Friday 21 June 2013

அகல் மொழி பத்து - பாகம் 4


31. ஒரு சமூகப் பிரச்சனைக்கு பதியம் போடுவது மேல் வர்க்கம், அதனால் வரும் விளைவுகளை தூரம் நின்று வேடிக்கை மட்டும் பார்ப்பது நடுத்தர வர்க்கம், எதிர்த்து நின்று போராடிச்சாவது கீழ் வர்க்கம். இவ்வுலகின் எழுதப்படாத விதி இது.

32. எனது மதமும் அதன் கொள்கைகளும் மட்டுமே சிறந்தது அதை மட்டுமே கடைபிடிப்பேன் என்று கூறும் ஒரு இந்துவோ, முஸ்லிமோ, கிறிஸ்தவரோ ஆபத்து என்றவுடன் ரத்த வங்கிகளில் ஒரு யூனிட் இந்து ரத்தம் கொடுங்கள், இரண்டு யூனிட் முஸ்லிம் ரத்தம் கொடுங்கள் என்று கேட்பதில்லை. O நெகடிவ் கொடுங்கள், B பாசிட்டிவ் கொடுங்கள் என்று ரத்த வகைகளையே கேட்கிறார்கள். இப்படியாக மனிதன்.

33. தெரியாமல் நாம் செய்த ஒரு தவறை நியாயப்படுத்த முயற்சிக்கும்போது அந்தத் தவறை இரண்டாவது முறை செய்கிறோம்.

34. நல்ல கருத்துக்களைச் சரியான நேரத்தில் சரியான நபரிடம் சொல்லுங்கள். காதிற்குள் புகுந்து கவனிக்கப்பட வேண்டிய கருத்துக்கள், வெறும் காற்றில் கரைவதில் எந்தப் பயனுமில்லை.

35. நமது கூட வருபவர்களை சந்தோசத்தின் போதும், கூடவே வருபவர்களைத் துக்கத்தின் போதும் தெரிந்துகொள்ளலாம்.

36. திருமண வாழ்க்கைக்கு புற அழகுமட்டும் போதாது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அதையே முதல் தகுதியாக வைத்திருக்கிறோம்.

37. வாழ்வில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் எந்த நிலையையும் அடையலாம். அதனால் எவரையும் இப்போதுள்ள நிலையை வைத்து எடை போடக்கூடாது.

38. சுவற்றில் எறியப்பட்ட பந்தும் ஒடுக்கப்பட்ட இனமும் எதிர்த்தே தீரும்.

39. உலகில் எங்கெங்கு மனித அழிவுகள் நடைபெறுகிறதோ, அங்கெல்லாம் அழிக்கப்படுபவர்கள் சாதி, மதம், இனம், மொழி என்ற ஏதோ ஒன்றில் சிறுபான்மையினராகவே இருப்பார்கள்.

40. இவ்வுலகில் சரி, தவறு என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு செயலும் அது செய்யப்பட்ட காரணத்திற்கும் அது உட்பட்ட சூழ்நிலைக்கும் ஏற்றவாறே வரையறுக்க வேண்டியதாய் உள்ளது.

முந்தைய பாகம் : அகல் மொழி பத்து - பாகம் 3

மொழியும் புகைப்படமும்,
அகல்

11 comments:

  1. திருமண வாழ்க்கைக்கு புற அழகுமட்டும் போதாது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அதையே முதல் தகுதியாக வைத்திருக்கிறோம்.
    >>
    அதுதான் முக்கிய தகுதியா வச்சிருக்கோம்

    ReplyDelete
  2. இவ்வுலகில் சரி, தவறு என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு செயலும் அது செய்யப்பட்ட காரணத்திற்கும் அது உட்பட்ட சூழ்நிலைக்கும் ஏற்றவாறே வரையறுக்க வேண்டியதாய் உள்ளது.
    >>
    நிஜம்தான் தவறும் சில இடங்களில் சரின்னு தான் முடிவகுது

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி ராஜி..

      Delete
  3. உணர வேண்டிய வரிகள் - 32

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்....

      Delete
  4. நமது கூட வருபவர்களை சந்தோசத்தின் போதும், கூடவே வருபவர்களைத் துக்கத்தின் போதும் தெரிந்துகொள்ளலாம்...

    அழகான வரிகள்... அனுபவப் பட்டது...

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் நண்பரே...

      Delete

  5. வணக்கம்

    அகல்மொழி கண்டேன்! அருஞ்சுவை உண்டேன்!
    பகா்மொழி யாவும் பயன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி கவிஞர் ஐயா...

      Delete
  6. தெரியாமல் நாம் செய்த ஒரு தவறை நியாயப்படுத்த முயற்சிக்கும்போது அந்தத் தவறை இரண்டாவது முறை செய்கிறோம்.

    Really true..... Nice thoughts.. keep it up :)

    ReplyDelete