Tuesday, 4 June 2013

அன்பு ...

வாசலில்
கோழிக்கு இறையிடுகிறான்
விவசாயி

கோழிக் குஞ்சுகளைக்
குறிவைத்து
வானத்தில் வட்டமிடுகிறது
வெள்ளைக் கழுகு

குஞ்சுகளைக்
கொத்திச் செல்ல
கழுகு நெருங்கும் நேரத்தில்...

தனது கொக்கரிப்பில்
குஞ்சுகளை ஒளிந்துகொள்ளச்
சொல்லும் கோழி..
கத்திக்கொண்டே கம்பெடுத்து
கழுகை விரட்டும் விவசாயி..
இரைக்காக நெருங்கும்
வெள்ளைக் கழுகு...
எல்லோர் எண்ணத்திலும்
இருப்பது ஒன்றுதான்

அன்பு !

கோழிக் குஞ்சுகள்மேல்
தாயிக்கு உள்ள அன்பு !

தாய்க் கழுகுக்கு
தனது குஞ்சுகள்மேல்
உள்ள அன்பு !

தன்வீட்டுப்
பறவைகள் மேல்
எஜமானுக்கு
உள்ள அன்பு !

இதில் சரி தவறு ஏதுமில்லை !


அன்புடன்,
அகல்

15 comments:

  1. அன்பு இல்லையெனில் உலகம் ஏது...? சிந்தித்த விதம் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்...

      Delete
  2. Replies
    1. நன்றிகள் பல முரளி சார்...

      Delete
  3. இணைத்ததற்கும் உங்களது தொடர்ச்சியான கருத்துக்களுக்கும் எனது நன்றிகள் சார்....

    ReplyDelete
  4. Simply superb :-) Congrats agal...

    ReplyDelete
  5. ஒன்றைக் கொன்று
    மற்றொன்று உயிர் வாழ்வதும்
    அன்புதான்.
    ஒர் உயிரைக் காப்பாற்றுவதும்
    அன்புதான்!

    உண்மைதான். நல்ல கருத்து அகல்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி அருணா செல்வம்...

      Delete
  6. அன்பு பற்றிய அழகான கவிதை...

    வாழ்த்துகள், சொன்னவிதம் சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே...

      Delete
  7. கவி அழகு கரு அழகு அகல்

    ReplyDelete