Tuesday 11 June 2013

கடவுள் இருந்துவிட்டுப் போகட்டுமே !

அது ஒரு அநாதை இல்லம்
யாரோ ஈன்றெடுத்த
குட்டிக் குழந்தையவள்

அதிகாலை வேளையில்...

பத்து பிஞ்சுவிரல்கள் 
ஒன்றுகூடி ஐந்தாகும்

சற்று குனிந்திருக்கும்
அவளது முகத்தில்
இமைகள் மூடப்பட்டிருக்கும்

அவளின் முன்னங்கால்களை

முத்தமிட
நிலம் ஏக்கிக்கொண்டிருக்கும்


அந்த வெண்பாதகங்கள்
தூரத்திலிருந்து பார்க்கும்
பூச்செடிகளைப் பொறாமைப்பட
வைத்துக் கொண்டிருக்கும்

என்ன கேட்க வேண்டுமென்று
கேட்கத்தெரியாத
அந்த மெல்லிதழ்களில் பிறக்கும்
சாமி சாமி என்ற
முனகலிசை காற்றில்
கலந்து கொண்டிருக்கும் 

இத்தனை அழகைப்பார்க்கும்
வரம் கிடைக்கையில்
இல்லை 
இல்லையென்று
சொல்லும் 
அந்தக் கடவுள்தான்
இருந்துவிட்டுப் போகட்டுமே !


அன்புடன்,
அகல்

14 comments:

  1. ரசித்தேன்... படமும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார்.. இந்த வரிகள் வலைதளத்தில் பார்த்த அந்த புகைப்படத்திற்காக எழுதப்பட்டது...

      Delete
  2. azhagana kavithai..great :-)

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் தேன்மொழி...

      Delete
  3. படமும் கவிதையும் சிறப்பு! அருமையான படைப்பு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் நண்பரே...

      Delete
  4. அழகு......
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ஜீவா சார்....

      Delete
  5. சிறப்பான கவிதை. வணங்கும் குழந்தை படமும் நெஞ்சை நிறைக்கின்றது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி....

      Delete
  6. இத்தனை அழகைப்பார்க்கும்
    வரம் கிடைக்கையில்
    இல்லை இல்லையென்று
    சொல்லும்
    அந்தக் கடவுள்தான்
    இருந்துவிட்டுப் போகட்டுமே ! -

    அழகான படம் தந்த அருமையான கவிதை ..! பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றிகள் ராஜேஸ்வரி...

      Delete
  7. Kadavul irundhuvittu pogattumey..! romba nalla irukku sago.......

    ReplyDelete
  8. Azhagana kavithai.. varigal anaithum arumai..kadaisi varigal arputham.. rasithu padithen..vazhthukkal agal :)

    ReplyDelete