Saturday 11 May 2013

இப்படியும் காதல் வரும் ( உண்மைக் கதை.. பாகம் 3 )


கதையின் முந்தைய பாகம் இங்கே பாகம் 2

செல்போனை உடைத்த கையோடு வண்டியை எடுத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக மறைந்தார் கலைவாணியின் அப்பா.

கலைவாணியின் கண்ணீர் நிற்கவில்லை. அழுதுகொண்டே மெதுவாக அமர்ந்தாள். உடைந்துபோன செல்போன் பாகங்களைப் பொறுக்கினாள். அவளால் ஏனோ அதை உயிரற்ற பொருளாக நினைக்க முடியவில்லை. கையில் கிடைத்த பாகங்களைப் பொறுக்கிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு அவளும் நகர்ந்தாள். மீதிப் பொழுது பள்ளியில் அவளுக்கு சரியாகப் போகவில்லை. அலுவலகத்தில் சரவணன் கணினிமுன் கணினி போல அமர்ந்திருந்தான்.

இரவு எட்டுமணி... பள்ளியில் நடந்ததைச் சொல்லி அவன் யார் என்று மகளிடம் கேட்கும்படியாக தனது மனைவியிடம் சொன்னார் கலைவாணியின் அப்பா. கலைவாணி எதற்கும் பதிலளிக்கவில்லை. உணவும் உண்ணவில்லை. ஒரே செல்ல மகள் இவ்வாறு இருப்பதைப் பார்த்து கலைவாணியின் தாய் பயந்தாள். அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இரவு பதினொரு மணி... கலைவாணியின் தந்தை அவளை மீண்டும் திட்டிவிட்டு எழுந்து போனவர் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். தரையில் படுத்திருக்கும் கலைவாணியை தனது மடியில் கிடத்தினாள் அவள் தாய். ஒரு கையால் அவளது உடலை தட்டிக்கொடுத்தாள். அமைதியாக இருந்த கலைவாணியின் கண்கள் மீண்டும் கண்ணீர் அருவியானது. தாயின் மடியின் முகத்தை இறுக்கமாகப் பதித்துக் கொண்டாள்.

பொறுமையாக கலைவாணியிடம் மீண்டும் பேச ஆரம்பித்தாள் அவள் தாய். சிறிய இடைவெளிக்குப் பிறகு நடந்தது அனைத்தையும் மெதுவாக விவரித்தாள் கலைவாணி. கலைவாணியை குழந்தை முதல் நன்கு புரிந்துகொண்ட அவளது தாயிக்கு தனது மகளின் விருப்பத்தில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. 

உண்மையில் பெண் பார்க்க வந்த சரவணனை அன்றே அவளுக்கும் பிடித்துப்போனது. தனது மகளுக்கு சரியான துணை இவன் என்றே கருதினாள். ஆனால் கலைவாணியின் தந்தை ஜாதகத்தில் அதீத நம்பிக்கை உடையவர். அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதால் பெண் பார்க்கும் முன் அவரால் ஜாதகம் பார்க்க முடியவில்லை.

பிறகு பார்த்து முற்றிலும் ஒத்துவராது என்று ஜோசியர் சொல்லியதை கலைவாணியின் தந்தை விடாமல் பிடித்துக் கொண்டார். ஒரே பெண்ணின் வாழ்க்கை சரியாக அமையவேண்டும் என்று அவர் கருதினார். ஜாதகப் பொருத்தத்தை வைத்து அதற்கு இந்த வரன் சரிப்பட்டு வரமாட்டான் என்று முடிவுசெய்தார். அவரின் நிலைப்படும் கலைவாணியின் அம்மாவிற்கு தவறாகத் தெரியவில்லை.

இந்த எண்ண அலைகளை ஓடவிட்டுக் கொண்டே, பல வருடங்கள் கழித்து கலைவாணிக்கு உணவு பிசைந்து ஊட்டிவிட்டாள் கலைவனின் தாய். நாள் முழுதும் அழுத கலைவாணியின் கண்கள் தூக்கத்தைத் தழுவியது. மகளை தட்டிக் கொடுத்து உறங்கவைத்தாள். சரவணனால் இரவு முழுதும் உறங்க முடியவில்லை. நடந்ததை அறிந்து, கார்த்திக்கும் ஆண்டனியும் அவனைத் தேற்றினார்கள். தந்தையிடம் பேசும்படி அறிவுறுத்தினார்கள். 

அடுத்தநாள் அதிகாலையில் சரவணன் தனது அண்ணிக்கு போன் செய்து நடந்ததைக் விவரமாகக் கூறினான். கலைவாணிக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை என்று புலம்பினான். அவளே வேண்டும் என்று அடம் பிடித்தான். இந்தச் செய்தியை தனது மாமனாரிடம் நேரடியாகச் சொல்ல சுமதிக்கு தைரியம் வரவில்லை. மாமியார் வழியாக செய்தி சரவணன் தந்தையை அடைந்தது.

"கொடுக்க முடியாது என்று சொல்வர்களிடம் நான் என்ன கெஞ்சவா முடியும்" என்று அவர்  தரப்பு நியாங்களை முன்வைத்தார் சரவணனின் தந்தை. இருந்தும் அரை மனதோடு பெண் வீட்டாரிடம் பேசுவதாகத் தீர்மானித்தார். கலைவாணியின் மாமா வழியாக அவளது தந்தையிடம் பேசிப் பார்த்தார்கள். அவர் ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இதை சரவணனின் தந்தை தனக்கு நிகழ்ந்த அவமானமாகக் கருதினார்.

"பொண்ணப் பெத்தவனுக்கு இந்த பிடிவாதம் இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்" என்று தனது பிடிவாதத்தை வெளிப்படித்தினார். இதை அறிந்த சரவணனுக்கு நாட்கள் நகரவில்லை.

கலைவாணி பள்ளிக்குப் போவதற்கும் தடைவிதிக்கப்பட்டது. அவளால் சரவணனிடம் பேச முடியவில்லை. அவளுக்கு நாட்கள் நெருப்பின் மீது நடப்பதாக இருந்தது. அங்கு நடப்பதை சரவணின் வழியாக அறிந்துகொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்று தனக்குத் தெரிந்த ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

நாட்கள் கழிந்தது. கலைவாணி மாறுவதாக அவளது தந்தைக்குத் தெரியவில்லை. அவர் மற்றுமொருமுறை அவளிடம் பேசிப்பார்த்தார்.

"ஜாதகப் பொருத்தம் சரியா அமஞ்சவங்க எல்லாம் சந்தோசமா இருக்காங்களா ? ஜாதகத்தவிட உங்களுக்கு என் மனசு முக்கியமா தெரியலயாப்பா ?" என்ற ஆணித்தனமான கேள்வியை காற்றில் வீசிவிட்டு அவளது தந்தையை கட்டி அழுதாள். இந்தமுறை மகள் அழுவதை அவரால் தங்கிக் கொள்ள முடியவில்லை. கலைவாணியின் தாய், அவளது தந்தையிடம் இரவு முழுக்கப் பேசினாள்.

அடுத்தநாள் காலை, கலைவாணியின் மாமா வழியாக சரவணனின் தந்தையிடம் கலைவாணியின் தந்தை பேசினார். அவர்கள் இறங்கி வந்ததைப் பார்த்துவிட்டு சரவணனின் தந்தைக்கு வேண்டாம் என்று தூக்கிஏறிய மனதில்லை. அவரும் ஒத்துக்கொண்டார். இந்தச் செய்தி கலைவாணிக்கும் சரவணனுக்கும் காற்றுவழி பறந்தது. கலைவாணி பள்ளி போவதைத் தொடர்ந்தாள். சுதந்திரப் பறவையானாள். முன்னைவிட சரவணனிடம் பேசும் நேரம் அதிகமானது.

நாள், நேரம் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டது. இரண்டு மாதத்தில் திருமணம் நல்லபடியாக முடிந்தது. சரவணனுக்கு நிகழ்ந்ததை நினைத்து கார்த்திக்கும் ஆண்டனியும் சந்தோசப் பட்டார்கள். தேன் நிலவிற்கு சிம்லா போவதாக சரவணன் திட்டமிட்டான். ஆனால் ஒரே மகளை மொழி தெரியாத ஊரிற்கு அவ்வளவு தூரம் அனுப்ப கலைவாணியின் தந்தை பயந்ததை அறிந்த சரவணன், தேன் நிலைவை கோடைக்கானலோடு முடித்துக்கொண்டான்.

பெங்களூர் மடிவாளா பகுதியில் குடியேறிய சரவணன் வீட்டிற்கு அடிக்கடி போய் வருவான் கார்த்திக். சில மாதங்கள் கழித்து சரவணன் வேலை நிமிர்த்தமாக கலைவாணியுடன் காரைக்குடிக்கு குடி மாறினான்.

சரவணனை கார்த்திக்கும், ஆண்டனியும் தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம் "You know what, I don't talk to stupid bachelors" என்று சொல்லி கலகலப்பாக சிரிப்பான்.

"எங்களுக்கும் ஒரு நேரம் வரும்டா" என்று சொல்லி கார்த்திக்கும் சிரிப்பான். சில மாதங்களுக்குப் பிறகு இவர்கள் அடிக்கடி பேசிக்கொள்வது வேலைப்பளு, குடும்ப சூழல்  காரணமாக குறைந்துபோனது. 

ஒரு வருடம் உருண்டோடியது.

வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு கார்த்திக் செல்போனிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு.

"ஹலோ..."

"டேய் உயிரோட இருக்கியா ?"

"யார் பேசறது ?"

"டேய் தெரியலையாடா மச்சி... சரவணன் டா"

"அடே அங்கிள்.. எப்பிடி இருக்க ? கலைவாணி, அப்பா, அம்மா எல்லாம் எப்பிடி இருகாங்க ?. என்னடா புது நம்பர்ல இருந்து கால் பண்ற... நம்பர மாத்திட்டியா ?"

"எல்லாம் நல்லாருகாங்கடா.. இது ஆபீஸ் மொபைல் மச்சி.."

"ஓ அப்படியா ?"

"ஆமா ஆமா.. அப்பறம் ஒரு முக்கியமான விசயம்டா. ரெண்டு நாளைக்கு முன்னாடி நான் அப்பாவா ஆகிட்டேன். பெண் கொழந்த பொறந்திருக்கு. ரொம்ப வேலையா இருந்ததால உடனே சொல்ல முடில. இன்னைக்குதான் ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்தோம்"

"அடே அடே... சூப்பர் டா... பாப்பா எப்பிடி இருக்கா ? வெயிட் எல்லாம் சரியா இருக்கா ?"

"பாப்பாவெல்லம் நல்லாதான் இருக்கா ? ஆனா !"

"என்னடா ஆனா ?"

"பொறந்தது பொறந்துச்சே, அவ அம்மா மாதிரி செவப்ப பொறந்துச்சா ? என்ன மாதிரி கரு கருன்னு இருக்குடா மச்சி" சொல்லிவிட்டு சிரித்தான் சரவணன். கார்த்திக்கும் விழுந்து விழுந்து சிரித்தான்.

சற்று நேரம் பேசிவிட்டு

"சரிடா மச்சி... பாப்பா, கலைவாணிய நல்லா பத்துக்கோ. நான் அப்பறம் பேசுறேன்" 

"டேய் இருடா.. ரொம்ப நாள் கழிச்சு அப்பாவா ஆகி போன் பண்ணிருக்கேன். அதுக்குள்ள வைக்கிறேங்குற"

"You know what, I don't talk to married uncles" என்று சொல்லிவிட்டு கார்த்திக் சிரித்தான். சரவணனும் சிரித்துக் கொண்டே

"டேய் டேய்... கொஞ்ச நேரமாவது நிம்மதியா இருக்கணும் மச்சி.. ப்ளீஸ் பேசுடா" என்றான்.

அருகில் அமர்ந்திருந்த கலைவாணி, புன்முறுவலோடு சரவணை செல்லமாக அடித்துவிட்டு அவனது முழங்கையோடு தனது கைகளைப் கோர்த்து அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அருகில் இருந்த தொட்டிலில் குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. 

முற்றும்.

அன்புடன்,
அகல்

34 comments:

  1. அருமையான கதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி பாஸ்..

      Delete
    2. Nalla kadhal kathai, paaratukkal :)

      Delete
    3. Nalla kadhal kathai, paaratukkal :)

      Delete
  2. nalla kathai..
    nandri thodarnthu 3 pakuthiyam podu mudichitinga..
    kathai nandray irunthathu.


    ReplyDelete
  3. nice finishing boss..enaku romba pidichu iruku..
    kadhal jodigal sendhutanga :-)
    appo idhu unga story illa ;-)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா தெரிஞ்சா சரி.... கருத்திற்கு நன்றிகள் பல...

      Delete
  4. kadal sernthu kayaname mudinchu kulanthaiye piranthacha....apo unka story ilaya????? :( (bad guessing).... but story nala iruku boss...kathai solrathu romba alzaka iruku sir..nala kavithai nayam....


    but finishing than sekiram mudincha mathiri oru feeling.....konjam suvarasiyam ilama pona mathiri iruku...bcz udane marriage vachitanka ila...

    anyway congrats boss...continue.....


    ReplyDelete
  5. Sooopernga !! sema ending !! nalla flow ! But yen seekram mudichitinga ? innum konjam neraya xpect pannen !! anyways totally a vry gud :)

    ReplyDelete
    Replies
    1. Thanks Nandhu.... 3 partukke makkal thangala... Romba avasarap pattanga :)

      Delete
  6. தாமதத்துக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன், மிகவும் அருமை பாராட்டுக்கள், ஏன் ஆச்சரியமாக இருந்தது என்றால், பல விஷயங்கள் ஒத்துபோவதாக இருந்தது. இனி என்னோட version - பெண் பார்த்தது, அவருடன் பேசியது பின் சொத்தையான காரணத்தால் கல்யாணம் தடைபட்டது - பெண் ஆசிரியர் உத்தியோகம் பார்த்தது -பெண்ணிடம் இருந்து தொலைபேசி அழைப்பு கிடைத்தது - பெண்ணிற்கு (கை தொலைபேசியல்ல) sim card வாங்கி கொடுத்தது - பெண்ணின் தந்தைக்கு பதில் பெண்ணின் தம்பி வீட்டில் போட்டு கொடுத்தது - பல பிரச்சனைகளுக்கு பிறகு (அனைவரது சம்மதம் பெற்று) ஓராண்டு காத்திருப்புக்கு பின் திருமணம் முடித்தது. ஆனால் நடந்து வெகு காலம் ஆகிவிட்டது, இரண்டு செல்வங்கள் பெற்றாயிற்று.

    ReplyDelete
    Replies
    1. பரவாயில்லை நண்பரே... கருத்திற்கு எனது நன்றிகள்... உங்கள் கதை அப்படியே ஒத்துப் போவதை நினைத்தால் ஆச்சர்யமாகவும் சுவாரஷ்யமாகவும் இருக்கிறது :) ...

      Delete
  7. கதை ரொம்ப நல்ல இருந்துச்சு அகல் :)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திவ்யா :)

      Delete
  8. nega thodarumnu podama irunthavarikam santhosam..........
    nice story sir, very nice. innum neraya ungalda irundhu ethirparkirom....
    all the best...... congrats............

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் விஜி...

      Delete
  9. Replies
    1. நன்றிகள் மாதேவி..

      Delete
  10. Super Story and ending. Is there any story like the same by you? If it is pls share me.

    Congratzzzzzzzz

    ReplyDelete
    Replies
    1. Thanks boss... yes there is story but yet to write :)

      Delete
  11. hai boss unga story padichen very nice flow iruku.. write a lot :)

    ReplyDelete
  12. கதை எழுதிய விதம் அருமை வாழ்த்துகள்... தொடரட்டும் உங்கள் எழுத்துகள்....

    ReplyDelete
  13. அருமையான கதை.நல்லதொரு முடிவு........காதல் அழிவதில்லை.......அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன்........

    ReplyDelete
  14. அருமை...

    ReplyDelete
  15. காதலுகும், இறைவனுக்கும் முன்னாடி இந்த ஜாதகம்ல ஒன்னும் இல்ல......

    இந்த காதல் உணர்வை சொல்ல வார்த்தைகள் இல்ல....

    Love never ends......

    ReplyDelete