திராவக வீச்சில் இவள் பயணம் திசை மாறியது

கடந்து செல்ல
ஏங்கிய ஓடம்
கரை சேரவில்லை

மொட்டவிழ்த்த
மல்லிகை இதழ்கள்
மலராகவும் இல்லை

திராவக வீச்சில்
இவள் பயணம்
திசை மாறியது

ஊனமில்லா
இவள் ஆன்மா
கரையேறியது

இன்று
பெற்றோருக்கோ
பிள்ளை இல்லை

இவளைக்
கொன்றவனுக்கு
என்று எல்லை !?

கனத்த மனதுடன்,
அகல்
7 comments: Leave Your Comments

 1. மனம் வலிக்கிறது
  ஆழ்ந்த இரங்கல் !

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் ஸ்ரவாணி ...

   Delete
 2. Replies
  1. இந்த கொடுமையைச் செய்த கொடூரனுக்கு என்ன தண்டனை கிடைக்குமென்று பார்ப்போம். நன்றிகள் தனபாலன்.

   Delete
 3. வலிக்கிறது மனம்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பரே.. எத்தனை கனவுகளோடு வாழ்ந்தாளோ..

   Delete
 4. enum yathanai kalam intha poratamoo.....patharukirathu manam

  kaneerkal than avaluku samarpanam....

  ReplyDelete