நீ...
மணல் பறக்கும் பாலை நிலத்தில்,
பல முற்செடிகளுக்கு இடையே
முளைத்த முல்லைப் பூவா..?
இல்லை கள்ளியில் காய்த்த
நெல்லிக் கனியா..?
உனது கவிதை வரிகள் என்ன
முத்துக்களா..?
இல்லை கடலில் கண்டெடுத்த
சிப்பிகளா..?
உன் கற்பனை என்ன
சேற்றில் தெளிந்த
செந் நீரா..?
இல்லை செவ்விதழில் வழியும்
தேன் ஊற்றா..?
கள்ளிக் காட்டு இதிகாசமும்
கருவாச்சி காவியமும் எழுதிய
உன் கைகளுக்கு,
என் கண்ணின் மணிகளைச்
சேர்த்து காணிக்கை யாக்குவதா..?
இல்லை என் உயிரையும்
எமனுக்கும் ஏமாற்றி உனக்கு
கொடுப்பதா..?
ஒன்றும் புரியவில்லை..!
அன்புடன்...
உன் ரசிகர்கள் எனும்
கடலில், ஒரு துளியாய்
நான்..
மணல் பறக்கும் பாலை நிலத்தில்,
பல முற்செடிகளுக்கு இடையே
முளைத்த முல்லைப் பூவா..?
இல்லை கள்ளியில் காய்த்த
நெல்லிக் கனியா..?
உனது கவிதை வரிகள் என்ன
முத்துக்களா..?
இல்லை கடலில் கண்டெடுத்த
சிப்பிகளா..?
உன் கற்பனை என்ன
சேற்றில் தெளிந்த
செந் நீரா..?
இல்லை செவ்விதழில் வழியும்
தேன் ஊற்றா..?
கள்ளிக் காட்டு இதிகாசமும்
கருவாச்சி காவியமும் எழுதிய
உன் கைகளுக்கு,
என் கண்ணின் மணிகளைச்
சேர்த்து காணிக்கை யாக்குவதா..?
இல்லை என் உயிரையும்
எமனுக்கும் ஏமாற்றி உனக்கு
கொடுப்பதா..?
ஒன்றும் புரியவில்லை..!
அன்புடன்...
உன் ரசிகர்கள் எனும்
கடலில், ஒரு துளியாய்
நான்..
கவிதையை வாசிக்கும் போதே வைரமுத்து சாரின் ம்தொனியில் வாசித்தேன்...
ReplyDeleteஉன்மையில் வைரமுத்து சாரின் கவிதைக்கு ஈடானதாக இருக்கிறது இந்தக் கவியும்
எனது பெரும்பாலான படைப்புகளுக்கு எப்படியும் உங்க கருத்து வந்துவிடுகிறது நண்பரே சிட்டுக்குருவி... மிக்க நன்றி நண்பா...
Deleteகண்ணதாசன் வாலிக்குப் பிறகு இன்றுவரை கோலோச்சிக் கொண்டிருக்கும் அற்புதக் கவிஞர் வைரமுத்து.அவரைப் பற்றிய வாழ்த்துக் கவிதை அருமை.
ReplyDeleteநானும் வைரமுத்துவைப் பற்றி எழுதிய கவிதை நேரம் இருப்பின் வாசிக்கவும்.
கவிதைச் சூரியன்-வைரமுத்து
கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே... கண்டிப்பாக பார்க்கிறேன் :)..
Deleteகவிப்பேரரசின் இரசிகர் என்பதை அழகிய கவிதைமூலம் உறுதி செய்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteகருத்திற்கு மிக்க நன்றிகள் நடனசபாபதி ஐயா...
Deleteகூடவே என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்...
ReplyDeleteவாங்க ரெவெரி உங்கள சேத்துக்காமல :).. வருகைக்கு நன்றி நண்பரே..
Deleteதமிழ் சோறு போடாதென்றார்கள்!
ReplyDeleteஇவரை அட்டணக்கால் போட வைத்துள்ளது.
இவர் தான் பிழைக்கத் தெரிந்த கவிஞர் போலும்...//
நல்லாயிருக்குதுங்க!
உங்க வாழ்த்து.
உண்மைதான் நண்பரே.. தமிழ் சோறு மட்டும் போடாது., தங்க முட்டை கூட போடும் என்பதை இவர் மூலம் அறியலாம்.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் மதுரன்..
Deleteகவிதைக்கு கவிதையில் வாழ்த்து வாழ்த்துவது ஒரு கவி என்றால் கேட்கவா வேண்டும்.
ReplyDeleteபூக்களை பூக்களால் அர்ச்சிப்பது போல் அற்புதம்
நன்றிகள் கவிஞரே... வருகைக்கும் வாழ்த்திற்கும்..
Deletekavikalin sankamam....alzaku varikalila?ilai varnipavarila? ilai varnikapadupavarila? ..puriyavilai.. :)
ReplyDeleteThank you.....
Delete