Thursday 30 May 2013

இது தான் உலகம் (ஒரு பக்கக் கதை)


அலுவலகம் முடிந்த நேரம். பெட்ரோல் பங்கில் கூட்ட நெரிசல். பல வாகனங்கள் நின்ற இடத்திலேயே கார்பன் மோனாக்ஸைடை காற்றில் கலந்து கொண்டிருந்தது. வானத்தில் கருமேகங்களின் ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. பூமியை நோக்கி இறங்கிவந்த இரண்டு மழைத்துளிகள் கரும்பாறையில் பட்ட நீர்போல் எனது கையில் பட்டு சிதறியது. பெட்ரோல் நிரப்ப வண்டியோடு நின்று கொண்டிருந்தேன். எனக்கு முன் ஒருவர், அவரைத் தொடந்து பலர். எனக்குப் பின் ஒருவர், அவரைத் தொடந்து பலர்.

வரிசையில், எனக்குப் பின் நிற்பவரை முந்திக்கொண்டு வர அவருக்குப் பின் இருப்பவர் பைக் ஆக்சிலரேட்டரை முறுக்கினார். எனக்குப் பின் இருந்தவர் அவரை முறைத்துப் பார்த்துவிட்டு சொன்னார்.

"ஹலோ.. உங்களுக்கு முன்னாடியே வந்து ரொம்ப நேரமா காத்துட்டு இருக்கோமுல்ல... என்ன அவசரம் ? வெய்ட் பண்ணுங்க..."

அவரை முந்த முயற்சித்தவர் முகத்தில் சிறிய அவமானத்தைச் சுமந்தபடி தலையைக் குனிந்துகொண்டே பின்வாங்கினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் முன்னே திருப்பினேன். மூன்று நிமிடங்கள் கடந்தது.

ஆக்சிலரேட்டர் முறுக்கப்பட்டதால், ஒரு வண்டி என்னை முந்திக்கொண்டு போக முயற்சித்து எனக்கு இணையாக வலது புறத்தில் முண்டியடித்துக் கொண்டு வந்து நின்றது. நான் அவரைப் பார்த்தேன், முகத்தை இருக்கமாக்கிகொண்டு முறைத்தேன். வரிசையில் தன்னை முந்திக்கொண்டு வந்தவனை எச்சரித்து, பின்வாங்கச் செய்த நபர் அவர்.

முற்றும்...

அன்புடன்,
அகல்

15 comments:

  1. அன்பின் அகல் - கதை அருமை - புத்திமதி அடுத்தவனுக்குத்தான் - நமக்கல்ல - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

      Delete
  2. நல்ல கதை...

    இந்த (fb,Tweet, g+) Gadget-சிறிது ஒதுங்கி இருந்தால் படிப்பதற்கு சிரமம் இல்லாமல் இருக்கும்... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தனபாலன் சார்...

      Delete
    2. அதை நீக்கிவிட்டேன் தனபானால் சார்.. ஒருமுறை பார்த்து விட்டுச் சொல்லுங்கள்... நன்றி சார்...

      Delete
    3. page Up / page Down அடிக்கடி செய்ய வேண்டி இருந்தது அல்லது Mouse-யை Click-க் கொண்டே இருக்க வேண்டி இருந்தது... தவறாக என்ன வேண்டாம்... இப்போது சூப்பர்...! நன்றி...

      Delete
    4. உங்களது பார்வையைக் கூறினீர்கள்... தவறாக என்ன எதுவுமில்லை சார்... மிக்க நன்றி...

      Delete
  3. அருமை.போதனை என்பது எப்போதும்
    அடுத்தவர்களுக்குத்தானே
    கடைபிடிப்பதற்கல்லவே
    சொல்லிச் சென்றவிதம் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி ரமணி சார்..

      Delete
  4. உண்மை...
    சுள் எனச் சுடும் கதை என்று சொன்னாலும்ம் குற்றமில்லை சகோ

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே....

      Delete
  5. Replies
    1. நன்றிகள் மகேஷ்....

      Delete
  6. advice ellam aduthavankaluku than nu nnaikurom..nanum than..sila nerankalil seium siru thavarukal nenjai kuthukirathu....nantrikal akal... manathil siru matram.. :)

    ReplyDelete