Saturday, 27 October 2012

மின்னலே படத்திற்கு நான் எழுதிய பாடல்

மின்னலே படத்தில் வரும் "அழகிய தீயே" பாடலின் வரிகளை முற்றிலும் நீக்கி விட்டு அதே மெட்டிற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தவாறு நான் எழுதிய அந்த பாடல் வரிகள் இதோ.. அதே மெட்டில் பாடிப்பாருங்கள். கருத்துக்களைக் கூறுங்கள் நண்பர்களே..

ஏ அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே...
உன் விரல் நகங்களை நான் தீண்ட தீண்ட
வின் மீன்கள் விழுகிறதே உன்னைக் காண... (2)

பனை மரம் போல் மனம் இறுகியதே (chorus)
அவளைப் பார்த்ததும் கண் விழி பிதுங்கியதே..

கண்ணில் ஊசி ஏற்றி விட்டாள்...

இவன் மனதில் பாரம் (chorus)
உன் மனதோ தூரம்...

எனை ஊமை யாக்கி விட்டாள்... (2)

மனதில் உந்தன் மயக்கம்
அணைத்தால் சற்று இனிக்கும்
காலம் கூடாமல் கை கூட சேராமல்
ஆளை ஏய்தாயே மனம் தங்குமா..?

மூளையில் மின்னல் வெட்டிய சத்தம் (chorus)
நாளை காதல் தேவதையின் முத்தம்
மனம் இரவின் நடுவிலே, நிலவின் ஒளியிலே
நீந்த துடிப்பதும் என்ன..?
மூங்கில் தண்டு போல் தேகம்
ஆனால் முள்ளைக் கண்களில் கொண்டாய்..

அடி அள்ளிப் பூங்கொடி,
அருகம் புல் செடி
உந்தன் தாய் மடி
தே தே தே தேட....

ஏ தீவே அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே...

never don't insult me
when you are going marry me ..
ஏகு எ எ எ எ....

என் உயிர் ஒன்றாய் ஆக்கி (chorus)
உன்னுள்ளே நான் கலந்தேன்
உன் ஓரக்கண் பார்வையால்
என் நெஞ்சை நான் இழந்தேன்..
ஒ ஒ.. (2)

உந்தன் விரலில் எந்தன் இமை தான்
எந்தன் இமையில் உந்தன் சுமை தான்
இதயம் என் ரத்தம் வேண்டாமே என சொல்ல
வியர்வைத் துளையோடு வெளியேறுதே...

மெழுகு வார்த்த ஓர் கன்னம் (chorus)
அதுவும் தேன் கலந்த ஓர் கிண்ணம்
மனம் மார்பின் நடுவிலே
மையல் விழியிலே
வாழத் துடிப்பதும் என்ன..?

அள்ளிப் பூங்கொடி இடையும்
உந்தன் வாசம் வீசும் பல உடையும்...

மனம் இந்த நாள் வரை
வெந்து போட்டதால்
நொந்து போனது

போ.. போ.. போதும்...

ஏ தீவே அன்பின் தீவே
எனை ஆளுகிறாயே....

12 comments:

  1. பாடல் வரிகள் நன்றாக உள்ளன.பாட்டு நினைவில் இல்லாததால் கவிதையாய் படித்துப் பார்த்தேன்.

    ReplyDelete
  2. Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி முரளிதரன் சார்...

      Delete
  3. வித்தியாசமான கற்பனை.நல்லா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி ராஜி...

      Delete
  4. Azhagiya theeye vargalil enna kurai kandder ??

    ReplyDelete
    Replies
    1. அழகிய தீயே வரிகளில் குறை எல்லாம் ஒன்னும் இல்ல நண்பரே.. அந்த வரிகள் பிடித்துப்போய் அந்த சூழ்நிலைக்கு நான் எழுதினால் எப்படி இருக்கும் என எண்ணி எழுதியதே இந்த வரிகள் :).. வருகைக்கு நன்றி மாதவ்..

      Delete
  5. கண்ணில் ஊசி ஏற்றி விட்டாள்...eanya indha kolaveri ???? nenechu paakkave bayama irukke ean ? ean ? ippadi ?

    ReplyDelete
    Replies
    1. காதல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. ஹி ஹி... நேர்மறைப் பொருள் எடுத்தா பயமாத்தான் இருக்கும்... ஆனால் அப்படி எடுக்க கூடாது :)... வருகைக்கு நன்றி விமல்..

      Delete
  6. முரளி அவர்களைப்போல் நானும் பாடலின் மெட்டை மறந்து கவிதையாகவே படித்துவிட்டேன். எழுத்துப் பிழைகள் தவிர்த்திருக்கலாம்.

    "முன்பே வா" பாடலை நானும் remix செய்துள்ளேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும். http://mosibalan.blogspot.in/search/label/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%28remix%29

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே... கண்டிப்பாக பார்க்கிறேன்..

      Delete
  7. alzakiya theye karoki pottu padi pathen nala iruku...sila varthakal porunthavilai...nan padiyathalo yanvo....analum super....

    //never don't insult me
    when you are going marry me ..// ha ha ha arumai

    ReplyDelete