Sunday 12 May 2013

அன்னையர் தினமும் ஒரு உண்மைச் சம்பவமும்


மளிகைக் கடைக்கே சில கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய வசதியற்ற சிறு கிராமம் அது. 1983 ம் வருடம், நாள் கணக்காக தொடரும் அடைமழை காலத்தில் மருத்துவச்சி துணையுடன் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. தாய் வீட்டில் பிரசவம் பார்க்க வந்த தனது கணவனின் தங்கைக்கு அதே வீட்டில் ஒருவார இடைவெளியில் ஒரு பெண்குழந்தை பிறக்கிறது.

இரண்டு குழந்தைகளும் நல்ல உடல் நலத்துடன் இருந்தது. ஆனால் அடைமழையின் தாக்கத்தாலும், சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த உடல் என்பதாலும் அந்த இரண்டு பெண்களின் உடல்நிலை தற்போது இருக்கும் கால நிலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் மாறி மாறி படுத்த படுக்கையாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஒரு பெண்ணின் உடல் நிலை சரியாக இருக்கும் நேரத்தில் மற்றொரு பெண்ணிற்கு உடல்நிலை குன்றியது.

வீட்டைவிட்டு வெளியில் வராத அளவிற்கு மழையும் பல நாட்களாகப் தொடந்தது. குழந்தை பிறந்து சில நாட்களே ஆனதால், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய கட்டாயம். தனது மகனுக்கு அந்த தாய் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். தனது நாத்தனார் (பெண் குழந்தையின் தாய்) படுக்கையில் இருந்தாள். அவளது பெண் குழந்தை பக்கத்து அறையில் அழுது கொண்டிருந்தது. உடல்நலக் குறைவால் உணவு கூட உட்கொள்ள முடியாமல் இருக்கும் அந்த தாயால் பெண்குழந்தைக்கு பால் தர முடியாத நிலை.

ஒரு மார்பில் பால் குடித்த ஆண் குழந்தை, பாதி வயிர் பசியாறியவுடன் அதைப் பாயில் கிடத்தினாள் குழந்தையின் தாய். பிறகு அழுது கொண்டிருக்கும் நாத்தனாரின் பெண் குழந்தையை தூக்கி தனது மற்றொரு மார்போடு அணைத்தாள். அந்தக் குழந்தையும் பாதி வயிர் பசியாறியது.

பெண் குழந்தையின் தாய் உடல் நிலை தேறியபோது, ஆண் குழந்தையின் தாயிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. பிறகு தனது நாத்தனார் அவளது பாலை குழந்தைகளுக்கு பகிர்ந்தளித்தது போல் அவளும் பகிர்ந்தளிக்க முடிவு செய்தாள். பாதிப் பசியுடன் குழந்தைகளின் நாட்கள் இவ்வாறே நகர்ந்தது. மழை விட்டது. இருவரின் உடல் நிலையும் தேறியது.

குறிப்பு:

இது கதையல்ல. உண்மைச் சம்பவம். அந்த ஆண் குழந்தையின் தாய் எனது தாய். அந்த ஆண் குழந்தை எனது அண்ணன். பெண் குழந்தையின் தாய் எனது அத்தை. உறவு முறைகளையும் தன் குழந்தை மட்டும் முழுப் பசியாற வேண்டும் என்ற சுயநலத்தையும் தூக்கி எறிந்துவிட்டு மருமகளுக்கும், மருமகனுக்கும் பால் கொடுத்து வளர்த்த அந்த இரண்டு தாய்களின் தாய்மையை எனது அம்மா அவ்வப்போது கதையாகச் சொல்லி கேட்டிருக்கிறேன். சற்று வியந்திருக்கிறேன்.

எனது தாய்க்கும், உலகில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அகல்

15 comments:

  1. அன்னையர் தின வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
    Replies
    1. அன்னையர் தின வாழ்த்துக்கள் நண்பரே...

      Delete
  2. இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்னையர் தின வாழ்த்துக்கள் இராஜராஜேஸ்வரி...

      Delete
  3. உண்மை என்றவுடன் மனதை கலங்க வைத்து விட்டது... அந்த இரு தெய்வங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்... அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

      Delete
  4. சிறியதாய் இருந்தாலும் உருக வைத்து விட்டது....அன்னையர் தின வாழ்த்துக்கள் நண்பா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே... அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...

      Delete
  5. Awesome bro. One of the best posts I have read lately. Mother's day wishes.

    ReplyDelete
  6. மனதை உருக்கியது. அன்னையர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி... தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் மாதேவி...

      Delete
  7. Antha iru theivangalukkum kodi nandrigal

    ReplyDelete
  8. Antha iru theivangalukkum kodi nandrigal

    ReplyDelete