Saturday 29 December 2012

நீயா நானா கோபிக்கும், கார்பரேட் to விவசாயி கௌதமிர்க்கும் ஒரு கண்டன மடல்

நீயா நானா கோபிக்கு எனது வணக்கம்.

விஜய் தொலைக்கட்சியில் நீங்கள் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சி, வெளியுலகிற்கு சரிவர தெரியாத பல விடயங்களை மக்கள் முன் எடுத்துச் செல்கிறது என்பதை யாவரும் அறிவோம். இளைஞர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதையும் மறுக்க முடியாது. இதற்கு நீங்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் விதமும், அங்கே விவாதிக்கப்படும் கருத்துக்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதற்காக உங்களுக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் பல லட்சம் இளைஞர்களில் ஒருவனாய் ஒரு கண்டன மடலை எழுதும் கட்டாயத்தில் இன்று என்னை தள்ளிவிட்டீர்கள். அதற்கான காரணங்களை விளக்கவே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, கார்பரேட் செக்டர் மனமகிழ்ச்சி தருகிறதா இல்லையா என்பதைப்பற்றி, நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. அதில் கார்பரேட் செக்டர் பற்றிய உண்மை நிலைகளை இரு தரப்பினரும் எடுத்து வைத்தனர். விவாதம் நன்றாகப் போனது, கார்பரேட்டை விட்டு வெளியேறி தற்போது விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன் என்று கௌதம் என்ற ஒருநபர் கூறும்வரை. அவரை நீங்கள் பாராட்டியபின், உலகமே பாராட்டிக் கொண்டிருக்கும் வேளையில் நான் இப்படி குறை கூறுவது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் அதுதான் எதார்த்தம். உண்மை.




நீயா நானா நிகழ்சிகளில் எவரேனும் ஒருவர் தவறான கருத்தை முன்வைக்கும் வேளையில், அது சமுதாயத்தில் ஒரு எதிர்மறை தாக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்பதற்காக அந்த கருத்துகளுக்கு பலமுறை உங்கள் கண்டனத்தை பதிவு செய்திருப்பதை உலகம் அறியும். அதை நானும் அறிவேன். அதை வரவேற்கவும் செய்தேன்.

ஆனால் அன்று நடந்த நீயா நானா நிகழ்ச்சியில், நீங்கள் ஒரு அடிப்படையற்ற தவறான உதாரணமான கௌதம் என்பவரை, சரியான பின்னணி மற்றும் முறையான காரணங்களை ஆராயாமல் அவரை Wow, Super, You are a great Indian, You are great great great Indian, You set an example என தேவையற்ற புகழாரம் சூட்டி, சமூகத்தில் ஒரு எதிர்மறை தாக்கத்தை உருவாக்கியதற்காக எனது கண்டனத்தை முதலில் பதிவு செய்துவிட்டு, அதற்கான காரணங்களையும் கௌதம் செய்த செயலும் அதில் முறையாக ஆராயப்படாத விடையங்களையும் இங்கு முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

அதற்கு முன், கௌதமும் நீங்களும் பேசிய அந்த காணொளியை ஒருமுறை பார்க்க வேண்டுகிறேன்.





என்னைப்பற்றி சில வரிகள்


திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமம் எனது சொந்த ஊர். குடும்பம் விவசாய பின்னணியைக் கொண்டது. 2007 இல் திருச்சி ஜெ.ஜெ பொறியியல் கல்லூரியில் எனது பொறியியல் இளநிலை பட்டத்தை முடித்துவிட்டு தற்போது ஹைதராபாத்தில் ஒரு அமெரிக்க தொலைதொடர்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். இங்கே எனது அறிமுகம் தேவையில்லை என்றாலும் இந்த தலைப்பைப் பற்றி பேசும் முன் நானும் கார்பரேட்டில் வேலை செய்யும் கௌதமைப்போல் ஒரு பின்னணியை கொண்டவன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம். அதற்காகவே சிலவரிகள்.


கௌதமின் செயலும், நீங்கள் ஆராயாத உண்மைகளும்


அன்று நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் கார்பரேட்டை விட்டு வெளியே வந்தீர்கள் என்று கௌதமிடம் கேட்ட கேள்விக்கு, அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

"எனக்கும் என்னோடு சேர்ந்து வேலையைவிட்ட சிலருக்கும் நிறுவனங்கள் அதிகமாக சம்பளம் தந்தது அது எனக்குள் தேவையற்ற மாற்றத்தை கொண்டு வருகிறது. ஆளையே மாற்றுகிறது. அந்த பணத்தால் தேவையில்லாமல் என்னைச் சுற்றி பொருட்கள் சேருகிறது. ஒரு விலையுயர்ந்த மொபைல், Brand shirt, Brand Glass என வைத்திருக்கும் பட்சத்தில் தான் என்னால் அங்கு இருக்க முடியும் என்ற சூழல் உருவாகிறது. என்று எனது வாழ்கையை ஒரு பெட்டிக்குள் சுருக்க முடிகிறதோ அன்றே எனது வாழ்க்கை முழுமை பெறுகிறது.

நமக்கு தேவை எது தேவை இல்லாதது எது என்பதை பிரித்துப் பார்க்கவே நாம் கார்பரேட் சூழலை விட்டு வெளியே வந்தால் தான் முடியும என்று மிக அழகாக அனைவரும் ரசிக்கும்படி 
வார்த்தைகளைக் கோர்த்துப் பேசினார். ஆனால் இது அவரின் அறியாமையையும், அவரின் மனம் அவரின் கட்டுப்பாட்டில் இல்லாமல் அலைபாய்கிறது என்பதையுமே காட்டுகிறது. அதோடு சமூக பொறுப்புகளை உதறித்தள்ளிய அவரின் சுயநலத்தையும் சொல்கிறது.


அதற்கான காரணங்களை எனது கருத்துகளாக முன்வைக்கிறேன்.


1. எந்த அலுவலகத்தில் ஒரு விலையுயர்ந்த மொபைல், Brand shirt, Brand Glass போடாமல் இருந்தால் நண்பர்கள் மதிப்பதில்லை அந்த அலுவலகத்தில் வேலை செய்ய முடிவதில்லை என்பது எனக்கு சற்றும் விளங்காத ஒன்றாக இருக்கிறது. அப்படி எந்த ஒரு கார்பரேட் அலுவலகமும் ஒரு விதியை கொண்டு இயங்குவதில்லை. இப்படி இருந்தால் தான் நண்பர்கள் பேசுவார்கள் என்ற அவரின் கருத்துக்களை முற்றிலும் எதிர்க்கிறேன். அதற்கு எனது அலுவலகத்தைப் பற்றிய சிறு உதாரணத்தை தருவது அவசியமாகிறது.

நான் வேலைபார்க்கும் நிறுவனம் உலகில் தொலைதொடர்பு துறையில் (wireless Technology) மிகப்பெரும் புரட்சியை உருவாக்கிய நிறுவனம். சாம்சுங், எல் ஜி, சோனி, நோக்கியா, ரிம், குவாவே, சில ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் என உலகின் அனைத்து முன்னணி மொபைல் நிறுவனங்களுக்கும், தங்களது சிப்செட்டை (மொபைலில் உள்ளே உள்ள பெரும்பாலான அனைத்து சிப்களும்) மென்பொருட்களோடு கொடுக்கும் நிறுவனம். உலகில் 80-85 சதவீதம் மார்க்கட்டை தன் வசம் வைத்துக் கொண்டு இயங்கும் நிறுவனம். பல அறிய கண்டிபிடுப்புகளை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள். உதாரணமாக CDMA தொழில் நுட்பத்தை கண்டுபிடித்த பெருமைக்குரியவர்கள். கல்லூரியை முடித்து வரும் IIT, NIT மாணவர்களுக்கு குறைந்த பட்சம் 12 லட்சம் சம்பளம் தருவது இவர்களின் வழக்கம்.

இப்படியான மிகப்பெரும் நிறுவனத்தில் மேலாளர் பொறுப்பில் உள்ள எனது நண்பர் வைத்திருக்கும் மொபைல் சோனி எரிக்சன். இது சோனி வெளியிட்ட  1500 ரூபாய்க்கான
சாதாரண மொபைல். இவரின் சம்பளம் ~ 30 லட்சம். டைரக்டர், சீனியர் டைரக்டர் என பொறுப்பில் இருக்கும் சிலர் எவ்வளவு சாதரணமாக இருகிறார்கள் என்பதை இங்கு வந்து பார்த்தால் தெரியும். அவர்கள் வைத்திருப்பது பீ.எம்.டபிள்யூ, பென்ச் கார்கள் அல்ல. நடுத்தர மக்கள் வைத்திருக்கும் i 10 போன்ற கார்கள் தான்.


அவர்களின் மொபைல் 10-20 ஆயிரத்திற்குள் தான் இருக்கும். அவர்கள் உடைகளும் மிகச் சாதரணாமாக இருக்கும். ஆனால் இவர்களின் சம்பளம் வருடத்திற்கு குறைந்தது 70-100 லட்சம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலானோர் அனைத்து நிறுவனங்களிலும் இப்படி சாதரணமாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு விலையுயர்ந்த மொபைல், brand shirt இல்லாமல் கார்பரேட்டில் இருக்க முடியவில்லை என்று இவர் சொல்வது மிகவும் பிற்போக்கான சிந்தனை. முற்றியும் நியாமற்றது.

2. எனக்கு சம்பளம் அதிகம் தரப்பட்டது அதனால் கார்பரேட்டில் இருந்து விலகினேன் என்றார்.அது மட்டுமே காரணம் எனும் பட்ச்சத்தில், ஒரு சமுதாக அக்கறை கொண்ட வாலிபனாக இருந்தால் ஒன்றை யோசித்திருக்கலாம். தனக்கு தேவையான பணம் போக மீதியை வைத்து சில ஏழை, அநாதை குழந்தைகளுக்கு கல்வி அறிவை தர முயர்ச்சித்திருக்கலாம். மற்ற சமுதாக மாற்றங்களுக்கு உதவி இருக்கலாம். இதனால் பயனடைவது அவர் மட்டுமல்ல. ஒரு நாடே பயனடைகிறது. 24 லட்சம் பணம் வாங்கும் இவர் நாட்டிற்கு பெருமளவில் வரி கட்ட வேண்டியிருக்கும். இவ்வாறு ஒவ்வொருவரும் செலுத்தும் வரிப்பணத்தில் தான் அரசு இயங்கிக் கொண்டிருப்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதை எதையுமே செய்யாமல் அவர் வெளியேறியது அவரின் சுயநலத்தைக் காட்டுகிறது.

3. என்னைச்சுற்றி என்னையறியாமல் பொருட்கள் சேருகிறது என்கிறார். இவரை அறியாமல் இவர் ஆசைபடாமல் எப்படி பொருட்கள் சேரும் என்பது எனக்கு சற்றும் விளங்கவில்லை. தேவையில்லாத பொருட்கள் சேருவதை அவரால் தடுக்க இயலவில்லை என்றால், அவரின் மனதை அவரால் ஒருங்கிணைத்து கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியவில்லை என்ற அவரின் தனிப்பட்ட இயலாமையையே காட்டுகிறதே தவிர கார்பரேட் நிறுவன சூழலால் இது நடப்பதில்லை.

4. எது வேண்டும் எது வேண்டாம் என்பதை யோசித்துப் பார்பதற்கே கார்பரேட் சூழலை விட்டு வெளியேறினால் மட்டுமே முடியும் என்று அவர் சொல்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால் "அடித்துச் செல்லும் ஆற்று நீரில் நான் விழுந்துவிட்டான், எனக்கு எப்படி தப்பிப்பது என்பதை இங்கே என்னால் யோசிக்க முடியாது. நான் கரைக்குப் போனபின் தான் யோசிக்கவே முடியும்" என்பது போல் மிகவும் பிற்போக்காக உள்ளது.

5. இப்போது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு விவசாயம் செய்கிறேன் என்று சொன்னார். விவசாயத்துறை நமது நாட்டில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இளைஞர்கள் பெருவாரியாக கால்பதிக்க வேண்டிய நலிவடைந்து வரும் மிகப்பெரும் தளம் இது. மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், நலிந்துவரும் விவசாயத்தை காப்பாற்றவே நான் கார்பரேட்டை விட்டு வந்தேன் என்று இவர் சொல்லி இருக்கும் பட்சத்தில், உங்களோடு சேந்து நானும் எழுந்து கை தட்டி வாழ்த்தி இருப்பேன். எவ்வளவு சம்பளம் என்று கேட்டபோது, மாதம் 75 ஆயிரம் ரூபாய் ஈட்ட முடியும் என்றார்.


இவர் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையோடு வெளியேறவில்லை. வெளியேறியது சம்பள மிகுதியால். அதனால் இங்கே எனக்கு ஒரு கேள்வி. இப்போது 75 ஆயிரம் சம்பாதிக்கும் இவர், அதே விவசாயத்தில் சில மதங்கள் கழித்து 2 லட்சம் சம்பளம் வரும் சூழல் உருவானால், சம்பள மிகுதி என்று விவசாயத்தையும் விட்டுவிட்டுப் போய்விடுவாரா .? இல்லை என்றால் என்ன நிச்சயம் .?

6. மேலும் இவரைப்போலவே தன்னுடன் பலர் கார்பரேட்டை விட்டு இதே காரணத்திற்க்காக வெளியேறிதாக கூறினார். ஒரு உதாரணத்திற்கு வைத்துக்கொள்வோம் இவர்கள் IIT, NIT போன்ற நிறுவனங்களில் படித்தவர்கள் என்று. அந்த கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு யார் செலவு செய்கிறார் என்றால் அரசாங்கம். அது மக்களின் வரிப்பணம். சில நூறு இடங்களே ஒதுக்கப்பட்ட இது போன்ற நிறுவனங்களில், ஏழை மக்களில் பணத்தில் படித்துவிட்டு அடிப்படையற்ற காரணங்களைச் சொல்லி வெளியேறுவதை எப்படி நியாப்படுத்த முடியும் ..? இது சமூக முன்னேற்றத்திற்கு மறைமுகமான பாதிப்பைத் தராதா ..?

இப்படி தனக்கு 
எது வேண்டும் வேண்டாம் என்பதைப் பற்றி தன்னிலை அறியாமல், அடிப்படையற்ற காரணங்களுடன் கார்பரேட் நிறுவனங்களை குறை கூறி வெளியேறிய இவரை, பல லட்சம் மக்கள் பார்க்கும் நீயா நானா நிகழ்ச்சியில், இதைப்பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாமல், நீங்கள் Wow, Super, You are a great Indian, You are great great great Indian, You set an example என புகழாரம் சூட்டி இளைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்தது மிகவும் வருத்ததிற்குரியது. அந்த காணொளி சமூக வலைதளங்களில் பல ஆயிரம் பகிர்வுகளோடு வலம் வருவது அதைவிட வருந்தத்தக்கது.


கார்பரேட் நிறுவனங்களை விட்டு வெளியேறியதற்கு மற்ற பலர்கூறிய காரணங்களை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இவர் கூறிய காரணங்களை அல்ல. அதோடு ஒவ்வொரு தனிமனிதனின் பொருளாதார நிலைதான் அந்த நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. உலக அரங்கில் நாட்டை முன் நிறுத்துகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இந்த கட்டுரையின் நோக்கம் தவறான உதாரணங்கள் இளைஞர்களை அடையக்கூடாது அவர்கள் அதைப் பின்பற்றி விடக்கூடாது என்பது மட்டுமே. ஒரு பிரபலத்தை விமர்சிக்க வேண்டும் என்னும் நோக்கில் எழுதப்படவில்லை. இதை நீங்கள் படிப்பீர்களா என்று தெரியவில்லை. அப்படி உங்களை இந்த கட்டுரை அடையும் பட்ச்சத்தில், இனியேனும் இது போன்ற உதாரணங்களை முன்னிறுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி ..!

அன்புடன்,
அகல்

52 comments:

  1. இன்னொரு கோணம்!வேரொரு பார்வை.! நல்லது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி முரளி சார் ..

      Delete
  2. // ஒரு சமுதாக அக்கறை கொண்ட வாலிபனாக இருந்தால் ஒன்றை யோசித்திருக்கலாம். தனக்கு தேவையான பணம் போக மீதியை வைத்து சில ஏழை, அநாதை குழந்தைகளுக்கு கல்வி அறிவை தர முயர்ச்சித்திருக்கலாம். மற்ற சமுதாக மாற்றங்களுக்கு உதவி இருக்கலாம். இதனால் பயனடைவது அவர் மட்டுமல்ல. ஒரு நாடே பயனடைகிறது//

    Completely agree with your point.

    ReplyDelete
    Replies
    1. Thank you so much for you visit and comment :)

      Delete
  3. Agreed boss...ரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.
    நான் "நீயா நானா" நிகழ்ச்சியை பார்கிறதை விட்டு ரொம்ப நாள் ஆச்சு. நீங்க குடுத்த கிளிபிங்க்ஸ் கூட பார்கல. அதுல பேசுற முக்க வாசி பேரு "டிவில வித்தியாசமா பேசுனா தான் பேரு கிடைக்கும்" என்ற என்னத்துல கண்டபடி, நடைமுறைக்கு ஒத்தே வராத கருத்தகளை சொல்லுவாங்க, பார்க்கிற எனக்கு தான் பிரஷர் ஏறும், அதனால மொத்தமா avoid பண்ணிடுறது.

    1) ஐடியில இருக்கிற ஒருத்தன் வருஷம் 15 லட்சம் சம்பளம் வாங்குனா, அதுல 30% வருமான வரி கட்டனும், கிட்ட தட்ட 1 லட்சம், 80c க்கு போனா கூட ரெண்டு லட்சம் அரசுக்கு போயிரும். ஆனா விவசாயத்துல வர வருமானத்துல ஒரு பைசா கூட வரி கட்ட வேண்டியது இல்ல. கவர்மென்ட்டை ஏமாத்த கூட இவர் விவசாயம் பண்ணுறேன்னு பொய் சொல்லி இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க ராஜ் கண்டிப்பா :)

      Delete
  4. Sir,
    i totally disappointed with u r views,as a realestate consultant and a civil engineer by proffession icame to this final conclusion with the saliries of IT industry flying day by day each and every agriculture fields become layouts and apartments in my surroundings such as sriperumbudur and chengalpet....
    allthat escalations comes in day to day life of comman man comesin the name of u r field .....hence atleast one person having changed to switchover is not correct...manymore to come in future...

    ReplyDelete
    Replies
    1. Hi Ramesh.. the point here is, not to destroy the agriculture as my family itself is agree based and India needs it badly... more People should come to the agree and I welcome it... But article is not relevant to the point you mare making. The article base is totally different.. Its about the reason what he was telling to quit IT which is not proper and can't be accepted.. That's what the article is based on... anyways many thanks for your visit and comment ..

      Delete
  5. சிந்திக்க வைத்துவிட்டிர்கள் தல

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே :)

      Delete
  6. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.கோபிநாத் எதற்காக அப்படி பாராட்டினார் என்று எனக்கும் புரியவில்லை.அதுவும் அந்த ஆங்கிலம் மிகவும் .....அவரின் கருத்துகள் பல இப்படித்தான் இருக்கின்றன.மேலும் பேசியவர்கள் பலரும் கருத்துகளை கோர்வையாகாவும்,தெளிவாகவும் எடுத்துரைக்கவில்லை.அல்லது எடிட் செய்யப்பட்டதா என்றும் தெரியவில்லை.
    ஒன்று செய்யுங்களேன்.எந்த எந்த கம்பெனிகளில் எந்த எந்த லெவலுக்கு எவ்வளவு சம்பளம் என்று ஒரு பதிவு போடுங்களேன்.கம்பெனி பெயர் தவிர்க்க வேண்டுமென்றால் தவிர்த்து செய்யங்கள். ஏனென்றால் உண்மை என்ன என்பது நிறைய பேருக்கு தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி நண்பரே.. அப்படியான ஒரு பதிவு போடுவது சற்று கடினம் தான்... ஏனென்றால் அனைத்து கம்பனிகளின் சம்பளத்தை அறிந்து கொள்வது கடினம் .. எதிர்காலத்தில் தேவைபட்டால் முயற்சிக்கிறேன் நண்பரே

      Delete
  7. FYI -- AM NOT AGAINST THE PERSON !!!

    we forgot common sense and logic and immediately get into emotional hype by such talks and videos without practical realization.

    did he disclose the following:

    what is his background?

    how much years was he in corporate?

    how much is his bank balance?

    still he says he gets 75K pm, so he still needs that amount of money or not?

    did he take any housing/vehicle loans?

    has he closed all his credit cards?

    is he married, does he have kids, are his parents dependent on him? etc.

    mostly all of us are emotionally weak to jump at these situations, kindly take time to think the logic behind all !!!

    let common sense and peace prevail !!!

    nice write up and bold plus excellent say ..... people are way too emotional.

    ReplyDelete
    Replies
    1. Ya agree Prasanna.. True.. You are questions are no where discussed and as you said we are emotional.., so missing to question our self.. Thanks a lot for your visit and comment ...

      Delete
  8. நீங்கள் குரிய கருத்து மிக சரியானது

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே ...

      Delete
    2. உங்க கருத்துக்கள் ....உங்களோட அறியாமைய காட்டுது .....நீங்க இதுவரைக்கும் எவ்வளோ வரி கட்டி இருக்குறீங்க ...நான் தெரிஞ்சுகலாமா? எவ்வளோ ஆதரவு இல்லாதவங்களுக்கு இருக்குறீங்க... கோபி அவர பாராட்டுனது தப்பே இல்ல....உங்க ஒரு கம்பெனில நடுக்குற விசயங்கள வைச்சு கார்பாராட்டே பொதுமை படுத்துறீங்க....கொஞ்சம் உங்க கம்பெனி விட்டு உங்க நண்பர்கள்... அப்புறம் வேற கம்பெனி வேல பாக்குறவங்க கிட்ட ...கேட்டு பாருகுங்க....இன்னும் டவுட் இருந்துச்சின்ன..அன்பே சிவம், தமிழ் M . A படம் பாருங்க..உங்களோட உலகம் புரியும்..... அயல்நாட்டு கம்பனிக்கு வேல பாத்து அடிமையா இருக்குறத ரொம்ப பெருமையா இருக்குறீங்க.....

      Delete
    3. உண்மை கசக்கும் ரமேஷ்.. ஒருவர் சொல்லிவிட்டால் அவர் எப்போதும் சரியாகத்தான் சொல்வர் என அதன் பின்னியை ஆராயாமல் ஆட்டுமந்தைக் கூட்டமாக நாம் இருப்பதாதல் நாடு இந்த நிலையில் இருக்கிறது.. அரசியல் வாதிகள் பெரும்பாலும் ஏமாற்றுகிறார்கள்.. நான் மிகச் சாதரணமான மனிதன் நண்பரே.. பெருமை பீத்திக்க என்னிடம் ஒன்றும் இல்லை.. கருத்து கூறியதற்கு மிக்க நன்றி...

      Delete
    4. //அன்பே சிவம், தமிழ் M . A படம் பாருங்க..///
      எதுக்குங்க படம் பார்த்து, உலக அறிவை வளர்த்துக்கனும், உங்களுக்கு சொந்த அறிவு இல்லையா. 25 வருஷம் உங்க சொந்த வாழ்கை அனுபவத்தில் நீங்க கத்துகிட்ட அறிவை விடவா 2 1/2 மணி நேர படத்துல கத்துக்க போறீங்க ????
      அது என்னாங்க, அயல்நாட்டுக்கு சம்பளத்துக்கு வேலை செஞ்சா மட்டும் அடிமைன்னு சொல்லுறீங்க, இந்தியன் கம்பெனிக்கு வேலை செஞ்சா அவன் அடிமை இல்லையா.
      நீங்களே ஒரு அயல்நாட்டு ஆளோட படத்தை தான் உங்க ப்ரோபைல்ல வச்சு இருக்கீங்க. அப்புறம் என்ன அயல்நாட்டு அடிமை...???? காமெடி பண்ணாதீங்க பாஸ்....
      //நீங்க இதுவரைக்கும் எவ்வளோ வரி கட்டி இருக்குறீங்க ...நான் தெரிஞ்சுகலாமா? எவ்வளோ ஆதரவு இல்லாதவங்களுக்கு இருக்குறீங்க...///
      இதே கேள்வியை அவர் உங்களை பார்த்து கேட்டா என்ன பண்ணுவீங்க ????

      Delete
    5. அதெல்லாம் நாம நல்லது சொன்னாலும் கேக்க மாட்டங்க ராஜ்.. டிவில ஒருத்தர் கோட்டு போட்டு தப்பா சொன்னாலும் கைதூக்க ஆளு நெறைய பேரு இருக்காங்க.. ஒருவேள நாமளும் அதே மாதிரி டிவில வந்து சொன்னதான் நம்புவான்களோ என்னவோ :) ..

      Delete
  9. thought provoking write up...oru vishayatha ithana angle ah yosika mudiyuma!!!!

    ReplyDelete
    Replies
    1. try pannen :) Thanks for your comment shakthi ..

      Delete
  10. Another view of you., which is superb.,rightly said in some areas.,

    but remember vivasaayam pannina, it helps our country wealth., the land he is cultivating will be flourished.
    And also, newcomers to agriculture is almost welcomed, where peoples selling their agriculture land for their life.,

    the guy is totally pressurized,so he left the job. it seems like that, he may fears more salary can further add pains
    to his personal life(more work load), but inturn he says i dont want extra money like that.,irukkalam.,.
    you cant say, that no corporate is pressurizing its employees. we all know, we ran for money.
    pressure ah eppadi deal panrathu nu rathu than matter here.,
    eventhough corporates arrange many recreational activities(why because to enhance their productivity)., you cant deny it.,
    He choose a good path, which will directly benefit india,. eventhough he may sell to other countries,.,
    he is spreading our fame and name and just selling things like crop and related items.,.
    but what is happening here., guys from JJ., NITT and everyone around the india, flying overseas for job
    and simply complaining that india is not good and so on.,

    IIT NIT maanavargal lam 12 lakhs sambalam koduthu kutitu pora company nala enna labam inga.,
    our talents get wasted for some country's wealth., and many are settling in foriegn country itself.,
    U can tell that, we are earning money there and investing here and paying taxes correctly than politicians.
    Is this what for IIT & NIT's made., Inga padicha ariva, why cant you use here.
    Stop complaining about politicians and no jobs here and lot of social injustices.
    Please tell me. you went to america just to pay indian taxes??.,
    no truth is because of salary and status which you will get in india (US return).,and ofcourse one's
    family situation., to upgrade status., (i appreciate as you were a good son to your parents and brother to your siblings)

    but why dont you apply your engineering knowledge here., kashtam than., konjam kashtam than india la neenga jeikanumna.,
    but ellamae ippadi veliya poitinga na., yaaru india la vellai paakurathu.,
    i'm not against those who go abroad /work in foriegn to gain knowledge and implement in india for our country wealth and health
    as an indian citizen.,

    sorry bro., i just said what i thought.,. i just shared my view.,

    ReplyDelete
    Replies
    1. Bro thanks for your big comment.. Sorry.. you have to note one think I am working in India only.. Also as i said in my article // விவசாயத்துறை நமது நாட்டில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இளைஞர்கள் பெருவாரியாக கால்பதிக்க வேண்டிய நலிவடைந்து வரும் மிகப்பெரும் தளம் இது. மனப்பூர்வமாக வரவேற்கிறேன். // we are not against agree . My point here is, whatever reasons he was telling to quit the job is not acceptable :) ... thanks a lot bro..

      Delete
  11. 100 வீதம் உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்... அதே நேரம் கனேஷ் சாரிடன் ராஜ் சார் கேட்ட கேள்விகளுக்கும் உடன் படுகிறேன்...

    விஜய் டீவி அன்மையில் நடத்திய சுப்பர் சிங்கர்ஸ் போட்டியிலும் அளவுக்கு மீறி சில போட்டியாளர்களை புகழ்ந்தார்கள்...
    இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் போட்டியைக் குழந்தைகள் மத்தியில் நடத்தும் போது அங்கே எவ்வாறு தங்களுடைய அங்க அசைவுகள் மற்றும் வார்த்தை பிரயோகங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதனை இதனை நடுவர்களுக்கும் சொல்கிறேன்.

    எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான உள்ளம் கொண்டவர்கள் அல்ல சில குழந்தைகள் நடுவர்களின் பாராட்டும் செயற்பாடுகள் குறித்து ஆபத்தான விடயங்களைச் செய்துவிட்டால்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பா.. எதார்த்தத்தை விட்டுவிட்டு அளவுக்கு அதிகமாக புகழ்வது விஜய் டிவி நிகழ்சிகளில் பெரும்பாலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.. உங்க கருத்துக்கு மிக்க நன்றி நண்பா ..

      Delete
  12. சரியான விளக்கம்பாஸ்...பேஸ்புக்கில் நண்பர்களுடன் பெரிய விவாதமே நடந்தது...உங்கள் கருத்து சரியானதே

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்திற்கும் ரொம்ப நன்றி பாஸ் :)..

      Delete
  13. நான் கூட முதலில் கௌதமை புகழ்ந்தேன்! உங்கள் வாதங்களை பார்க்கும் போது அவர் செய்தது சரியில்லை என்றே தோன்றுகிறது! நல்லதொரு பகிர்வு! நன்றி

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே ...

      Delete
  14. //1) ஐடியில இருக்கிற ஒருத்தன் வருஷம் 15 லட்சம் சம்பளம் வாங்குனா, அதுல 30% வருமான வரி கட்டனும், கிட்ட தட்ட 1 லட்சம், 80c க்கு போனா கூட ரெண்டு லட்சம் அரசுக்கு போயிரும். ஆனா விவசாயத்துல வர வருமானத்துல ஒரு பைசா கூட வரி கட்ட வேண்டியது இல்ல. கவர்மென்ட்டை ஏமாத்த கூட இவர் விவசாயம் பண்ணுறேன்னு பொய் சொல்லி இருக்கலாம்.//

    அவர் வரி ஏய்ப்பு செய்வதற்காக தான் விவசாயம் செய்ய சென்றுவிட்டேன் என்று கூறினால் அவர் செய்தது சரியே . குழந்தைகள் சாப்பிடும் சாக்லெட் விளம்பரம்வரை நடிக்கும் அமிதாபச்சன் தான் விவசாயி என்று பச்சை பொய் சொல்லி வரியேய்ப்பு செய்வதை அரசு ஒப்புக்கொள்ளும் போது ஒருவேலை இவர் வரி ஏய்ப்பு செய்தால் அது சரியே.

    அதே சமயம் அவர் விவசாயத்தில் மாதம் 75000 ரூபாய் சம்பாதிப்பதாக சொல்வது பொய் அவர் என்ன விளைச்சல் செய்கிறார் என்று கூறவில்லை ஒரு வேலை கஞ்சா பயிரிட்டிருப்பாரோ.

    ReplyDelete
    Replies
    1. // அதே சமயம் அவர் விவசாயத்தில் மாதம் 75000 ரூபாய் சம்பாதிப்பதாக சொல்வது பொய் அவர் என்ன விளைச்சல் செய்கிறார் என்று கூறவில்லை ஒரு வேலை கஞ்சா பயிரிட்டிருப்பாரோ. // :) :)

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நண்பா ...

      Delete
  15. நீங்கள் சொல்வது மிகவும் சரியானதே.
    கார்பரேட்டில் வேலை செய்தாலும், நமக்குத் தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டியதில்லை.

    எனக்குத் தெரிந்த ஒருவர் சாம்சங் கேலக்சி போன் 40,000 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆனால் அதில் புகைப்படம் எடுப்பதில்லை, 3ஜி கட்டுபடியாகவில்லை என்று இணைய உபயோகமும் இல்லை. அவருக்கு போனில் பாடல்கள் கேட்கும் பழக்கமும் இல்லை.

    அப்புறம் எதுக்குய்யா இந்த போனை வாங்கினே என்று கேட்டால், ஸ்டேட்டசுக்கு என்கிறார். இது போன்ற பழக்கம் என்றுமே ஆபத்தானது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் நமக்கு எது வேண்டும் எது வேண்டாம் என சரியாக உணர்ந்திருக்கும் பட்சத்தில் இதைப் போன்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ள வேண்டியதில்லை.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் நண்பரே..

      Delete
  16. வணக்கம் நண்பா. நல்ல கட்டுரை.. நானும் திருச்சி மாவட்டம் தான்.... ஜே ஜே கல்லூரியில் முதுநிலை கல்வியில் பட்டம் பெற்றுள்ளேன்..

    அமர்க்களம் கருத்துக்களம்.
    http://www.amarkkalam.net/

    ReplyDelete
    Replies
    1. அப்படியா நண்பரே நல்லது... உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..

      Delete
  17. உங்கள் கருத்து முற்றிலும் சரியானதே. தொலைக்காட்சி நிகழ்ச்சியை பொறுத்த வரையில் எடுக்கப்பட்ட முடிவு சரியா தவறா என்பதை விட, அதை எவ்வளவு உணர்ச்சிகரமாக சொல்கிறார் என்பதே முக்கியமாகிவிட்டது. அடுக்கு மொழியில் அனர்த்தமாக பேசும் ஒருவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், பாமர நடையில் எதார்த்தத்தை பேசும் ஒருவருக்கு கொடுக்கபடுவதில்லை. எதையும் பகுத்தறியாமல், ஒளிபரப்பப்படும் சிறிது நேரத்தில் உணர்ச்சிவயப்படும் விசிலடிச்சான் குஞ்சுகளே இது போன்ற ரியாலிட்டி ஷோக்களின் வெற்றிக்கு காரணம். இங்கு கருத்துக்கள் விவாதிக்கப்படுகிறது என்று சொல்வதை விட கோபிநாத் மற்றும் குழுவின் கருத்துக்கள் நம் மீது திணிக்கப்படுகிறது என்பதே உண்மை.

    ReplyDelete
    Replies
    1. // இங்கு கருத்துக்கள் விவாதிக்கப்படுகிறது என்று சொல்வதை விட கோபிநாத் மற்றும் குழுவின் கருத்துக்கள் நம் மீது திணிக்கப்படுகிறது என்பதே உண்மை. //உண்மை வழிமொழிகிறேன் நண்பரே.. தங்கள் கருத்திற்கு நன்றிகள் தல..

      Delete
  18. அனைவரும் நீயா நானா episod ஐ முழுமையாக பார்த்து விடுமாறு வேண்டுகிறேன். அப்போது இந்த தலைப்பை பற்றி மேலும் தெளிவு பிறக்கும்...முதலில் நான் கௌதமின் கருத்தை முழுமையாக ஆதரிக்க வில்லை. அவர் கூறியது போல கார்பரேட் கம்பெனிகளில் அனைவரும் விலை உயர்ந்த பொருட்களை வைத்திருந்தால் தான் மதிகிறார்கள் என்பது - ஆடம்பர பொருட்களின் மீது உள்ள தனிநபர் மோகமே தவிர கார்பரேட் கம்பெனியில் நிர்பந்திக்கப்படும் விஷயம் அல்ல, அது தற்போது உலகில் அணைத்து இளைங்கர்களாலும் விரும்பப்படும் மோகம். இன்று ஒரு பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கூட தங்கள் பெற்றோர்களை நிர்பந்தித்து பெரும் பொருட்கள் தானே அவை? ஆகா, fancy gadgets என்பது தனி மனித ஆசை பொறுத்த விஷயம். இங்கு நான் கௌதமின் கருத்தை மறுக்கிறேன். ஆனால் தன்னுடன் வேளை பார்பவர்கள் தன்னை விட நவீன பொருட்களை வைதிருகிரார்களே என்ற எண்ணம் சிலருக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாகலாம் அதன் காரணமாக தானும் அந்த பொருட்களை வாங்க உந்தப்படலாம் என்பது நினைவில் கொள்ள வேண்டிய மற்றும் ஒரு கோணம்!

    நம்மில் எத்தனை பேர் வாங்கும் சம்பளத்தை மிச்சப்படுத்தி ஏழை குழந்தைகளுக்கு செலவிட்டு இருக்கிறோம்?

    என்னால் பெரிதாக சேமிக்க முடியவில்லை! ஒவ்வொரு சாதாரண மனிதனும் தனக்கு கிடைக்கும் வருமானத்தை முதலில் தன் ஆசையை பூர்த்திசெய்து கொள்ளத்தான் துடிக்கிறான், அதன் விளைவுதான், அந்த episod ல் சொல்லப்பட்டதை போல buying inflated properties! ஆறு லட்சம் கூட பொறாத ஒரு அபார்ட்மெண்ட்டை அறுபது லட்சம் ருபாய் கொடுத்து வாங்கி விட்டு, தன் பொன்னான இளமை காலத்தில் பத்து அல்லது இருபது ஆண்டுகள் அந்த கடனை கட்டுவதற்காக, தன் வேலையை தக்கவைத்துகொள்ள, எத்தனை போராட்டங்கள்? எத்தனை இழப்புகள்?
    சரி போராட்டம் தான் வாழ்க்கை என்கிறீர்களா? ஒப்புக்கொள்கிறேன்! ஆனால் எதற்காக, யாருக்காக போராடுகிறோம் என்பது மிக முக்கியம். உங்களுடைய கஷ்டம், commitment உங்களை சேர்ந்த மனிதர்களின், உங்களின் ஆனந்தமான வாழ்க்கைகாக இருக்க வேண்டும் . போலியான பொருட்களின் மீது உள்ள மோகத்திற்காக இருந்தால் அது - என்ன?
    ஒரு சிறு கதை என் நினைவுக்கு வருகிறது, ஒரு நடுத்தர வர்கத்து நண்பர், தன் மனைவியை அழைத்துக்கொண்டு சுற்றுலாவுக்காக ஊட்டி செல்கிறார், கூட்டத்தில் அடித்து பிடித்து தனக்கும் தன் மனைவிக்கும் ஜன்னல் ஓரமாக இடம் பிடித்து உட்காருகிறார். ஊட்டி செல்லும் வழியில் இயற்க்கை காட்சிகளை ரசிக்கலாம் என்பது அவரது ஆசை (நியாயமான ஆசை). மேட்டு பாளையத்தில் டிக்கெட் எடுக்கும் பொழுது கூட்டமாக இருந்ததனால் நடத்துனர் சில்லறை பாக்கியை பின்பு தருவதாக கூறிவிட்டு சென்று விடுகிறார். நம் நண்பரின் கவனம் முழுவதும், அந்த பயணம் முழுவதும் வரவேண்டிய சில்லறை மீதே இருந்தது, அவர் தன் பயணத்தின் குறிக்கோளையே தொலைத்து விட்டார்!
    அது போல நாம் அடைய விரும்புவது என்ன அதற்காக நாம் இழப்பது என்ன என்ற புரிதல் நமக்கு தேவை!

    ஆக நாம் இப்படி வாருமானதிற்கு அதிகமாக ஆசைப்பட்டு பொருட்களை வாங்க தொடங்கும்போது (கார்பரேட் இருக்கும் தைரியத்தில்) , சிக்கல் ஆரம்பம் ஆகிறது. பின், எப்போது அடுத்த சம்பள உயர்வு வரும், பதவி உயர்வு வரும் என்று ஏங்கி கலையாத நாள் இருக்காது. ஏனென்றால் அடுத்து வர இருக்கும் நான்கு அல்லது ஐந்து increment களுக்கு நம்மிடம் செலவு காத்திருக்குமே?? இதே மனப்பாங்கு தானே கௌதமுக்கும் இருந்திருகிறது?

    ஆனால் அவர் விவசாயம் செய்து திடீரென்று எப்படி 75000 சம்பாதிக்கிறார் என்பது எனக்கு புரியவில்லை, ஒன்று எனக்கு விவசாயம் தெரியாது, மற்றொன்று பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்பவர்களால் செய்ய முடியாததை, இவர் IT ல இருந்து விலகி வந்து எவ்வாறு செய்ய முடிந்தது என்ற கேள்வி? நாம் அதற்குள் போக முடியாது ஏனென்றால் அந்த நபரின் பிண்ணனி நமக்கு தெரியாது.
    ஆனால் அவர் கூறியதில் இருந்து, தான் செய்வது மற்ற விவசாயிகளுக்கு ஒரு model ஆகா அமையும், இந்த தொழிலை செய்பவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதாக இருக்கும் என்ற கருத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
    இது எவ்வாறு சாத்தியம் என்பது எனக்கு தெரியாது அதை கௌதமிடம் தான் கேட்க்க வேண்டும் . ஆனால் அவர் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அது மிக மிக சிறந்த விஷயம் என்பது தான் என் கருத்து.
    ஆக இதில் இரண்டு விஷயம், ஒன்று, நாம் IT ல் இருந்து கொண்டே ஆசைக்கு அடிமை ஆகாமல், சம்பாதிக்கும் பணத்தை சேமித்து (முடிந்தால் ) பிறருக்கு உதவலாம்!
    அல்லது இன்னும் ஒரு படி மேலே போய் ,
    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
    தொழு துண்டு பிதொடர்வர்.
    என்று 12000 மோ, 75000 மோ திறமைக்கு ஏற்றாற்போல் சம்பாதித்து தன் சொந்த மண்ணில், யாருக்கும் அஞ்சாது, பிறருக்கும் உணவளித்து வாழ்வாங்கு வாழலாம் :)

    ReplyDelete
    Replies
    1. நாம இங்க சொல்ல வரதெல்லாம், IT மட்டுமல்ல மத்த எந்த துறையாக இருந்தாலும் சரியான தேவைகளுடன் வாழ கற்றுக்கொள்வது ஒரு தனிமனிதனின் மனநிலையைப் பொறுத்ததே தவிர அதைப் பொதுப்படையக்கா முடியாது.. உங்களது ஆழமான கருத்திற்கு மிக்க நன்றி பாஸ்..

      Delete
  19. Moreover, // My point here is, whatever reasons he was telling to quit the job is not acceptable //
    I feel, sometimes it requires more courage to let it go something (annoying thing), to get or do a more soul satisfying thing. As if the common man in my story above, could have let the change go and enjoyed the journey!! Life is a journey indeed :)
    Somewhere, some one has to come up with a new idea, let's encourage them!

    ReplyDelete
    Replies
    1. Sure boss... We should welcome and encourage our youngsters to bring the agree back.. But my only concern was, if he is not able to control himself, he can't blame others (corporate sector) .. Thank you for your visit and comment :)

      Delete
  20. very true! I was not comfortable with the way gopi was praising him..but I couldnt find the reason..the above reasons have made me clear...unless we have very good knowledge in agriculture , we will not be able to make such huge money in a short time..it would be great if he could share the knowledge to his fellow farmers.. evlo peru mazhai illama labam paakama suicide panikaranga!!

    ReplyDelete
    Replies
    1. // unless we have very good knowledge in agriculture , we will not be able to make such huge money in a short time // completely agree. farming is not so easy to earn. It has lot of dependencies.

      As I said in the article , my family is also based on farming. I know hos much we can earn. So, I am not able to get convinced with the amount he is coating to earn per month.. It is not at all possible. I hope he is not doing direct farming. Because, in the show he mentioned that "its been a model developed for a people who is planning to leave agriculture". Whole Tamilnadu will appreciate him if he can reveal the model.

      One thing to notice from the show is - he hasn't point the valid reasons to quit the job and most of the people are not talking the reality on the subject they are dealing with. He is one out of them... I hope.

      Thanks a lot for your visit and comment ....

      Delete
  21. ஒரு முக்கியமான கருத்தை இரு தரப்பினருமே சொல்ல தவறிவிட்டனர்
    அதுதான் இது.

    ஒரு சிலருக்கு வேலை பிடிக்கும் எப்படிப்பட்ட கடினமான வேலையும் எளிதில் செய்துவிட்டு வெறுமெனவே இருப்பார். அவர்களுக்கு கார்பரேட் கம்பெனிகள்தான் சொர்க்கம். கார்பரேட் கம்பெனிகளும் அவர்களைத்தான் விரும்புகிறது. ஒருசிலர் மிகவும் கடினமாக உணர்ந்து வேலைகளை முடிக்கவே அல்லல் படுவர். அவர்கள் எல்லாம் படும் பாட்டை காணவே சகிக்காது. அவர்கள் வெளியேற மறைமுகமாக நிர்ப்பந்திக்க படுவர். வேலை செய்ய பிடித்தவர்களுக்கும் வேலையை கடினமாக உணர்பவர்களுக்கும் இடையான யுத்தம் அனைத்து கம்பெனிகளிலும் உண்டு. அந்த யுத்த வெப்பத்தில் கார்பரேட் முதலாளிகள் குளிர்காய்கிறார்கள்.

    ReplyDelete
  22. i too felt the same... that gopinath putting jalra for over scene guys...

    ReplyDelete
  23. நண்பா அகல் தங்களுடைய மாற்றுகோண பார்வை மிகவும் நன்று.நீங்க சொன்ன ஒரு சில கருத்துகளை நான் ஏற்று கொள்கிறான் உடன்படுகிறேன்.பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பது பார்க்க கூடாதது என்பது அவரவர்களின் தனிப்பட்ட எண்ணம் மற்றும் தனிப்பட்ட அவர்களின் திறமையும் கூட .ஆனால் நீங்கள் முற்றிலுமாக கௌதமை குறை கூறுவதில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை.எனக்கும் கௌதமின் குடும்ப பின்புலம் பற்றி தெரியது.ஆனால் அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை நான் கண்கூடாக பார்த்து கொண்டிருக்கிறேன்.நீங்கள் எந்த ஊர் என்று எனக்கு தெரியாது.எனினும் நீங்கள் சென்னை வாசியாக இருந்தாலோ அல்லது சென்னைக்கு வந்தாலோ "பாக்கம்" என்ற ஊருக்கு நிச்சயம் செல்ல வேண்டும்.அங்குதான் கௌதம் மற்றும் அவர்களின் குழுவின் விவசாய பண்ணை அமைதுள்ளது.அவர்கள் அங்கு சற்றும் லாப நோக்கம் இல்லாமல் வேலை பார்ப்பது அங்கு சென்று பார்த்தல் மட்டுமே புரியும்.பாக்கம் என்ற ஊர் ஆவடிகும் திருநின்றஊருக்கும் நடுவே உள்ளது.மேலும் தகவலுக்கு இந்த எண்ணில் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் :9884962533

    ReplyDelete
    Replies
    1. Karuththirkku nandrigal nanbare.... Naan avarai kuraikoora villai.. Corporate tai vittu veliyera avarkooriya kaaranangal sariyalla enbathu mattume enathu paarvai..... nandri...

      Delete
  24. nice view...... when i see that program,i also asked so many questions like this....இயலாதவர்களுக்கு உதவாமல் அவன் இயலாமையை காட்டி விட்டான்

    ReplyDelete
  25. Oru maarupatta konam... Nenga sonna visayangalukku mulusa nan udan padalenalum nenga sollure vidham yenaku pudichirukku.... Gowtham sonna karanathai innum neraiya koonathil yoosikalam'nu thonudhu nanbare...

    ReplyDelete