Tuesday 4 June 2013

எனது குறுங்கவிதைகளில் சில... பாகம் 16

ஆரம்பம்

உன் பாதச்சுவடுகளில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
பித்த வெடிப்புகளில்
இருந்து

அழகிற்கான எனது
கவிதை ஆரம்பமாகிறது !




கோடைகாலம்

மார்ப்ள் தரை
மண்பானையில் நீர்...

போலி எது ?
அசல் எது ?
பிரித்துக் காட்டுகிறது
கோடைகாலம் !




அம்மா

மழலையைப்
பெற்றவுடன்

ஆரம்பப்பள்ளி
ஆசிரியை
ஆகிவிடுகிறாள்
அம்மா !





மழைத்துளி

கருமேகங்களின்
ஒன்றுகூடலில்
கசிந்து வெளியேறும்
ஒற்றை மழைத்துளி
நான் !

விழும் இடம்
விளைநிலமானால்
விளைச்சல் தருவேன்

அதுவே
பாலைவனமானால்
ஆவியாகிப்
பின் மீண்டும்
இப்புவியை
அடைவேன் !





தெரிந்தவர்

சிறுவயது முதல்

உனது அழகின்
வளர்ச்சியும்
அதன் சராசரியும்

உன் வீட்டு
ஜன்னலோரக்
கம்பிகளுக்குத்
தெரியும் !





பொக்கிஷம் 

கல்லூரிப் பருவம்
பேருந்துப் பயணம்
முன் இருக்கையில் நீ
பின் இருக்கையில் நான்

யாரோடோ சண்டையிட
ஜன்னல்வழி ஓடிவந்த
ஆடிக்காற்று மோதி
உனது கூந்தலைப் பிரிந்து
எனது புத்தகத்தின்
நடுப்பக்கத்தில் விழுந்த
ஒற்றை
மல்லிகை இதழ்

இன்னும் அப்படியே
அதே நடுப்பக்கத்தில் !




தாய்மை

அடைமழை
ஓய்ந்த நேரம்

ஆற்றங்கரை
மரக்கிளையில்
உடல் நடுங்க
பசியோடு
அமர்ந்துகொண்டிருக்கிறது
தாய்ப்பறவை

அதன்
இறகுச்சூட்டின்
கதகதப்பில்
ஓடையோர
இசைக்கு மயங்கியபடி

இறகிற்குள்
உறங்கிக்
கொண்டிருக்கிறது
இளம் குஞ்சுகள் !





தூது

நீ மொட்டைமாடியில்
காயவைத்த தாவணியை
அந்த காற்று எதற்காக
என் காலடியில்
கொண்டுவந்து போட்டது ?




பாதம் 

அவள் பாதம் ஒரு
தேசிய நெடுஞ்சாலை

அதில் பித்த வெடிப்புகள்

ஆங்காங்கே இணையும்
உள்ளூர் சாலைகள் !





அடிமை

முதுகில்
பொதியுடன்
கர்ப்பிணிக் கழுதை

இரண்டையும்
இறக்கி வைக்க முடியாமல் !




அன்புடன்,
அகல் 

12 comments:

  1. ஆரம்பம் முதல் அடிமை வரை அனைத்தும் அருமை...

    மிகவும் ரசித்தவை : அம்மா பாதம் மழைத்துளி

    ReplyDelete
    Replies
    1. பிடித்த கவிதைகளைக் கூறியதற்கு நன்றிகள் தனபாலன் சார்..

      Delete
  2. அருமையாக இருக்கின்றன. சுவைத்தேன். படங்களும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மாதேவி மேடம்....

      Delete
  3. சிறப்பு! வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் நண்பரே...

      Delete
  4. super..adhuvum "padham ,pokisham" 4 times mela padichuta..romba pidichu iuku boss :-)
    asathurenga ponga ;-)

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தேன்மொழி :)

      Delete
  5. நல்ல கற்பனைகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் முரளி சார்...

      Delete
  6. Anaithu kavithaium rompa pidicherkku agal. especially amma
    & therinthavar kavithai nice... Vazhthukkal :)

    ReplyDelete