரிய மாட்டேனுது. வீட்ல வைக்க முடியாட்டி அட்லீஸ்ட் இத ஸ்கூல்லயே வச்சுக்கோ.. அங்க இருக்கப்ப என்ட தினம் கொஞ்ச நேரம் பேசு.. அது போதும்" என்று மாற்று யோசனை சொன்னான் சரவணன்.

அரை மனதோடு வாங்கிக்கொண்டு விடைபெற்றாள் கலைவாணி.

பள்ளியில் இருக்கும்போது சிறிது நேரம் பேசுவதும், மாலையில் சுவிட்ச் ஆப் செய்து தனது டிராவில் வைத்துவிட்டுப் போவதையும் வழக்கமாகக்கொண்டிருன் கொண்டிருந்தாள் கலைவாணி. வீடு திரும்பிய பிறகு அவன் குரல் கேட்க ஏங்கும் நேரங்களில், தனது தந்தையின் தொலைபேசியை பயன்படுத்துக் கொண்டாள் கலைவாணி.


அன்று மதிய உணவு இடைவேளையில், பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஓரத்தில் இருந்து சரவணனுடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள் கலைவாணி. பள்ளிக்கு அருகேயுள்ள EB அலுவலகத்தில், மின் கட்டணம் செலுத்த வண்டியில் வந்த கலைவாணியின் அப்பா இதை கவனித்தார். அவளது காதில் இருந்த போன், அடிக்கடி அவள் யாரோடோ பேச தனது செல்போனை இரவு நேரங்களில் பயன்படுத்துவதாக நினைத்த அவரின் சந்தேகத்தை வலுப்படுத்தியது. வண்டியை 30 மீட்டர் தொலைவில் ஓரமாக நிறுத்திவிட்டு, மெதுவாக கலைவாணியின் அருகில் போனார். அவளைத் தவிர அந்த இடத்தில் வேறு யாரும் இருக்கவில்லை.

"கலை" என்று பின்புறமிருந்து வந்த தந்தையின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள் கலைவாணி. தந்தையைப் பார்த்த அதிர்ச்சியில் கையில் இருந்த செல்போனை கீழே போட்டாள். போனை எடுத்து தனது காதில் வைத்தார் கலைவாணியின் தந்தை.

"ஏய் நீ கவல படாதமா... என்ன ஆனாலும் எனக்கு 
நீதான், அதுல எந்த மாற்றமும் இல்ல" என்று பெங்களூரில் இருந்து வந்த சரவணின் குரல், அவரின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. கோபத்தின் உச்சத்திற்குப் போனார் கலைவாணியின் தந்தை.

"யாருடா நீ ?" என்று கேட்டவர், சரவணனின் பதிலுக்கு காத்திருக்காமல் அழைப்பைத் துண்டித்து "யார் இவன் ?, யாரோட போன் இது ?" என்று 
குரலை உயர்த்தி கலைவாணியிடம் கேட்டார்.

அவள் பயந்தாள். பதில் அளிக்க முடியாமல் மௌனமானாள்.

"எந்த அயோக்கியப் பயலோட பேசிட்டு இருக்க ?" என்று கேட்டதோடு 


அருகில் இருந்த கல்லில் செல்போனைப் போட்டு உடைத்தார். செல்போன் ஏறி தேங்காயாக சிதறியது. 
கலைவாணிக்கு எல்லாமே முடிந்துபோனதுபோல் இருந்தது. உணர்வுகளை அடக்க முடியாமல் அழுதாள். கண்ணீர் பெருக்கெடுத்தது.

என்ன நடந்ததென்று தெரியாமல் எதிர் முனையில் சரவணன் தவித்தான்.

தொடரும்...

கதையின் அடுத்த பகுதி இங்கே பாகம் 3

அன்புடன்,
அகல்

22 comments:

 1. ippovum suspense ah ?? :-( romba nalla scenes poitu irukum podhu power cut ana mari iruku boss..idhu unga story thane ;-)

  ReplyDelete
  Replies
  1. Ha ha.... wait for one more day madam :)....

   Delete
  2. en story ah illayaanu naalaikku theriyum :)

   Delete
  3. kandipa wait pandren :-) but ipadi wait pane padikaradhu kuda nalla tha iruku boss;-)

   Delete
  4. hmmm great.. then... we can say "to be continued.."

   Delete
 2. aiyo enna achu..

  sikkiram adutha pakuthiya podunga..

  ReplyDelete
  Replies
  1. சரிங்க நண்பா... நாளைக்கு கதைய முடிச்சிடுறேன் :) ..

   Delete
 3. அருமை, முதலில் பாராட்டுக்கள், கதை சொல்லி போகும் பாங்கு கவரும் வண்ணம் இருக்கிறது.

  இக்கதையின் சம்பவங்கள் பல என்னை ஆச்சரிய பட வைக்கிறது காரணத்தை உங்க கதை முடிந்ததும் சொல்றேன். ரொம்ப சுவாரசியமா உங்க கதை செல்வதனால் இக்கதையின் முடிவு தெரிந்ததும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் நண்பரே... கண்டிப்பாக கூறுங்கள்...

   Delete
 4. Replies
  1. Sure boss... 3rd will be released tomorrow :)

   Delete
 5. plz 3 rd part la mattum thodarum poturathenka ..mudiyala.... bt romba alzakana kadal.... atha arputhama solra oru kavi.....really super boss....(cant wait anymore plz update as soon as possible)

  ReplyDelete
 6. what sir y this kolaveri?
  மிகவும் நன்று. கதை மிகவும் விறுவிறுப்பாக உள்ளது.
  கதையின் முடிவை மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்.....

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் விஜி.... ஹ்ம்ம் காத்திருங்கள்..

   Delete
 7. Agal story nalla poguthu continue pannunga daily update irukkuma ?

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் பாஸ்... இன்னைக்கு அடுத்த பாகம் பதிவு பண்ணுவேன் நண்பரே...

   Delete
 8. கதையின் விறுவிறுப்பு எனக்கு பல ஞாபகங்களை நினைவுஊட்டுகிறது நன்றி நண்பரே!

  ReplyDelete