அந்த நாள்...
அவன் எனக்கு மாலையிட்டு
மெட்டியிட்ட நாள்..
அதிகாலை ஆறு மணி,
கார் கிளம்பியது...
அவன் போவதைத்
தவிர்க்கச் சொல்லி,
கண்களும் இமைகளும்
என்னோடு சண்டையிட,
என் இதயமோ இதழுக்குத்
தடை போட்டது..
அந்த நாள் அவன் ஆஜர்
அலுவலகதிற்கு தேவை
என்பதை அறிந்து..
நேரம் நிதானமாய் நகர்ந்தது..
கடிகாரத்தில்,
ஆமை போல்
நகர்ந்த அந்த அரை முள்,
ஐந்து மணியைக் காட்டியது..
நான் செய்த அந்த கால்(call)
சோதனைக்கு அனுப்ப பட்ட
செயற்கைக் கொள் போல,
ஆறாவது முறையும்
அவன் எடுக்காமல்
தோல்வியைத் தழுவியது..
ஐந்து நிமிடத்தில் ஒரு
sms செய்தி...
I love you என்று..
நெஞ்சம் நம்ப மறுத்தது.
என் இதயத் துடிப்பின் ஓசை
இருபது மடங்கானது.
ஏன், எதிர் வீட்டிற்கே
கேட்டிருக்கும்...
பரீட்சை தாளை பதட்டத்தோடு
சரிசெய்யும் மாணவன் போல...
என் விழிகள் சண்டையிட்டுக் கொண்டு
அந்த செய்தியை பல முறை சரிபார்த்தது..
காதலித்த நாள் முதல்
இப்படி அவன் சொல்வது
இது மூன்றாவது முறை..
ஆனால், அதைக் கொண்டு வந்து
கொடுத்த மொபைலுக்கு கொடுத்தேன்
முன்னூறு முத்தங்கள்..
அப்படி அவன்
சொன்னதாலோ என்னோவோ
காய்ச்சல் கொஞ்சம் தொத்தியது..
சற்று நேரத்தில்..
கார் ஹாரன் கத்தியது..
உள்ளே வந்தான்
உடை களைந்தான்
பசி கொண்டான்
பலகாரம் உண்டான்..
மணி பத்தானது...
மழைத் துளியை மணந்த
இலையைக் காட்டிலும்,
பனித்துளி படர்ந்த இலை
அழகல்லவா..?
அது போல,
தங்க மெட்டியை தாங்கினாலும்,
என் விரல்களுக்கு வெள்ளி
மெட்டியே விருப்ப மென்று,
எனக்கு மட்டுமே தெரிந்த செய்தி
இவனுக்கும் எப்படி தெரிந்ததோ..!?
அவன் கைகள்
என் பாதத்தைப் பற்றிட,
தங்க மெட்டியைக்
களைந்த விரல்கள்,
வெள்ளி மெட்டியைத் தழுவியது...
என் உள்ளம் உணர்ந்தது
திருமண நாளன்று
அவனோடு மற்றுமொரு
திருமணம்..
ஒரு "திருமணப் பரிசாய்..!"
என் கண்கள்
அவனுக்கு கட்டளையிட,
அவன் கைகள் என்னைக்
கட்டிலில் இட்டது...
காட்சி முடிந்தது.
காய்ச்சலும் குறைந்தது..
பின்பு, சிறிதொரு உறக்கம்
சிறு பிள்ளை போல..
நடு இரவு நகர்ந்து
நான்கு மணியானது...
காதல் விளையாட்டில்,
என் இடை நழுவிய உடையை
அவன் இமைகள் கண்டு
சரி செய்ய...
அவன் இதழ்கள் இரண்டும்,
இதமான வெப்பத்தால்
இம்மி யளவு முத்தமிட,
திறக்காத என் கண்கள்
திகைத்துப் போய்
வெட்கப்பட்டது...
இருந்தும் அதையே
வேண்டுமென்றது..
முத்த விசயத்தில்
இவன் ஒரு முதலாளி..
அளவாகத்தான் கொடுப்பன்.
ஆனாலும் கொஞ்சம்
அழகாகக் கொடுப்பான்..
இந்த அழகான உணர்வு
அகலும் முன்னே..
நெஞ்சுக் குழியில்
முகம் பதித்து - என்
பிஞ்சுக் குழந்தை யானான்..
அப்படியே அவனை
அனைத்துக் கொண்டது
என் கைகள்..
அதன் பின்,
அசர மறந்தது
என் கண்கள்..
இருட்டில் பரிமாறிய
இந்த அன்பைக் காண,
சூரியனும் விளக் கெடுத்தான்,
பொழுதும் விடிந்தது..
அம்மா சத்தமிட்டு எழுப்பினாள்,
அந்த "அதிகாலைக் கனவு"
அத்தோடு முடிந்தது..!
அவன் எனக்கு மாலையிட்டு
மெட்டியிட்ட நாள்..
அதிகாலை ஆறு மணி,
கார் கிளம்பியது...
அவன் போவதைத்
தவிர்க்கச் சொல்லி,
கண்களும் இமைகளும்
என்னோடு சண்டையிட,
என் இதயமோ இதழுக்குத்
தடை போட்டது..
அந்த நாள் அவன் ஆஜர்
அலுவலகதிற்கு தேவை
என்பதை அறிந்து..
நேரம் நிதானமாய் நகர்ந்தது..
கடிகாரத்தில்,
ஆமை போல்
நகர்ந்த அந்த அரை முள்,
ஐந்து மணியைக் காட்டியது..
நான் செய்த அந்த கால்(call)
சோதனைக்கு அனுப்ப பட்ட
செயற்கைக் கொள் போல,
ஆறாவது முறையும்
அவன் எடுக்காமல்
தோல்வியைத் தழுவியது..
ஐந்து நிமிடத்தில் ஒரு
sms செய்தி...
I love you என்று..
நெஞ்சம் நம்ப மறுத்தது.
என் இதயத் துடிப்பின் ஓசை
இருபது மடங்கானது.
ஏன், எதிர் வீட்டிற்கே
கேட்டிருக்கும்...
பரீட்சை தாளை பதட்டத்தோடு
சரிசெய்யும் மாணவன் போல...
என் விழிகள் சண்டையிட்டுக் கொண்டு
அந்த செய்தியை பல முறை சரிபார்த்தது..
காதலித்த நாள் முதல்
இப்படி அவன் சொல்வது
இது மூன்றாவது முறை..
ஆனால், அதைக் கொண்டு வந்து
கொடுத்த மொபைலுக்கு கொடுத்தேன்
முன்னூறு முத்தங்கள்..
அப்படி அவன்
சொன்னதாலோ என்னோவோ
காய்ச்சல் கொஞ்சம் தொத்தியது..
சற்று நேரத்தில்..
கார் ஹாரன் கத்தியது..
உள்ளே வந்தான்
உடை களைந்தான்
பசி கொண்டான்
பலகாரம் உண்டான்..
மணி பத்தானது...
மழைத் துளியை மணந்த
இலையைக் காட்டிலும்,
பனித்துளி படர்ந்த இலை
அழகல்லவா..?
அது போல,
தங்க மெட்டியை தாங்கினாலும்,
என் விரல்களுக்கு வெள்ளி
மெட்டியே விருப்ப மென்று,
எனக்கு மட்டுமே தெரிந்த செய்தி
இவனுக்கும் எப்படி தெரிந்ததோ..!?
அவன் கைகள்
என் பாதத்தைப் பற்றிட,
தங்க மெட்டியைக்
களைந்த விரல்கள்,
வெள்ளி மெட்டியைத் தழுவியது...
என் உள்ளம் உணர்ந்தது
திருமண நாளன்று
அவனோடு மற்றுமொரு
திருமணம்..
ஒரு "திருமணப் பரிசாய்..!"
என் கண்கள்
அவனுக்கு கட்டளையிட,
அவன் கைகள் என்னைக்
கட்டிலில் இட்டது...
காட்சி முடிந்தது.
காய்ச்சலும் குறைந்தது..
பின்பு, சிறிதொரு உறக்கம்
சிறு பிள்ளை போல..
நடு இரவு நகர்ந்து
நான்கு மணியானது...
காதல் விளையாட்டில்,
என் இடை நழுவிய உடையை
அவன் இமைகள் கண்டு
சரி செய்ய...
அவன் இதழ்கள் இரண்டும்,
இதமான வெப்பத்தால்
இம்மி யளவு முத்தமிட,
திறக்காத என் கண்கள்
திகைத்துப் போய்
வெட்கப்பட்டது...
இருந்தும் அதையே
வேண்டுமென்றது..
முத்த விசயத்தில்
இவன் ஒரு முதலாளி..
அளவாகத்தான் கொடுப்பன்.
ஆனாலும் கொஞ்சம்
அழகாகக் கொடுப்பான்..
இந்த அழகான உணர்வு
அகலும் முன்னே..
நெஞ்சுக் குழியில்
முகம் பதித்து - என்
பிஞ்சுக் குழந்தை யானான்..
அப்படியே அவனை
அனைத்துக் கொண்டது
என் கைகள்..
அதன் பின்,
அசர மறந்தது
என் கண்கள்..
இருட்டில் பரிமாறிய
இந்த அன்பைக் காண,
சூரியனும் விளக் கெடுத்தான்,
பொழுதும் விடிந்தது..
அம்மா சத்தமிட்டு எழுப்பினாள்,
அந்த "அதிகாலைக் கனவு"
அத்தோடு முடிந்தது..!
// அம்மா சத்தமிட்டு எழுப்பினால்,
ReplyDeleteஅந்த "அதிகாலைக் கனவு"
அத்தோடு முடிந்தது..!//
கனவு இத்தனை நீளமா !? அசத்தல்!
தங்கள் வருகையால் மகிழ்கிறேன்.. கருத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா..
Deleteசுவாரஷ்யமாய் ரசித்துப் படித்தேன்...
ReplyDeleteகடைசியில் கனவாய் கலைந்துவிட்டது.
நிஜாமாய் இருந்தால் காதலின் உண்மைத் தன்மையை உணர்த்தும்
இதைப் படிக்கும் நண்பர்களுக்கு இது போன்ற கனவு நிஜமாக வேண்டுகிறேன் நண்பா :)..
Deletemunnuru muththangal inimai tholarae-gopiramesh
ReplyDeleteNandrigal Nanbare :)
DeleteMutham Alavaka than kuduppan Athum Alagaka kuduppan Antha varthia ALUGU
ReplyDeleteThanks you boss :)
DeleteArputhamana Kanavu anaivarukum ethupol amainthal valvu enimaiyakum.KAMAL
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே :)..
Delete""அதைக் கொண்டு வந்து
ReplyDeleteகொடுத்த மொபைலுக்கு கொடுத்தேன்
முன்னூறு முத்தங்கள்..""
லவ்வர்ஸ் குடுக்குற பாதி முத்தம் மொபைலுக்கு தான் ..... :)
கொடுத்து வச்சது ..
ஹி ஹி அது என்னவோ உண்மைதான் பாஸ்..
Deletereally nice..romba rasichu padicha kavdhaigal la idhuvum ondru :-)
ReplyDeleteநன்றிகள் தேன்மொழி ...
Deleteமெழுகுவர்த்தியின் ஒளியை வட்டமிடுகிறது சிறு பூச்சிகள்,
ReplyDeleteநிலவை வட்டமிடுகிறது என் பார்வைகள்,
உங்கள் கவிதைகளை வட்டமிடுகிறது என் நினைவுகள்.........
கருத்திற்கு மிக்க நன்றி தல ..
Deleteமிகவும் இனிமையாகவும் இயல்பாகவும் நகர்ந்து இறுதியில் கனவகி காயப்படுத்திவிடுகிறது கவிதை..படைப்புக்கு வெற்றியை குவிக்கிறது.கற்பனையானாலும் சில உண்மைகள் ஒழிந்து கண்சிமிட்டுகிறது..வாழ்த்துக்கள்.
ReplyDeleteSuch a good one
ReplyDeleteThank you boss...
DeleteSuch a good one.
ReplyDeleteஅவள் அவனுக்கு
கொடுத்த முத்தத்தை வாங்கிக் கொண்டது
தொலைபேசி
(PADITHATHIL PIDITHATHU)
Oh yeah... thank you...
Deletewoowwww good one akal......palarin yeakkam mobile ah piranthirukalam..pala muthankalukaka.... :)
ReplyDeleteThank you......
Deleteஅருமை :)
ReplyDeleteCool and I have a dandy offer you: Does Renovation Increase House Value small home renovations
ReplyDelete