காதலர் தினமொன்று வேண்டும் !

ஒற்றை ரோஜா இதழ்கள்
மௌனமாகும் மொழி
பேசிக்கொள்ளும் விழிகள்
பிள்ளைமொழி சினுங்கலோடு
காதலர் தினமொன்று வேண்டும்

எளிமையான அன்பு
இலக்கணமில்லாத காதல்
புன்னகை குறையாமல் பாசம்
அறைகளைத் தேடாத நேசத்தொடு
காதலர் தினமொன்று வேண்டும்

அலைகள் வீசும் கடற்கரை
ஆட்கள் நிறைந்த மணல்மேடு
அவர்கள் முகம் சுளிக்காத வகையில் - விரல்
முத்தங்களோடு முடிந்துபோகும்
காதலர் தினமொன்று வேண்டும்

மனதில் நிற்கும் மதிய உணவு
மாற்றிக்கொள்ளும் எச்சில் இனிப்பு 
விடைதர முடியாத தருணம்

பக்கத்தில் பரிசுப்பொருள் 
அதன் விலைபாராத காதலியோடு
காதலர் தினமொன்று வேண்டும்

சொல்லாத காதல்
சொல்லியுரைக்கும் போதும்
மிகையில்ல வார்த்தைகள் கொண்டு
மனதை சிறைபிடிக்கும் வித்தைகள் கண்ட 
காதலர் தினமொன்று வேண்டும்

வேர்களற்ற காரணம்
விரிசலுற்ற காதல்
போலிவேஷம் களைத்துவிட்டு 
புத்துயிர்பெரும் பொழுதோடு
காதலர் தினமொன்று வேண்டும்

சாதி மதம் கடந்து
ஒன்றில் ஒன்றாய் கலந்து
வாழத்துடிக்கும் வயதில்
பெற்றவரின் பிடிவாதத்தால்
பிணமாகாத காதலர்களோடு
காதலர் தினமொன்று வேண்டும்

நாகரிக வளர்ச்சியால்
நள்ளிரவு நிகழ்ச்சி போனாலும்
கற்பழிப்பு வழக்கில்லாத
காதலர் தினமொன்று வேண்டும்

இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள் !

அன்புடன்,

அகல் 



5 comments: Leave Your Comments

  1. அருமை! சிறப்பான கவிதை! நன்றி!

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பாஸ்..

    ReplyDelete
  3. அழகு அழகு அகலின் கவிதை அப்படியொரு அழகு !!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி :)

      Delete
  4. alzaka than irukum nenka solrathu mathiri love um lovers days iruntha...yana panrathu boss..kudupanai ilayae..... :P

    ReplyDelete