அடடா தமிழா ஆகாது இந்தப் பிழை !

கண்ணகியின் கற்பை
காவியமாக்கிய தமிழே
ஆயிரம் கண்ணகிகள் மார்பு
அறுக்கப்பட்டதை அறியாயோ - கற்பு
சிதைக்கப்பட்டது தெரியாதோ ?

அண்ணன் தம்பி அடிசுகிட்டா
அடுத்தவன் அடிச்சா வந்துருவான்
நமக்குள் அண்ணன் தம்பி
பகையுமில்ல - நீ
அடித்தவன் அடிச்சு வரவுமில்ல

சிலர் செலவுக்காக பணம்வேண்டி
சில்லறைய அடகுவைப்பன் - நீ
பணத்துக்கு பலியாகி, தமிழர்
பிணத்தையே அடகுவச்ச

செஞ்சோல வீடு இன்று
சொல்லிச் சிரிக்கிதையா
உன்நிலை கண்டு - இங்கே
சிதறிச் செத்த உடல்
எழுந்து அழுகுதையா

அடடா தமிழா
ஆகாது இந்தப் பிழை
நீ இறந்தாலும் மறக்காதே
யாம் சொல்லும் இந்தச் சொல்லை

சுதந்திர பூமி இன்று 
சுடுகாடாய் ஆனதையா
சுயநலத்தால்தமிழ்
பார்த்துக் கொண்டே போனதையா

முள்ளிவாய்க்கால் தமிழன்
முழுதும் முடியவில்ல - அவன்
எப்படியும் எழுவான்
தேவைப்படும் நேரத்துல 

ஏனா நம்ம ...


வேப்ப மரத்துக் குயிலுக்கு
வீடு ஒன்னு வேணும்
இந்த பாவப்பட்ட தமிழனுக்கு
நாடு ஒன்னு வேணும் !

ஆழமான வடுவுடன், 
அகல் 

7 comments: Leave Your Comments

 1. அடுத்தவன் அடிச்சா கூட பரவால அண்ணனும் சேர்ந்து அடிக்கறான் எங்கள அந்நியனா வேறா பாக்கறான்...இருந்தும் விடமாட்டோம்..

  //முள்ளிவாய்க்கால் தமிழன்
  முழுதும் முடியவில்ல - அவன்
  எப்படியும் எழுவான்
  தேவைப்படும் நேரத்துல //

  உண்மை....விழுந்த விதைகள் எல்லாம் மீண்டும் மீண்டும் முளைக்கும் ஈழக் கனவு ஓர்நாள் பலிக்கும்..

  ReplyDelete
 2. உண்மை இது ஒருநாளேனும் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு ...

  ReplyDelete
 3. ரணங்கள் வடுக்கள் தாண்டி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி பாஸ் ...

   Delete
 4. //வேப்ப மரத்துக் குயிலுக்கு
  வீடு ஒன்னு வேணும்
  இந்த பாவப்பட்ட தமிழனுக்கு
  நாடு ஒன்னு வேணும்//

  வேணும் வேணும்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றிகள் பிரேம்...

   Delete
 5. தமிழனுக்கு தனி நாடு வேண்டும் ,அந்நாடு தரணியை ஆள வேண்டும்

  ReplyDelete