Wednesday 21 November 2012

எனது குறுங்கவிதைகளில் சில .. பாகம் 4

தந்தை

உன்னை வயிற்றில்
சுமக்கும் பாக்கியம்
இல்லை...

அதை என்
நெஞ்சில் சுமந்து
தீர்த்துக் கொள்கிறேன்..!


உதட்டோர மச்சம்

பிரம்மன் படைத்து,
அவனே பிரமித்து...

எப்படியும் திருஷ்டி
படுமென தெரிந்தே
அவன் வைத்த
கரும் "மை"...

அவள் உதட்டோர
மச்சம்...!



காப்பவனுக்கு காவல்

ஊரைக் காக்க 
ஐயனார் சாமி...

அவன் 
உண்டியலைக் 
காக்க,

கோவில் பூசாரி..!



நாட்குறிப்பில் சில ஞாபகம்

எனது முடிந்துபோன
நாட்குறிப்பை
தோரயமாயக
திறந்தாலும்..,

எப்படியும் தென்படுகிறது..

நீ ஒளிந்து நின்று
எனைப் பார்க்கும்
ஒற்றைச் சுவரும்...

தன் குழந்தையை..

உன் கூந்தலில்
குடியேற அனுமதிக்கும்
ரோஜாச் செடியும்..!


தண்டனை

குறைகளோடு 
பொருட்களை
கொடுப்பவன்
தண்டனைக்கு 
உரியவன் என்று 
முடிவு செய்தால்..,

தண்டிக்க வேண்டும்...
அந்த கடவுளையும்..!



விரையப் பொருட்கள்

விவசாயத்திற்காக
கடன் வாங்கி...

இன்னும்
விற்பனைக்கு போகாமல்,
வீட்டைக் காக்கும்
விரையப் பொருட்கள்...

"நானும் என் மனைவியும்"




காதல் எதிரியின் காதல்  இலக்கணம்

கண்ணில் வெட்டிய
மின்னலை

கவிதையாய் எழுதிய
இதயத்தால்

மூளையில் முளைக்கும்
முள்ளிற்கு

முட்டாள்கள் வைத்த பெயர்
காதல்..!


19 comments:

  1. அனைத்தும் சிறப்பு குறிப்பாக தந்தை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா மேடம் :)

      Delete
  2. அனைத்தும் அருமை, நெஞ்சைத் தொட்டது.

    நீங்களும் இங்கு வந்து போகலாமே!

    http://semmalai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் ஆகாஷ்.. கண்டிப்பாக உங்கள் தளத்திற்கு வருகிறேன்..

      Delete
  3. இறைவன் குறைகளைக் கொடுப்பதுவும் படிப்பினைக்குத்தான்......
    ஒவ்வொன்றும் அருமை

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி சிட்டுக்குருவி.. :)

      Delete
  4. நெஞ்சைத் தொட்டது உங்கள் குட்டிக்கவிதைகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அன்பரே..

      Delete
  5. அனைத்தக் கவிதைகளும் அருமை அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே அருணா :)...

      Delete
  6. கவிதைகள் அத்தனையும் நன்று கடைசிக் கவிதை மிக அருமை.
    த.ம.9

    ReplyDelete
    Replies
    1. பிடித்த கவிதையை மேற்கோள் காட்டியதற்கு மிக்க நன்றி முரளி சார்..

      Delete
  7. முத்துக்களால் கோர்க்கப்பட்ட மாலை! அருமை! வளர்க வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா !

      Delete
  8. எல்லா கவிதைகளும் சூப்பர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே சுரேஷ் ...

      Delete
  9. அருமையான சிந்தனைகள்..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே..

      Delete
  10. தந்தை,உதட்டோர மச்சம் super inkooooo......and the last one awesome.. :)

    ReplyDelete