Wednesday 22 May 2013

இயற்கை எனது ஆசான்

பள்ளிநேரம் முடிந்துடன்
மேற்கு திசைநோக்கி
மிதிவண்டியை
இயக்கும் எனக்கு...

விறகுச்சூட்டில் முத்தமிடும்
சூரிய ஒளியும்
அம்மிக்கல்லைத் தூக்கிஎறியும்
ஆடிக்காற்றும்
அவ்வப்போது வந்துபோகும்
ஆலங்கட்டி மழையும்

அப்போதே
சொல்லிக் கொடுத்தது..

வாழ்க்கையில்
எதிர்ப்புகளை எவ்வாறு
எதிர்கொள்வதென்பதை !




அன்புடன்,
அகல் 

11 comments:

  1. அழகிய சொல்லாடல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கண்ணதாசன் சார்....

      Delete
  2. ரசித்தேன்... படமும் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்...

      Delete
  3. அழகிய கவிதை.

    ...விறகுச்சூட்டில் முத்தமிடும்
    சூரிய ஒளியும்
    அம்மிக்கல்லைத் தூக்கிஎறியும்
    ஆடிக்காற்றும்.... இவை எல்லாம் இப்பொழுது யாருக்குத் தெரியும். ரசனை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மாதேவி...

      Delete
  4. அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா..

      Delete
  5. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் அகல்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அருணா....

      Delete
  6. நன்றிகள் சார்...

    ReplyDelete