Thursday 16 May 2013

காதல்

ஆலங்கட்டியை
அள்ளியிறைக்கும்
புயல்மழை காதல்

கார்மேகம் கூடியதும்
முகத்தைமுத்தமிடும்
ஒற்றை மழைத்துளி
காதல்

விரல்களை ஒடித்துவிட்டு
வீணைமீட்டும்
விபரீத விளையாட்டு
காதல்

தவறாக உச்சரிக்கும்
பிஞ்சு மழலையின்
கொஞ்சல்மொழி காதல்

மாமரக்கிளை நிழலில்
தொட்டிலில் உறங்கும்
குழந்தையை
கடித்து அழவைக்கும்
கட்டெறும்பு காதல்

அழும் குழந்தைக்கு
இரண்டு வயல் தாண்டி
காற்றில் கரைந்துவரும்
தாயின் தாலாட்டு காதல்

முட்களுக்கிடையே
மூச்சுத் திணறும்
மூங்கில்தண்டு காதல்

அதைத் துளையிட்டு
இசைமீட்டும்
புல்லாங்குழல் காதல்

சுள்ளென்று சுட்டெரிக்கும்
சூரியனும் காதல்

ஒளியைக்

கடன்வாங்கி குளிர்விக்கும்
முழுநிலவும் காதல் !

நாசி துளைத்து
மூச்சடைக்கும்
கூவம்நதி காதல்

அவ்வப்போது
வந்துபோகும்
மண்வாசம் காதல்

மயிலின் அழகும்
குயிலின் குரலும்
காதல்

குயிலின் அழகும்
மயிலின் குரலும்
காதல்

சேவல் கூவும் நேரத்தில்
புல்லோடு உறவாடும்
பனித்துளி காதல்

சில மொட்டவிழும்
நேரத்தில்
புன்னகையைப் பறித்துவிடும்
பூகம்பம் காதல்

பூமிக்கு

புதுவரவைத்தரும்
பிரசவவலி காதல்

புதுவரவை பார்த்தவுடன்
தாயின் விழிகளில்கசியும்
கண்ணீர்த்துளி காதல்

காதைக் கதறவைக்கும்
ரீமிக்ஸ் இசை காதல்

உயிரை உறையவைக்கும்
இளையராஜா இசை காதல் !


அன்புடன்,
அகல்

17 comments:

  1. "காதைக் கதறவைக்கும்
    ரீமிக்ஸ் இசை காதல்" ... starting la irundhu serious ah padichutu .. indha line varum bodhu .... ha ha ha :D ... Gud one :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா... அந்த வரிகள் //உயிரை உறையவைக்கும்
      இளையராஜா இசை காதல் ! // என்ற வரிகளை கட்டாயம் கொண்டு வரவேண்டும் என்ற ஆவலில் சேர்க்கப்பட்டது திவ்யா :)... கருத்திற்கு நன்றி...

      Delete
  2. அனைத்தும் ரசிக்க வைக்கும் காதல்...

    இப்போதைக்கு அவ்வப்போது வந்து போவது...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்...

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி...

      Delete
  4. eppadi pa ippadilam yosikerenga..:-)
    kavithai padika azhaga iruku..

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா நன்றிகள் தேன்மொழி :)

      Delete
  5. தவறாக உச்சரிக்கும்
    பிஞ்சு மழலையின்
    கொஞ்சல்மொழி காதல்//உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கண்ணதாசன் சார்...

      Delete
  6. கற்பனை சிறகடித்துப் பறக்கிறது...
    சிந்தையில் ஊறியது
    விரல்வழி கசிந்து
    தூரிகை சமைத்திருக்கும்
    அருமையான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன் சார்...

      Delete
  7. arumai..yantha line a kuripitu solanum nu theriyala...ella line um super..... aanalum
    மூச்சுத் திணறும் மூங்கில்தண்டு காதல்,பிரசவவலி காதல் // romba romba pudichiruku.... ha ha கூவம்நதி,remix kuda super...

    ReplyDelete
    Replies
    1. மனம் தொட்ட கவிதை
      மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்
      தொடர வாழ்த்துக்கள்

      Delete
    2. மிக்க நன்றி ரமணி ஐயா....

      Delete